*எந்திரன் புதிய சரித்திரம் படைப்பான்
*நான் நடித்துக்கொண்டே இருப்பேன் என அடிக்காத குறையாக பொரிந்துதள்ளியிருக்கிறார் நயன்.

இறுதிநாள் படப்பிடிப்பின் கடைசி காட்சி படமாக்கி முடிந்ததும் அரங்கிலுள்ள அனைவரும் கைதட்டி தங்களது மகிழ்ச்சியினை வெளிப்படுத்தினர்.
அதுமட்டுமல்லாமல் பெரிய கேக்கினை வரவழைத்து அதனை நடிகர் ஆர்யா வெட்டி அனைவருக்கும் பரிமாறினார். இந்நிகழ்வு முடிந்ததும் ஒவ்வொருவரும் தங்களுடைய கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
இயக்குநர், தயாரிப்பாளர் எல்லோரும் பேசிய பின்னர் நயன்தாராவை பேசுமாறு அழைத்தனர். முதலில் மௌனமாக இருந்த அவர் பின்னர் பொரிந்து தள்ளிவிட்டார். ஊடகங்கள் எனக்கு பலமுறை கல்யாணம் கட்டி பார்த்துவிட்டன. இப்பொழுதும் என்மீது பழிசுமத்திக்கொண்டே இருக்கிறார்கள். இனிமேல் திரைப்படங்களில் நான் நடிக்கப்போவதில்லை என்றுகூட வதந்தி பரப்பியிருக்கிறார்கள். இந்த வதந்திகள் எனக்குப் பழக்கப்பட்டவைதான். அதனால் இதனைப்பற்றி நான் கவலைப்படவில்லை. என் கைவசம் இரண்டு படங்கள் இருக்கின்றன. அதனைத் தொடர்ந்தும் பல வாய்ப்புகள் வருகின்றன. ஆகையினால் தொடர்ந்தும் நான் நடித்துக்கொண்டே இருப்பேன் என அடிக்காத குறையாக பொரிந்துதள்ளியிருக்கிறார் நயன்.
அவரது ஆவேசத்தினைப் பார்த்து படப்பிடிப்புக் குழுவினர் வாயடைத்துப் போய்விட்டார்களாம்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@
எந்திரன் புதிய சரித்திரம் படைப்பான்
எந்திரன் திரைப்படம் நிச்சயமாக சாதிக்கும். ஷங்கரின் பிரமாண்ட படம் என்பதாலோ ஐவர்யா என்னுடன் இணைந்து நடிப்பதாலோ ஒஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை என்பதாலோ அல்ல. தமிழிலிருந்து உருவாகும் ஹொலிவூட் படம் என்பதாக எந்திரன் பிரபல்யமடையும் என அப்படத்தின் இசை வெளியீட்டின்போது சூப்பர்ஸ்டார் ரஜனிகாந்த் தெரிவித்தார்.
கடந்த 31ஆம் திகதி மலேசியாவின் கோலாலம்பூர் நகரில் நடைபெற்ற எந்திரன் இசை வெளியீட்டின்போதே ரஜனிகாந்த் மேற்படி குறிப்பிட்டார். இந்நிகழ்வில் இந்திய திரையுலகின் பெரும்புள்ளிகள் பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
தொடர்ந்து அந்நிகழ்வில் பேசிய ரஜனி… கலாநிதி மாறனை புகழ்ந்து தள்ளினார். எந்தவொரு தயாரிப்பாளரும் செய்யத்தயங்கும் பரிட்சார்த்த முயற்சியை எங்களை நம்பி கலாநிதி மாறன் செய்திருக்கிறார் என்றார். அதுமட்டுமல்லாமல் அனைவரது எதிர்பார்ப்பினையும் போலவே நிச்சயமாக எந்திரன் புதிய சரித்திரம் படைப்பான் எனவும் சுட்டிக்காட்டினார்.
ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் உருவாகியிருக்கும் அனைத்து பாடல்களும் மக்கள் மத்தியில் இரண்டு நாட்களிலேயே மிகவும் பிரபல்யமாகியிருப்பதும் அல்பம் விற்பனையில் புதிய சாதனை படைத்திருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment