"புதுயுகம் பிறக்கிறது" (சிறுகதை) - மு.தளையசிங்கம் ஒலி வடிவில் : செ.பாஸ்கரன் #ஈழத்தவர்_கதை_கேட்போம் - கானா பிரபா

.

"புதுயுகம் பிறக்கிறது" (சிறுகதை) - மு.தளையசிங்கம் 
ஒலி வடிவில் : செ.பாஸ்கரன்
#ஈழத்தவர்_கதை_கேட்போம்

https://www.youtube.com/watch?v=Dtr3l--c5oQஈழத்து எழுத்தாளர்களை அவர்களது சிறுகதைகளினூடே வெளிக் காட்டும் தொடரில் இம்முறை மு.தளையசிங்கம் அவர்களது “புதுயுகம் பிறக்கிறது” சிறுகதையின் ஒலிப் பகிர்வோடு வந்திருக்கிறோம்.

ஈழத்தின் முக்கியமான ஆளுமைகளில் ஒருவரான மு.தளையசிங்கம் அவர்கள் 1935 இல் பிறந்து 1973 ஆம் ஆண்டு வரை வாழ்ந்தவர். எழுத்துப் பயணத்தில் 1956 ஆம் ஆண்டிலிருந்து வெறும் 17 ஆண்டுகால இவரது இயக்கத்தில் சிறுகதைகள்நாவல்கள்கவிதைகள்கட்டுரைகள் போன்றவற்றின் வழியாக இலக்கியப் பங்களிப்புச் செய்தவர்வெங்கட் சாமிநாதன்சுந்தரராமசாமி உள்ளிட்ட மூத்த தமிழகத்து இலக்கியவாதிகள் வரை ஈர்க்கும் அளவுக்கு முக்கியமானதொரு படைப்பாளி என்பது பதிவு செய்ய வேண்டியதொன்று.தளையசிங்கம் தமிழின் முக்கியமான மீபொருண்மைச் சிந்தனையாளராக அறியப்படுபவர்சமூகப் போராளியாகவும்சிந்தனாவாதியாகவும் இருந்தவர் மானுட குலத்தின் அறிவார்ந்த பரிணாமத்தைப்பற்றிய கருத்தாக்கங்களை உருவாக்கினார். இதன் வழி மெய்யியல் ஆய்வுகளையும் எழுதினார். ஈழத்தின் மிக முக்கியமானதொரு கவிஞர் மு.பொன்னம்பலம் (மு.பொ) இவரின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கே பகிரப்படும் சிறுகதையின் ஒலி வடிவத்தை வழங்கியிருப்பவர்தளையசிங்கம் பிறந்த அதே புங்குடுதீவு மைந்தன் கவிஞர் செ.பாஸ்கரன். கவிஞராகதமிழ் முரசு அவுஸ்திரேலியா இணையப் பத்திரிகையின் ஆசிரியராகத் தடம் பதித்துத் தொடர்பவர்.
புதுயுகம் பிறக்கிறது கதை மெஞ்ஞானத்திற்கும் விஞ்ஞானத்திற்குமிடையிலான ஊடாடலை கணவன் , மனைவி என்ற பாத்திரக் குறிகள் வழி நகர்த்துகின்றது. 
கவிஞர் செ.பாஸ்கரன் அவர்கள் மு.தளையசிங்கத்தின் கதையை உயிரோட்டிய அனுபவத்தைக் கேட்போம் தொடர்ந்து.


அன்புடன் 
கானா பிரபா

https://www.youtube.com/watch?v=Dtr3l--c5oQ

No comments: