99% தமிழர்கள் உண்மையான அகதிகளே

.
புகலிடம் நாடிவரும் 99% தமிழர்கள் உண்மையான அகதிகளே-  பயங்கரவாத விவகார நிபுணர் கூறுகிறார்

புகலிடம் நாடிவரும் இலங்கைத் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் உண்மையான அகதிகளே எனவும் அவர்கள் பயங்கரவாதிகளின் அனுதாபிகள் என்பது இலங்கை அரசாங்கத்தின் கட்டுக்கதை எனவும் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பயங்கரவாத விவகார நிபுணர் பேராசிரியர் கிளைவ் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.

வியாழக்கிழமை, 15 ஜூலை வெளியான அவுஸ்திரேலியாவின் ஏஜ் பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

2008 ஆம் ஆண்டிலிருந்த அவுஸ்திரேலியாவுக்கு வந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட இலங்கைத் தமிழர்களில் அரைவாசிக்கும் மேற்பட்டோர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அங்கத்தவர்கள் அல்லது அவர்களின் அனுதாபிகள் என எனக் கூறப்பட்டமை தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

உண்மையாகவே கொலைகளில் சம்பந்தப்படுவது ஒரு விடயம். ஆனால் ஒரே பகுதியில் வசிப்பதோ அல்லது சிறிது பணத்தை அழுத்தம் காரணமாக வழங்குவதோ வேறொரு விடயம் என பேராசிரியர் வி;ல்லியம்ஸ்; தெரிவித்துள்ளார்.

எவரினதும் கைகளில் இரத்தக்கறை இருந்தால் அவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு வருவதில் எனக்கு ஆட்சேபணை உள்ளது. ஆனால் இங்கு (அவுஸ்திரேலியாவுக்கு) வரும் 99 சதவீதமானவர்கள் (தமிழர்கள்) அதனுடன் தொடர்பிருப்பதற்கான வாய்ப்புகளே உள்ளன என அவர் கூறியுள்ளார்.

புதன் கிழமை வெளியான தி அவுஸ்திரேலியன் பத்திரிகையில் பாதுகாப்பு ஆய்வாளரும் பட்டப்பின்படிப்பு மாணவருமான சேர்ஜி டி சில்வா ரணசிங்க என்பவர், இலங்கையிலிருந்து புகலிடம் கோரி அவுஸ்திரேலியாவுக்கு வருபவர்களில் 25-50 சதவீதமானோர் பயங்கரவாதிகள் அல்லது அவர்களின் அனுதாபிகள் எனக் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: