பாகிஸ்தானில் மிக மோசமான வெள்ளம்

.

பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக சுமார் ஒருவார காலத்தில் பலியானோரின் எண்ணிக்கை 1,500 ஆக உயர்ந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட மாகாணமான கைபர்-பாக்டுன்கவாவின் தகவல் தொடர்புத்துறை அமைச்சர் மியான் இப்திகார் ஹூசைன் நேற்று இத்தகவலை வெளியிட்டார்.

பாதிக்கப்பட்ட 27,000 மக்களுக்கு உதவியளிப்பதற்கு முடியாத நிலையில் போக்குவரத்து தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை வெள்ளம் காரணமாக சுமார் 14 லட்சம் மக்கள் வீடுகளை இழந்துள்ளதாக மாகாண அதிகாரியொருவர் கூறியுள்ளார். அப்பிராந்தியத்தின் 70 சதவீதமான ஜீவனோபாய மார்க்கங்களை இழந்துள்ளனர்.

பாகிஸ்தானில் கடந்த 80 வருடகாலத்தில் ஏற்பட்ட மிக மோசமான இவ்வெள்ளப்பெருக்கில் 25 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

No comments: