கொழும்பில் ஆடி வேல் விழா

 .


136வது வருடாந்த ஆடிவேல் விழா மிகச்சிறப்பாக கொழும்பில் யூலை மாதம் 23ம் திகதி நடைபெற்றது. காலையில் கொழும்பு கடல் வீதியில் அமைந்துள்ள ஸ்ரீ கதிர்வேலாயுதசுவாமி கோயிலிருந்து மயில் வாகனத்தில் புறப்பட்ட முருகப்பெருமான் அன்றிரவு சம்மாந்கோட்டு   ஸ்ரீ மாணிக்க விநாயகர் கோயிலில் வந்தடைந்தார். மிகவும் அழகாக சோடனை இடப்பட்ட முருகன் மேளம் நாதஸ்வர இசையோடு கொழும்பின் பிரதான வீதிகளில் ஊர்வலமாக வந்து கடலில்  தீர்த்தம் ஆடப்பட்டு காலி வீதி வழியாக பம்பலப்பிட்டியாவை வந்தடைந்தார். இவ்விழாவில்

பக்த வெள்ளம் அலை மோதியது. பல தெருக்களின் வழியாக ஆடி வேல் பவனி வந்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது.

எடுக்கப்பட்ட சில படங்களைப் கீழே பார்க்கவும்

















No comments: