பூமியை தாக்கும் ‘சோலார் சுனாமி’.

நம் பூமிக்கு ஒளிகொடுக்கும் சூரியனில் பாரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பிளவின் அளவு பூமியைவிட பெரியது என நாஸா அறிவித்துள்ளது. இரண்டுமுறை ஏற்பட்ட இந்த வெடிப்பினை நாஸா விண்கலங்கள் படம்பிடித்துள்ளன. அதனை ஆராய்ந்த விஞ்ஞானிகள் அதிர்ச்சியான தகவலை வெளியிட்டிருக்கிறார்கள்.

பூமியை நோக்கி அசுர வேகத்தில் ‘சோலார் சுனாமி’ (சூரிய கதிர்களின் சுனாமி) வருகிறது என்பதே அந்த அதிர்ச்சி தகவல். இதற்கு முன்னரும் பல கதிர்கள் பூமியை தாக்க வந்தபோதிலும் அது சாத்தியப்படவில்லை. ஆனால் இம்முறை வருகின்ற 'சோலார் சுனாமி' எவ்வாறான பாதிப்பினை ஏற்படுத்துமென சரியாக கணிக்கமுடியாமல் விஞ்ஞானிகள் தடுமாறுகிறார்கள்.


'சோலார் சுனாமி' பெரும்பாலும் இன்று இங்கிலாந்து பகுதிகளில் தாங்கங்களை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தாக்கத்தினால் விண்கலங்கள் மின்காந்த அலைகள் பாதிக்கப்படலாம் எனவும் அச்சம் கொள்கின்றனர் விஞ்ஞானிகள்.


No comments: