வெடிமணியமும் இடியன் துவக்கும் - குறும் படம் ஒரு பார்வை - கானா பிரபா

.ஈழத்துக் குறும்பட இயக்கத்தில் மிக முக்கியமானதொரு படைப்பாக இன்று வெளியாகியிருக்கிறது.

ஈழத்துப் படைப்பாளிகளில் சகோதரன் மதிசுதா MaThi Sutha நடிகராக, இயக்குநராக முன்னரேயே அறியப்பட்ட ஆளுமை என்றாலும் இந்தப் படைப்பைச் சற்று முன்னர் பார்த்த போது நெகிழ்வும், பெருமிதமும் கலந்ததொரு உணர்வு எழுந்தது.

எமது ஈழத்தின் நிகரற்ற கலைஞன் முல்லை யேசுதாசன் Mullai Jesuthasan அண்ணரின் மறைவின் பின்னர் வெளிவரும் படைப்பாக இதைக் கண்ணுற்ற போது கலங்கிப் போனேன். இந்த அற்புதமான படைப்பாளி இன்னும் இருந்திருந்தால் இது போன்ற எவ்வளவு அற்புதமான படைப்புகளை அநாயசமாகச் செய்து விட்டுக் கடந்திருப்பார்.

ஈழத்துத் திரை இயக்கத்தில் "வெடிமணியமும் இடியன் துவக்கும்" மிக முக்கியமானதொரு படைப்பு என்பேன்.
அது ஏன் அவ்வளவு முக்கியமானது என்பதை இங்கே சுடச் சுடப் பகிர்ந்தளிக்கிறேன்.

வெடிமணியமும் இடியன் துவக்கும் - எனது பார்வையில்


வெடிமணியமும் இடியன் துவக்கும் - குறும் படத்தைத் தவற விடாமல் பாருங்கள், இங்கே

No comments: