பில்லா பாகம்-2

.
 நடிகர் அஜித்குமாரின் 50ஆவது படம்



ஏற்கனவே ரஜனிகாந்த நடித்து பிரபல்யமான திரைப்படம் பில்லா. அதனுடைய றீமேக் படத்தில் அஜித்குமார் நடித்து அப்படமும் தூள்கிளப்பியது. 2007ஆம் ஆண்டு வெளிவந்த பில்லா திரைப்படம் அஜித்தின் சரிந்த மார்க்கெட்டை தூக்கிவிட்டது. அஜித்தின் அசத்தலான நடிப்புடன் நயன்தாராவின் ஒல்லியான கவர்ச்சி மற்றும் நமீதாவின் தாராள கவர்ச்சி என்பவற்றாலும் பில்லா படம் மெகா ஹிட் திரைப்படமாகியது என்னமோ உண்மைதான்.


இந்நிலையில் அஜித் நடித்த பில்லா திரைப்படத்தின் இயக்குநர் விஷ்ணுவர்த்தன் பில்லா பாகம்-2இனை இயக்குவதற்கு தயாராகிவிட்டார்.

இதுதொடர்பாக அஜித்திடம் பேசி அனுமதியும் வாங்கிவிட்டாராம். அஜித் இப்பொழுது மங்காத்தாவுக்கு தயாராகிவிட்டதால் அதனை முடித்துக்கொண்டு பில்லா பாகம்-2இற்கு தயாராகவிருப்பதாக அஜித் தரப்பினர் அறிவித்திருக்கின்றனர்.

இப்படத்திலும் கவர்ச்சி நமீதா, நயன்தாரா போன்றோர் இருப்பார்களா என்பது பற்றிய விபரம் தெரிவிக்கப்படவில்லை.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

நடிகர் அஜித்குமாரின் 50ஆவது படம்


நடிகர் அஜித்குமாரின் 50ஆவது படம் எப்பொழுது தொடங்கும் என எதிர்பார்த்திருந்தவர்களுக்கு இனிப்பான செய்தியைக் கொடுத்திருக்கிறார் அஜித். வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவாகும் மங்காத்தா திரைப்படத்தின் ஆரம்ப பூஜை கடந்த 2ஆம் திகதி நடைபெற்றது.

18 வருடங்களுக்கு முன்னர் அஜித்குமார் சினித்துறைக்கு வந்த முதல் நாளான ஓகஸ்ட் 2ஆம் திகதியிலேயே அவரது 50ஆவது படத்தின் பூஜையினையும் போட்டு படப்பிடிப்பினையும் தொடங்கியிருக்கிறார்கள். இந்தப் படத்தின் பூஜையினை தொடர்ந்து பேசிய இயக்குநர் வெங்கட் பிரபு…

இன்றைய நாள் அஜித்குமாருக்கு மட்டுமல்ல எங்களுக்கும் இனியதொரு நாள். இந்தப்படம் வழமையான அஜித் படத்தினைவிட வித்தியாசமாகவே இருக்கும். இன்றைய நாளில் திரையரங்குகளில் வெளியிடுகின்ற விளம்பரத்துக்குரிய விடயங்களை முதலாவதாக படப்பிடிப்பு செய்திருக்கிறோம். உத்தியோகபூர்வ படப்பிடிப்பு இம்மாத இறுதியில் தொடங்கவிருக்கிறது. பெரும்பான்மையான படப்பிடிப்புகள் வெளிநாட்டிலேயே இடம்பெறும். மங்காத்தா 2011இல் கோடைகாலத்தில் வெளியிட தீர்மானித்திருக்கிறோம் என்றார்.

மங்காத்தா படத்தினை வெங்கட் பிரபு இயக்குகின்றார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றார். சக்தி சரவணன் ஒளிப்பதிவினை கவனிக்கிறார். நாகர்ஜுன் இப்படத்தில் முக்கிய பாத்திரமொன்றினை ஏற்றிருக்கிறார். அதேபோல் பிரேம்ஜி ஆனந்தும் நடிக்கிறார்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
 

No comments: