சொல்லி நிற்போம் சுவையாக ! மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா ...... மெல்பேண் .... அவுஸ்திரேலியா

 பேசுகின்ற வரம் மெமக்கு

     பெருவர மாய் அமைந்திருக்கு 

கூசு கின்ற வார்த்தைகளை

     மாசெனவே ஒதுக்கி டுவோம் 

ஆசை கொள்ளும் பாங்கினிலே

     அழகு தமிழ் வார்த்தைகளை

பேசி நிற்போம் வாருங்கள் 

      காசினியே சுவை பயக்கும்  !


சொல்லு கின்ற சொல்லெல்லாம் 

     சுவையாக இருக்க வேண்டும்

முள்ளாக வந்து நின்றால்

      முழு மகிழ்வும் மறைந்துவிடும் 

கள்ள முடன் மனமிருந்தால்

      நல்ல சொற்கள் குறைந்துவிடும்

வெள்ளை மனம் உள்ளார்க்கு

      நல்ல சொற்கள் நிறைந்துவிடும்  !

 

 

கற்கின்ற நூல் எமக்கு

      காட்டித் தரும் நல்வார்த்தை

கசடு அறக் கற்றிட்டால்

      கண்டிடலாம் நல் வார்த்தை 

வல் எழுத்து வார்த்தைகளை

      வகை பிரித்து வைத்திட்டு

மெல் எழுத்தை தேர்ந்தெடுத்து

      சொல்லி நிற்போம் சுவையாக  ! 

      


No comments: