காட்சிகள் பார்வையில் மட்டுமல்ல. செ.பாஸ்கரன்

.

ஒரு இளம் தம்பதிகள் இரண்டாவது அடுக்கு மாடியில் குடியிருந்தார்கள். நீளமான பல்கணியை கொண்ட அந்த குடியிருப்பில் இருந்து வெளியே பார்த்தால் பக்கத்து வீட்டுவளவின் பின்புறம் நன்றாகத் தெரியும். பச்சைக்கம்பளம் விரித்ததுபோலிருக்கும் புற்தரையின் நடுவில் துணிகள் காயப்போடும் வட்டமான கம்பி நிமிர்து நிற்கும். வார விடுமுறை நாட்களில் இளம் மனைவி நித்திரையால் எழுந்து வந்து பல்கணியால் பார்க்கும்போது சொல்லிவைத்தாற் போல் பக்கத்து வீட்டின் வயேதிப மாது தனது துணிகளை துவைத்து இந்தக்கம்பில் விரித்துக் காயப்போட்டுக்கொண்டிருப்பாள்.

இவள் அந்த துணிகளை நன்றாக உற்றுப்பார்த்து விட்டு இந்தக்கிழவிக்கு ஒழுங்கா துணிதோய்க்கத் தெரியாது ஊத்தையெல்லாம் அப்பிடியே இருக்க கொண்டுவந்து காயப்போடுது ஒழுங்கான சோப் போடுறதில்லையாக்கும் என்று கூறிய வண்ணம் கணவனைப்பார்பாள். கணவன் எதுவும் சொல்லாமல் தன்பாட்டில் இருப்பான். அது இவளுக்கு இன்னும் சற்று எரிச்சலைக் கொடுக்கும்.

மறு வாரமும் வாரஇறுதி நாளில் இவள் பக்கத்து வளவைப்பார்ப்பதும் வயதோதிப மாது துணிகாயப்போடுவதும் அதில் அழுக்குகள் போகாமல் இருப்பதும் இவள் வயோதிப மாதில் குறை சொல்வதும் தொடர்ந்தது. அதுவே சில வாரங்கள் தொடர்த வண்ணம் இருந்தது.

ஒரு நாள் வார இறுதியில் வழமைபோல் வயோதிப மாது உடைகளை காயப்போட்டு கொண்டு நிற்கும்போது இளம் கணவன் எழுந்து சென்று பல்கணியின் கண்ணாடியின் இரண்டுபக்கங்களையும்

நன்றாக துடைத்து விட்டு வந்து அமர்திருந்து தனது அலுவல்களைப் பார்துக் கொண்டிருந்தான். நித்திரையால் எழுந்து வந்த மனைவி முதல் வேலையாக பக்கத்து வழவைப்பார்த்தாள். உடைகள் காயப்போடப்பட்டிருந்தது. உற்றுப்பார்த்தாள் எந்தவித அழுக்கும் இல்லாமல் இருந்ததைக் கண்டு ஆனந்தமாக கூறினாள் கிழவி இண்டைக்குத்தான் வடிவா தோய்த்திருக்கு. சுpல வேளை நல்லசோப் மாத்திப்போட்டுதுபோல. சொல்லி விட்டு வழமைபோல கணவனைப்பார்த்தாள். கணவனும் வழமைபோல தன்பாட்டில் இருந்து ஏதோ செய்து கொண்டிருந்தான் மனம் மட்டும் கூறியது காட்சிகள் பார்வையில் மட்டுமல்ல.

ஆங்கிலத்தில் படித்ததை தமிழில் தந்தது
செ.பாஸ்கரன்

3 comments:

kirrukan said...

[quote]கணவனும் வழமைபோல தன்பாட்டில் இருந்து ஏதோ செய்து கொண்டிருந்தான்[/quote]

நல்ல கணவனாக இருக்கிறார்,உண்மையை கண்டுபிடித்த பின்பும் மனிசியை திட்டவில்லை பாருங்கோ ,தானுண்டு தன்னுடைய சோலி உண்டு என்று இருந்திருக்கிறார் பாருங்கோ.......

இணப்புக்கு நன்றிகள்

Anonymous said...

ஹலோ கிறுக்கன் நல்லாதான் சொல்லுறீர். கண்ணாடியில இருக்கிற ஊத்தையையே சரியா பார்க்கத்தெரியாம பக்கத்து விட்டுக்காரிய திட்டுற மனிசி மனிசன சும்மா விடமெண்டே நினை;கிறீர் மனிசன் மூச்சுவிடாம இருக்கிற காரணம் அதுதான் உங்க எப்பிடி?

Ramesh

kirrukan said...

[quote] உங்க எப்பிடி?[/quote]

Ramesh

இங்க மதுரை மீனாட்சி யுங்கோ ரமேஸ்