பூக்கள் எப்படி விரிகின்றன

.
பூக்கள் எப்படி விரிகின்றன என்று எக்ஸ்ரே மூலமாக அறிந்திருக்கிறார் ஹியூஜ் தேர்வி என்பவர்.

பொதுவாக எதனையும் ஆராய்ந்து பார்க்கும் மனப்பான்மை மிக்கவன் மனிதன். தோலில் மேலுள்ள அழகினைவிட அதனுள் இருக்கும் விடயங்களை அறிவதற்கே பெரிதும் ஆசைப்படுவான். அந்த ஆசையினால்தான் பூ விரியும் அந்தரங்கத்தை எக்ஸ்ரே எடுத்திருக்கிறார் ஓவியர் ஹியூஜ் தேர்வி.



1996ஆம் ஆண்டு தனது நண்பனின் இசை அல்பத்தின் அட்டைப் படத்திற்காக, அந்த நண்பரின் மண்டையோட்டினை எக்ஸ்ரே எடுத்திருந்தார் ஓவியர் ஹியூஜ். அன்றிலிருந்து எக்ஸ்ரே எடுப்பதனை பல வித்தியாசமான பொருட்களில் பயன்படுத்த தொடங்கினார். அதன் அதிகபட்சமாகத்தான் 'நம்பமுடியாத சிக்கலான் எக்ஸ்ரே' தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி பூக்கள் விரிவதனை படம்பிடித்து உலகுக்குக் காட்டியிருக்கிறார் அவர்.

ஓவியர் ஹியூஜ், சிக்கலான் எக்ஸ்ரே தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்தி எடுத்த பூக்கள் விரியும் படங்களையே இங்கு காண்கிறீர்கள்.




No comments: