சம்சுங் இன் ' கலெக்சி டெப் '

*ஏஸரில் கைகோர்க்கும் கூகுள் மற்றும் மைக்ரோசொப்ட்
*சம்சுங்  இன் ' கலெக்சி டெப் '

பிரபல இலத்திரனியல் உபகரண மற்றும் கையடக்கத்தொலைபேசி நிறுவனமான ' சம்சுங் ' புதிய டெப்லட் கணனியொன்றை வெளியிடவுள்ளது.

அந் நிறுவனம் தான் வெளியிடவுள்ள டெப்லட் கணனிக்கு ' கலெக்சி டெப் ' என பெயரிட்டுள்ளது.

இக் கணனியின் உத்தியோகபூர்வ அறிமுகம் இம் மாதம் 11ம் திகதி இடம்பெறுமெனவும் இவ்வருட 2ம் காலண்டு நிறைவுக்குள் சந்தைக்கு வருமெனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஏஸரில் கைகோர்க்கும் கூகுள் மற்றும் மைக்ரோசொப்ட்மேற்படி கணனியானது கூகுளின் அண்ட்ரொயிட் ' புரோயா ' இயங்குதளத்தினை கொண்டதாகும்.

7 அங்குல தொடுந்திரை மற்றும் 1.2GHz சம்சுங் ' ஹம்மிங் பேர்ட் ' புரசஸரை கொண்டுள்ளது.

16 ஜிபி உள்ளக சேமிப்பு வசதியை கொண்ட இக் கணனியில் பிளேஷ் உடன் கூடிய 3.2 மெகா பிக்ஸல் கமராவும் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும் வீடியோ காண்பிரண்ஸ் மற்றும் ' வை-பை ' வசதிகளையும் உள்ளடக்கியுள்ளது.

வளர்ந்துவரும் கணனிச் சந்தையில் ' டெப்லட்' கணனிகளின்' ஆதிக்கம் அதிகமாகவுள்ளதாகவும் இதன் விற்பனை வீதமானது நோட் புக் கணனிகளின் விற்பனையை பின் தள்ளியுள்ளதாகவும் சந்தை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அப்பிள் நிறுவனம் ' ஐ பேட் ' எனப்படும் தனது டெப்லட் கணனிகளை உலகளாவியரீதியில் 3.7 மில்லியன்களுக்கும் அதிகமாக விற்பனை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அந் நிறுவனத்தின் ' கலெக்சி ' வகை கையடக்கத் தொலைபேசிகள் மிகவும் பிரபலமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@பிரபல கணனி தயாரிப்பு நிறுவனமான ' ஏஸர் ' கணனி உலகில் புதிய மாற்றமொன்றை ஏற்படுத்தியுள்ளது.


கூகுளின் அண்ட்ரொயிட் மொபைல் சொப்ட்வெயார் எனப்படும் கையடக்கதொலைபேசிகள், டெப்லட் கணனிகளில் இயக்குதளங்களாக உபயோகிக்கப்படும் மென்பொருளை குயிக் பூடிங் இயக்குதளமாகவும் மைக்ரோசொப்டின் விண்டோஸ் எக்ஸ்பி யை பிரதான இயக்குதளமாகவும் மேற்படி நிறுவனம் பயன்படுத்தியுள்ளது.

இக்கணனி ' ஏஸர் எஸ்பயர் வன் எஒடி 255 'என இந்த நெட்புக் கணனிக்கு பெயரிடப்பட்டுள்ளது.

ஏஸர் கொன்பிகரேஸன் மெனேஜர் எனப்படும் ஏஸர் மென்பொருள் இயக்குதளங்களை கட்டுப்படுத்துகின்றது.

10.1 அங்குல திரையையும், இண்டெல் எட்டொம் என்450 மைக்ரோ புரோசெசரையும் கொண்டதாகும். 1 ஜீபி டீடீர் 2 ரெம்மையும் 160 ஜீபி வன்தட்டு எனப்படும் ஆர்ட் டிஸ்க்கையும் கொண்டுள்ளது.

இது 375 அமெரிக்கடொலர் வரை விலையிடப்படலாமென எதிர்பார்க்கப்படுவதுடன் சந்தைக்கு எப்போது விற்பனைக்கு வருமெனத் தெரிவிக்கப்படவில்லை.
நன்றி வீரகேசரி இணையம்

No comments: