.
இன்று Australiaவில் வாழும் நாம், மாதத்தில் பல வார இறுதி நாட்களான சனி, ஞாயிறு கிழமைகளை எமது உறவுகளின் அல்லது நண்பர்களின் பிறந்ததின கொண்டாட்டமாக கழிக்கிறோம். இது என்ன இவர்களது பிறந்த தினங்கள் சனி ஞாயிற்று கிழமைகளில் தான் வருமா? இல்லை. அவர்கள் பிறந்ததினம் வார நாட்கள் எதிலாவது வந்திருக்கும், ஆனால் யாவருக்கும் வசதியான சனி ஞாயிற்று கிழமைகளில் கொண்டாடப்படும். வெள்ளைகாரன் எம்மை ஆண்டதால் நல்லதும் கெட்டதுமாக பல விஷயங்களை நாம் அவர்களிடம் கற்றுள்ளோம். அதில் இந்த பிறந்த நாளும் ஒன்றே.
1969இல்
நான் லண்டன் போய் இருந்தேன். இரண்டாவது மகாராணியாரது வாசஸ்தலமான “பாக்கிங்காம்
அரண்மனை” வாயிலில் பெரிய கூட்டம். என்ன
விசேஷம் என விசாரித்தேன், மகாராணியாரது பிறந்ததின கொண்டாட்டம் என்றார்கள். அவர்
பரிவாரம் சூள பவனி வருவார், அதை பார்க்க கூடி நிற்கும் ஜன திரள் என்றார்
பொலிஸ்காரர். நானோ வண்டிக்கு புதிது. Almost Banda Coms to town மாதிரியே
அதாவது பட்டிக்காட்டரின் பட்டணம் பார்க்க வந்த மாதிரியே பொலீஸ்காரரிடம்
மகாராணியாரது எத்தனையாவது பிறந்த தினம் என்று விசாரத்தில் இறங்கினேன். அவரோ என்னை
ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு கூறினார். மகாராணியார் பிறந்த தினம் அன்று அல்ல,
லண்டனில் நல்ல வெய்யில் எறிக்கும் நாளாக பார்த்து அவரது பிறந்த தினத்தை
கொண்டாடவார்கள். காரணம் அவர் பரிவாரம் சூள பவனி வருவது லண்டன் வரும் சுற்றுலா
பயணிகளுக்கு ஒரு கவர்ச்சிக்கான விழாவே.
பார்க்கிங்கம்
அரண்மனை வாயிலில் தொடங்கி பெரிய ஊர்வலம் நடைபெற்றது. அரண்மனையின் பரிவார ஊர்வலம்
விதம் விதமான உடைகளுடன் பார்ப்பதற்கு ரம்மியமாக இருந்தது. அரசியார் குதிரையில்
சவாரி செய்து வந்தார். அவர் சாதாரண குதிரை சவாரியின் போது குதிரையின் இரு பக்கங்களும்
கால்களை போட்டு அமர்வது போல அமரவில்லை. கால்கள் இரண்டையும் ஒரு பக்கமாக போட்டு
அமர்ந்திருந்தார். இது ஏன் இப்படி அமர்ந்திருக்கிறார் எனக் கேட்டபோது, பண்டைய
பிருத்தானிய சம்பிரதாயத்தில் பெண்கள் குதிரை சவாரியின் போது கால்களை இருபக்க
போட்டு அமர்வது பெண்மைக்கு இழுக்கு என கருதினார்களாம். அதனாலேயே அரசியார்
சம்பிரதாய ஊர்வத்தில் அவ்வாறு குதிரை சவாரி செய்கிறார் எனக் கூறப்பட்டது.
அரசியின்
பிறந்த தினத்தை விடுத்து எமது விட்டு பிறந்த தினத்தைப் பார்ப்போம். எனது
பெற்றோர்கள் இருவேறுபட்ட பின்னணியில் வாழ்ந்தவர்கள். தந்தையார் சுதேசவாதி.
வெள்ளையன் நாகரீகத்தை கண்மூடிதனமாக பின்பற்றுவது. எமது அடிமை சிந்தனையின்
வெளிப்பாடு எனக் கருதுபவர். தாயாரோ மலேஷியாவில் பிறந்து வளர்ந்தவர். அவரது
தந்தையார் வெள்ளையருக்கு வேலை பார்த்து ஊதியம் பெற்றவர். அது மட்டுமல்ல கறுப்பராக
இருந்தும், வெள்ளையர் செய்யும் அத்தனையையும் செய்வது நாகரீகம் எனக் கருதியவர்.
எனது தாயாரில் அந்த பாதிப்பு இருப்பதில் வியப்பில்லை. இந்த பின்னணியில் எனது
தாயார் எமக்கு பிறந்த தினம் கொண்டாடுவார். இதில் தந்தையார் கலந்து கொள்ள மாட்டார்.
ஏதோ வேலையாக போபவர் போல வெளியே போய்விடுவார்.
எனது
12 வயது பிறந்த தினம். வழமை போல காலை குளித்ததும் புத்தாடை அணிவதில் ஆரம்பமாகும்
பிறந்ததினம். பெண் வழர்ந்து விட்டாள் அவளுக்கு அறிவுரை கூறலாம் என எண்ணினார்
போலும் எனது தந்தையார். நீ எதற்காக பிறந்த தினம் கொண்டாடுகிறார். உலகில் எல்லா
மனிதருமே ஏதோ ஒரு நாளில் பிறக்கத்தான் செய்கிறார்கள். அதில் என்ன விசேஷம்.
நாட்டுக்கும் சமூகத்திற்கும் செலவு செய்தவர்களை உலகம் போற்றும். அவர்கள் செய்த
நல்ல காரியங்களை மக்கள் நன்றியுடன் நினைவு கூர்வார்கள். மகாத்மா காந்தியின் பிறந்த
தினத்தை நாடே கொண்டாடுகிறது. ஆனால் அந்த மனிதர் எப்பொளுதாவது தனது பிறந்த நாளை
கொண்டாடி இருப்பாரா? இனிமேல் உனது பிறந்தநாள் வரும்போது கடந்த வருடம் நீ என்ன நல்ல
காரியம் செய்தாய் என சிந்தித்துப் பார் என ஒரு பிரசங்கமே நிகளத்தி முடித்தார் என்
தந்தையார். வளரும் வயதில் சில நல்ல விஷயங்களை சொன்னால் அது பசுமரத்து ஆணியாக
பதிந்து விடுகிறது.
நான்
80பதுகளில் சென்னையிலே வாழ்ந்த காலம். சென்னை மத்திய நூலகம் (கன்னிமாறா நூலகம்)
போவது வழமை. அங்கு தொங்கிய ஒரு அறிவிப்பு பலகை என் கவனத்தை ஈர்த்தது. அதில்
கூறிப்பிட்ட செய்தி இதுதான் வருடத்தின் 364 நாட்களும் நூல் நிலையம் காலை 8 மணியில்
இருந்து மாலை 8 மணிவரை திறந்திருக்கும். ஒரே ஒரு நாள் நூல் நிலையம்
திறக்கப்படமாட்டாது. அது எந்த நாள் தெரியுமா? தேச பிதாவான மகாத்மா காந்தி சுட்டு
கொல்லப்பட்ட தினமாகும். அன்று தேசிய துக்க தினமாக அனுட்டிப்பதால் நூல் நிலையம்
மூடி இருக்குமாம். எனது தந்தையாரோ மகாத்மா காந்தி பிறந்த தினத்தை மக்கள் கொண்டாடுவார்கள்
என்றார். ஆனால் அவர் உயிர் நீத்த நாளையல்லவா நாடே துக்க தினமாக அனுட்டிப்பதைக்
கண்டேன்.
நான்
அடிக்கடி நூல் நிலையம் செல்வதால் அங்குள்ள நூலகவியளாளருடன் பரிட்சியம் ஏற்பட்டது.
அவர் கூறினார் இந்தியாவில் எல்லா பெரிய நகரங்களிலும் உள்ள மத்திய நூலகங்கள் 364
நாட்களும் திறந்தே வைக்கப்பட்டிருக்குமாம். அறிவை தேடி வருபவனுக்கு நூல் நிலையம்
என்ற அறிவாலயம் திறந்தே இருக்கவேண்டும். மகாத்மா காந்தி இறந்த கால கட்டத்தில்
நாட்டு மக்கள் தமது குடும்பத்தில் ஒருவரை இழந்தது போல் வருந்தினார்களாம். அவர்
இறந்த தினத்தில் நாடு பூராவும் மக்கள் கூடி அவருக்கு விருப்பமான பஜனை பாடல்களை
பாடி அஞ்சலி செய்தார்களாம். ஒருவன் பிறந்த போது உயர்ந்தவனாகி விடமாட்டான். அவனை
இழந்து சமுதாயம் கண்ணீர் வடிக்கும் போதுதான் அவனது உயர்வை மக்கள் உணர முடியும்.
நான்
சென்னையில் கே.கே. நகர் மத்திய பாடசாலையில் பணி புரிந்தேன். இங்கு 34, 35 வயது
மதிக்க தக்க துடிப்பான இளைஞர் அதிபராக கடமையாற்றினார். இவர் தாவரவியலை முக்கிய
பாடமாக படித்தவர். இவர் தாவரவியல் பட்டதாரி மட்டும் அல்ல தாவரங்களை நேசிப்பவர்,
சென்னை வாசிகள் அழகிய மலர்களை கண்டால் அவற்றை பறித்து தலையில் வைப்பார்கள் அல்லது
சுவாமிக்கு வைப்பார்கள். அதற்காகவே தான் செடியில் பூ பூப்பது என நம்புபவர்கள்
செடியில் பூவை பார்த்து இரசிக்கலாம் என்பதை சிந்தியாதவரை அங்கு அதிகம் காணலாம்.
புதிதாக வந்த அதிபர் லக்ஷ்மி நாராயணராவ் அதிபராக வந்ததும் பாடசாலை சூளலில் பெரிய
மாற்றம் ஏற்பட்டது. பாடசாலையின் சுற்றாடலில் மாணவரை கொண்டே பூ செடிகளை நாட்டி
தண்ணீர் ஊற்றச்செய்து பூக்களையும் அதன் அழகையும் பறிக்காமலே இரசிக்கலாம் என
வளமைபடுத்தினார். காலையில் பிரார்த்தனைக்காக கூடி பிரார்த்தனை முடிந்ததும் சில
நிமிடம் பேசுவார். அவரகு பேச்சு செடிகளின் அத்தியாவசியம் பற்றியும் அவை எவ்வாறு
சுற்றுப்புற சூளலை பாதுகாக்கின்றன என்பது பற்றியுமாகவே இருக்கும்.
இந்த
சமயத்திலே பெரிய நிலப்பரப்பு உள்ள இடத்தி பாடசாலையை கட்ட அரசு முன்வந்தது. இந்த
புதிய கட்டடம் கட்ட பொறுப்பாக இருந்த நாராயண ராவ், பெரிய நீர் தடாகத்தை அமைத்து
அதிலே அல்லி செடியை வழர்க்க செய்தார். மாணவர்களை கொண்டே அழகிய பூந்தோட்டத்தை
அமைத்தார். எல்லாவற்றிற்கும் மேலாக மாணவ மாணவியர் பிறந்த தினத்திற்கு பாடசாலை
வளாகத்திலே ஒரு செடியை கொண்டு வந்து நடும்படி ஊக்குவிப்பார். 7ம், 8ம் வகுப்பு
மாணவர்களிடம் இன்று ஒரு செடியை கொண்டு வந்து பாடசாலையில் நாட்டி வளர்த்தார். நீ 4,
5 வருடத்திலே இந்த பாடசாலையை விட்டு எங்கோ போய்விடுவாய். நீ நாட்டிய செடி உன்
ஞாபகமாக இங்கு வளரும். நீ பெரியவனாக ஒரு நாள் உனது பாடசாலையை பார்க்க வரும்போது
அந்த செடி பெரிய விருட்சமாக உன்னை வரவேற்கும். நீ அந்த சமையத்தில் அதை பார்த்து
எத்தனை பெருமைபடுவாய், என மாணவரை ஊக்குவித்து செடிகளை நாட்டுவித்தார்.
No comments:
Post a Comment