ஆப்கானிஸ்தான் ஆவணங்களும் போருக்கு எதிரான போராட்டங்களும்

                                                                                                                  .     
                                                                                                                  Bill Van Auken
விக்கிலீக்ஸினால் பகிரங்கமாக ஆப்கானியப் போர் பற்றி வெளியிடப்பட்ட 92,000 இரகசிய ஆவணங்கள் மற்றும் செய்தி ஊடகம் மற்றும் உத்தியோகபூர்வ ஸ்தாபனத்தின் விடையிறுப்பும் அமெரிக்கா மற்றும் சர்வதேச அளவில் போர் எதிர்ப்புப் போராட்டங்களுக்கான பெரும் அரசியல் உட்குறிப்புக்களை கொண்டுள்ளன.

அமெரிக்க இராணுவ தனிநபர்களின் போர்முனை ஆவணங்களில் இருந்து 20,000 ஆப்கானியர்களை கொன்றது பற்றிய போர்க்கள அறிக்கைகளின் தொகுப்பு —இதுவும் மொத்த இறப்பு எண்ணிக்கையில் ஒரு சிறு பகுதிதான்— ஒரு முழு சமூகத்தை அழித்து வருவது பற்றிய அறிக்கையாகும். இரகசியப் படுகொலை செய்யும் குழுக்கள், சோதனைச் சாவடிக் கொலைகள், சாதாரண மக்களின் வீடுகளில் குண்டு போட்டுக் கொல்லுதல் அனைத்துமே வெளிநாட்டு ஆக்கிரமிப்பிற்கு பெரும் மக்கள் எதிர்ப்பை நசுக்கும் நோக்கத்தைத்தான் கொண்டுள்ளன. இவை அனைத்துமே ஒரு ஆக்கிரமிப்புப் போரை கண்டனத்திற்கு உட்படுத்துவதில் தெளிவாக உள்ளன.

ஆயினும் அமெரிக்க வரலாற்றிலேயே உத்தியோகபூர்வ இரகசியங்கள் ஐயத்திற்கு இடமின்றி மிகப் பெரிய அளவில் அம்பலப்படுத்தப்பட்டுள்ள சில நாட்களுக்குள்ளேயே, அநேக அமெரிக்க செய்தித்தாட்களில் இருந்து விக்கிலீக்ஸ் வெளியீடு பற்றிய தகவல்கள் மறைந்துவிட்டன. அறிக்கைகளில் “புதிதாக ஏதும்” இல்லை என்ற கருத்துக்கள் எண்ணுக்கணக்கற்ற தாட்களில் இதைத் தொடர்ந்து வந்துள்ளன.

இப்படி நிகழ்வைப் புதைத்தலும், செய்தி ஊடகத்தில் ஆப்கானிய கைக்கூலிகள், தகவல் கொடுப்போர் வாழ்க்கையை ஆபத்திற்குட்படுத்தியதற்காக செய்தி ஊடகத்தால் குற்றம் சாட்டப்பட்டுள்ள விக்கிலீக்ஸ் ஆசிரியர் Julian Assange க்கு எதிரான பெருகிய முறையில் அச்சுறுத்தும் பிரச்சாரமும் இணைந்துள்ளன.

பெருநிறுவனக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் செய்தி ஊடகங்களானது ஆவணங்கள் வெளியீடு பற்றிக்கொண்டுள்ள அணுகுமுறை சிறிதும் மறைக்கப்படாத விரோதப் போக்கைத்தான் காட்டுகிறது. ஆரம்பத்தில் இருந்தே, இது ஒபாமா நிர்வாகம் மற்றும் பென்டகன் இணைந்து ஒரு செயல்திட்டத்தை தயார் செய்தன —போர் நடத்துவதற்கு அதிக பாதிப்பில்லாத வகையில் பொது மக்களுக்கு விக்கிலீக்ஸ் கதைகளை எப்படித் தொகுத்து அளிப்பது என்பதே அது.

ஈராக்கிற்கு எதிரான “பேரழிவு ஆயுதங்கள்” பற்றிய பொய்யை நிஜமாக்கும் முந்தைய நிகழ்வுகளைப் போலவே, தேசியச் செய்தி ஊடகத்தின் நிகழ்ச்சி நிரலை உறுதிபடுத்தும் வகையில் நியூ யோர்க் டைம்ஸ் தலைமை வகித்தது. இந்த ஆவணங்களின் பெரும் முக்கியத்துவம், இவை ஆப்கானிஸ்தானில் “தளர்ச்சியினால் முறுக்கேறிய இராணுவம்”, பாக்கிஸ்தானில் போலித்தன அரசாங்கம் என்ற சித்தரிப்பைக் கொடுத்துள்ளது என்று டைம்ஸ் கூறுகிறது. இவ்விதத்தில் “நாட்டிற்காகக் குரல் கொடுக்கும்” நாளேடு ஆப்கானிய மக்களுக்கு எதிராக அமெரிக்க,நேட்டோ படைகள் புரிந்த குற்றங்கள் அம்பலப்படுத்தப்பட்டதை போர் விரிவாக்கம், தீவிரம் ஆகியவற்றை நியாப்படுத்தும் விதத்தில் திரித்துவிட்டது.

விக்கிலீக்ஸ் வெளிப்படுத்திய ஆவணத்தின் பொருளுரை பற்றி கூக்கூரல்களைத் தூண்டவில்லை, அவற்றின் முக்கியத்துவம் உதறித்தள்ளப்பட வேண்டும், அத்துடன் அவற்றைப் பகிரங்கமாக்கியவர்களையும் சாடவேண்டும் என்ற உத்தியோகப்பூர்வ வாஷிங்டன் நிலைப்பாட்டுடன் செய்தி ஊடகத்தின் விடையிறுப்பு இணைந்துதான் போய்விட்டது.

இவை அனைத்தும் ஆப்கானிஸ்தான் படையெடுப்பு தொடங்கி 9 ஆண்டு நிறைவு வெகு விரைவில் வர இருக்கையில் வெளிவந்துள்ளன. இந்நேரத்தில் அமெரிக்கத் துருப்பு எண்ணிக்கை 100,000 என உயர்ந்துவிட்டது, ஆப்கானிஸ்தானில் இரண்டாவது மிகப் பெரிய நகரமான கந்தகாருக்கு எதிராக ஒரு பெரிய, குருதி கொட்டும் தாக்குதலுக்குத் தயாரிப்பு நடைபெறுகிறது. இதற்கிடையில் கிட்டத்தட்ட 90,000 தரைப்படை மற்றும் மரைன் படையினர்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான ஒப்பந்த படையினர்கள் ஈராக்கில் நிறுத்தப்பட்டுள்ளனர். பல ஆண்டுகளுக்கு அங்கு பல்லாயிரக்கணக்கானவர்கள் தொடர்ந்து இருபார்கள் என்ற அறிகுறியும் காணப்படுகிறது.

நடக்கும் போர்களைப் பற்றி அமெரிக்காவில் ஒரு இனம்புரியாத மௌனம் நிலவுகிறது. நன்கு வெளிப்படும் எதிர்ப்புக்கள் ஏதும் இல்லை. அதேபோல் காங்கிரஸிற்குள்ளும் கணிசமான எதிர்ப்பு ஏதும் இல்லை. போர் எதிர்ப்பு உணர்வு கரைக்கப்பட்டுவிட்டது, அரசாங்கம் விரும்பும் விதத்தில், விரும்பும் காலம் வரை போரைத் தொடரலாம் என்பதற்குத் தடையில்லை என்று ஒபாமா நிர்வாகம் நம்புகிறது, அக்கருத்திற்கு செய்தி ஊடகமும் ஆதரவளிக்கிறது.

போருக்கு மக்களிடம் இருந்து வந்த பெரும் எதிர்ப்பு என்ன ஆயிற்று? 9/11 நிகழ்வின் அதிர்ச்சி குறையத் தொடங்கியபின், புஷ் நிர்வாகத்தின் ஈராக்கிற்கு எதிரான போர் உந்துதல் தொடங்கியபின், இந்த எதிர்ப்பு பெப்ருவரி 2003ல், பென்டகன் அதன் “அதிர்ச்சி, பெரும் வியப்பு” செயற்பாட்டை தொடங்குவதற்கு முன்பு மில்லியன் கணக்கான மக்கள் தெருக்களில் நடத்திய ஆர்ப்பாட்டங்கள் மூலம் தெளிவாகத் தெரிந்தது.

அடுத்த சில ஆண்டுகளில் ஒவ்வொரு தேர்தலும் போருக்கு எதிரான மக்கள் எதிர்ப்பின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்தது. எதிர்க்கட்சி எனக்கூறுப்பட்ட ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்கள் புஷ்ஷின் கீழ் கட்டவிழ்த்துவிடப்பட்ட பெரும் இராணவவாதத்திற்கு எதிரான மாற்றீடு எதையும் முன்வைக்கத் தவறினர்.

ஆயினும்கூட, போர் எதிர்ப்பு அமைப்புக்கள் ஜனநாயக கட்சிக்கு போர் எதிர்ப்பு இயக்கத்தை தாழ்த்துவதற்கு முறையாக உழைத்தன, மக்களின் போர் எதிர்ப்பு உணர்வை ஜனநாயகக் கட்சியின் தேர்தல் பிரச்சாரங்களுக்கு ஆதரவாகத் திசைதிருப்பின, பின்னர் இயக்கத்தை தளர்ச்சிக்கு உட்படுத்தி, அதனால் பாதிப்பு ஏதும் இல்லை என்று செய்துவிட்டன.

இந்த வழிவகை நவம்பர் 2008ல் நடந்த தேர்தலில் உச்சக்கட்டத்தை அடைந்தது. ஜனநாயகக் கட்சியின் வேட்பாளார் போட்டிக்கு நின்ற பாரக் ஒபாமா, அவருடைய முக்கிய போட்டியாளர்களை விட தன்னை போருக்கு எதிரானவர் என்று காட்டிக் கொண்டு வெற்றி அடைந்தார். ஆனால் பதவிக்கு வந்தவுடன், அவருக்கு முன்பு இருந்த குடியரசுக் கட்சி ஜனாதிபதியைவிட கூடுதலான இரக்கமற்ற, திட்டமிட்ட இராணுவ ஆக்கிரோஷ முறையைக் கையாளக்கூடிய ஒரு நிர்வாகத்தை அமைத்தார்.

இந்த திடமான அரசியல் வழிவகை தான் வெகுஜன போர் எதிர்ப்பை மூடி, அதற்கு காணக்கூடிய வெளிப்பாடு ஏதும் இல்லாமல் செய்துவிட்டது. ஆனால் ஒவ்வொரு தேர்தலுக்குப் பின்னும் இந்த எதிர்ப்பு மறைந்துவிடவில்லை. இது நிலத்தடிக்கு தள்ளப்பட்டுவிட்டது. அதே நேரத்தில் பரந்த அமெரிக்க உழைக்கும் மக்கள் தொகுப்பில் முழு நனவாக உள்ளுறைந்திருந்தது.

அரச கருவிக்குள் அதிக தொலைநோக்குடைய கூறுபாடுகள் இந்த உண்மை பற்றி நன்கு அறிந்திருந்தன. விக்கிலீக்ஸ் வெளியிட்ட இரகசிய ஆவணங்களில் முன்பு வந்தவற்றுள் ஒன்று ஆப்கானிஸ்தான் பற்றிய “பொருட்படுத்தாத் தன்மையை மட்டும் நம்பியிருப்பது போதாது” என்ற தலைப்பில் இருந்த CIA அறிக்கையாகும். இந்த அறிக்கை ஐரோப்பிய அரசாங்கங்கள் போருக்கு ஆதரவாக ஒருவிதமாக இழுத்துவரப்படலாம் என்றாலும், அமெரிக்க மக்களிடையே ஆதரவைப் பெறுவது கடினம் என்ற அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது என்று கூறியது.

இந்த எதிர்ப்பு எப்படி மீண்டும் வெளிப்படுத்தப்படலாம்? விக்கிலீக்ஸ் ஆசிரியர் உட்பட ஆப்கானிய ஆவணங்களை வெளியிடுவது வியட்நாம் போரின் போது பென்டகன் ஆவணங்களை வெளியிட்டதன் விளைவு போன்றவை மீண்டும் வரக்கூடும் என்ற நம்பிக்கை கொண்டவர்களின் கனவு குறுகிய காலத்தில் சிதைந்துவிட்டது.

அது 40 ஆண்டுகளுக்கு முந்தைய நிகழ்வு. இடைப்பட்ட காலம் அமெரிக்க அரசியலில் அடிப்படை மறுகட்டமைப்பைக் கொண்டுள்ளது. இதில் இரு முதலாளித்துவ கட்சிகளின் தீவிர பிற்போக்குத்தனம், ஆழ்ந்த அறநெறிச் சரிவு இரண்டும் மேலோங்கி நிற்பதுடன், ஏகாதிபத்தியச் செருக்கு நிறைந்த வெளிநாட்டுக் கொள்கை ஏற்கப்பட்டது குணநலனாயிற்று. ஒவ்வொரு பொதுத் துறையையும் முன்னோடியில்லாத அளவிற்கு சமூக சமத்துவமற்ற தன்மையில் நிறுத்தியது மற்றும் ஜனநாயக உரிமைகள், வழிவகைகளுக்கு விரோதப் போக்கு கொண்டு இராணுவ வழிவகை உட்பட பலவிதத்தில் செல்வம், இலாபங்களைத் தொடர்வதற்காக அழிவுகளையும் கஷ்டங்களையும் பிறருக்கு ஏற்படுத்துவது பற்றிப் பொருட்படுத்தாத ஆளும் தன்னலக்குழுவும் வெளிப்பட்டுள்ளது.

உலக சோசலிச வலைத் தளமும் சோசலிச சமத்துவக் கட்சியும் வர்க்கப் பிரச்சினைகளில் ஆழ்ந்து இயைந்துள்ள வெகுஜனப் போர் எதிர்ப்பு இயக்கம் மீண்டும் வெளிப்படும் எனக் கருதுகின்றன. போருக்கு எதிரான எதிர்ப்பு என்பது ஒரு புரட்சிகரப் பிரச்சினை ஆகும்.

அரசியல் வாழ்வின் தளத்திற்கு கீழே போருக்கு விரோதப் போக்கு கொதிநிலையில் இருப்பது முதலாளித்துவம், இரு பெரிய வணிகக் கட்சிகள் மற்றும் இந்த அமைப்புமுறைக்கு தலைமைதாங்கும் அரசியல் சமூக நெறியற்றவர்கள் ஆகியவற்றிற்கு எதிரான ஒரு வெகுஜன, சுயாதீன தொழிலாள வர்க்கத் திரட்டின் வடிவமைப்பிற்குள்ளாகத்தான் இது இயலும். போருக்கு எதிரான போராட்டம், முக்கிய சமூகப் பணிகள் வெட்டு மற்றும் வாழ்க்கைத் தரங்கள் மீதான தாக்குதல்களுக்கு எதிரான போராட்டத்துடன்தான் பிணைக்கப்பட வேண்டும். தொழிலாள வர்க்கத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் மற்றும் பொய்களின் அடிப்படையில் அதன் போர்களை தொடரும் இலாபமுறைக்கு ஒரே விடை சமூகத்தை சோசலிச மாற்றத்திற்கு உட்படுத்துவதில்தான் உள்ளது.
நன்றி தேனி

No comments: