தமிழ் இருக்கையின் தேவை முனைவர் பாலா சுவாமிநாதன் சிறப்புப் பேட்டி


தமிழ் இருக்கை என்பது தமிழ் மொழியை கற்பிக்க, ஆய்வு செய்யவென பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் உள்ள ஒரு பேராசிரியர் பொறுப்பு ஆகும். "ஒரேயொரு பேராசிரியர் மூலம் சராசரியாக பத்து ஆராய்ச்சி மாணவர்களை கொண்டு ஆராய்ச்சிகளும், கருத்தரங்குகளும், மொழிசார்ந்த நிகழ்வுகள் மட்டுமே நடத்தப்படுவது தமிழ் இருக்கை" என்று தமிழ் இருக்கை குழுமத்தின் உறுப்பினர் அ. முத்துலிங்கம் அவர்கள் விபரிக்கிறார். பொதுவாக நிலையான நிதியில் (endowments) இருந்து பெறப்படும் வருவாயில் இருந்து தமிழ்க் இருக்கைக்கு நிதி வழங்கப்படுகிறது. (விக்கிப்பீடியா).

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஸ்டோனி ப்ரூக் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்கு அனுமதி அளித்துள்ளது பல்கலைக்கழக நிர்வாகம். இதற்கான தொடர் முயற்சியில் ஈடுபட்டவர் பால சுவாமிநாதன்.அமெரிக்கவாழ் தமிழரான பால சுவாமிநாதன் பல ஆண்டுகளாக ஸ்டோனி ப்ரூக் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைய கடும் முயற்சி எடுத்து வந்தார். அவரது கோரிக்கைக்கு பல்கலைக்கழக நிர்வாகம் செவிசாய்க்கவில்லை. அதேநேரம், ஹார்வர்டு தமிழ் இருக்கை அமைவதற்கு உலகம் முழுவதும் குவியும் ஆதரவைக் கண்ட ஸ்டோனி ப்ரூக் பல்கலைக்கழகமும் தமிழ் இருக்கை அமைய அனுமதி அளித்துள்ளது. இதனால் தனது முழு முயற்சியால் தன் சொந்த செலவிலேயே ஸ்டோனி ப்ரூக்கில் தமிழ் இருக்கை அமைக்கும் முயற்சியில் முனைவர் பாலா சுவாமிநாதன் வெற்றி கண்டுள்ளார்.
கனடாவில் இன்று மூன்று லட்சத்துக்கும் அதிகமான தமிழர் வாழும் சூழலில் Toronto பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஒன்றை அமைக்கும் வாய்ப்பைத் தேடி வந்து வழங்கியிருக்கிறார்கள் பல்கலைகழகத்தார்.
இந்த மாதிரியானதொரு வாய்ப்புக் கிடைக்க பல்லாண்டுகளுக்கு முன்னர் முயற்சி எடுத்தும் பலனளிக்காத சூழலில் இப்போது ஹாவார்ட் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை ஒன்று நிறுவப்பட்ட சூழலில் அந்த வெற்றிகரமான முயற்சியைக் கண்டு Toronto பல்கலைக்கழக இயக்குநர்கள் தமிழ் மக்களிடம் தமிழ் இருக்கை அமைப்பதற்கான சம்மதத்தை வழங்கி வரவேற்றிருக்கிறார்கள்.


ஹாவார்ட் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவ எப்படித் தன்னார்வலர்கள் மில்லியனில் இருந்து உண்டியல் கணக்கு வரை உலகெங்குமிருந்தும் அள்ளிக் கொடுத்து ஆறு மில்லியன் அமெரிக்க டொலர்களை நிரப்பி நிறுவினார்களோ அது போன்றதொரு இன்னொரு முன்னெடுப்பு இது. இம்முறை இந்தத் தமிழ் இருக்கைக்கான வைப்பு நிதியாக மூன்று மில்லியன் டொலர்கள் தேவை. இதுவரை 1.3 மில்லியன் டொலர்கள் திரட்டப்பட்டுள்ளன.Toronto பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை இணையப்பக்கம்

இது ஒரு நிரந்தரச் சொத்துக்கான முதலீடு, இதன் மூலம் கற்பித்தல், ஆராய்ச்சி, கருத்தரங்கு உள்ளிட்ட பன்முகப்பட்ட வாய்ப்பு செம்மொழியான தமிழ் மொழிக்குக் கிட்டப் போகிறது.


இந்த முயற்சிகள் குறித்து முனைவர் பாலா சுவாமி நாதன் அவர்களோடு வீடியோஸ்பதி இணையத்துக்காகக் கண்டிருந்த பேட்டி இதோ

https://www.youtube.com/watch?v=ppgn5-Id0H8&t=4s



No comments: