அயோத்தி தீட்சிதருக்கு கொரோனா தொற்று

.

அயோத்தி: ராமர் கோயில் பூமி பூஜைகளுக்கான சடங்குகள் குழுவில் இருக்கும் தீட்சிதர் மற்றும் பணியிலிருந்த 15 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உ.பி., மாநிலம் அயோத்தியில், வரும், 5ல், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை எனப்படும் அடிக்கல் நாட்டு விழா, கோலாகலமாக நடக்க உள்ளது. பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டுகிறார். கொரோனா பரவல் காரணமாக மொத்தம் 200 பேர் மட்டுமே இந்த பூமி பூஜையில் கலந்து கொள்ளவுள்ளதாக அறக்கட்டளை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மேலும், பக்தர்கள் யாரும் அயோத்தி வர வேண்டாம் என்றும், அடிக்கல் நாட்டு விழா டிவி, இணையதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்பதால் மக்கள் வீட்டிலிருந்து டிவியில் காணலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பூமி பூஜைகளுக்கான சடங்குகள் குழுவில் அங்கம் வகிக்கும் தீட்சிதர் ஒருவருக்கும், அங்கு காவல் பணியிலிருந்த 15 போலீசாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

nantri https://www.dinamalar.com/

No comments: