இராணுவத்தால் காணாமலாக்கப்பட்டோரின் நினைவு தினம் அனுஸ்டிப்பு
3 ஆவது நாளாகவும் சி.ஐ.டி.யில் ஆஜரான சுவிஸ் தூதரக ஊழியர்!
யாழ். விமான நிலையத்திற்கு 300 மில்லியன் ரூபா கொடை வழங்கும் இந்தியா
போரிஸ் ஜோன்சனுக்கு ஜனாதிபதி,பிரதமர் வாழ்த்து
வெள்ளை வேன் தொடர்பில் கருத்து தெரிவித்த இருவர் கைது!
ஜனாதிபதியை சந்தித்த ஆசியான் அமைப்பு நாடுகளின் தூதுவர்கள்
இது பௌத்த நாடு- யாழில் படையினர் முன்னிலையில் பாதுகாப்புசெயலாளர்
ஊடகவியலாளரை பொலிஸ் விசாரணைக்கு வருமாறு அழைப்பு !
சுவிட்சர்லாந்து தூதரக ஊழியர் கடத்தல் விவகாரம் ; கோரிக்கையை நிராகரித்த நீதிவான்
இராணுவத்தால் காணாமலாக்கப்பட்டோரின் நினைவு தினம் அனுஸ்டிப்பு
09/12/2019 கடந்த 1984 ஆம் ஆண்டு வவுனியா சேமமடுவில் கடத்தப்பட்ட 28 பேரின் நினைவுதினம் நேற்று (08.12) இடம்பெற்றது.

சேமமடு பிரதேச மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு சேமமடு பிள்ளையார் ஆலய வளாகத்தில் விசேட பூஜை வழிபாடுகளும் நடைபெற்றது.

நிகழ்வில் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தார்கள், உறவினர்கள், பொதுமக்கள், நலன் விரும்பிகள் என அனைவரும் கலந்து கொண்டனர். நன்றி வீரகேசரி
3 ஆவது நாளாகவும் சி.ஐ.டி.யில் ஆஜரான சுவிஸ் தூதரக ஊழியர்!
10/12/2019 கொழும்பில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தில் கடமையாற்றும் இலங்கையைச் சேர்ந்த பெண் ஊழியர், வாக்குமூலம் வழங்குவதற்காக இன்று மூன்றாவது நாளாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகியுள்ளார்.
கடத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் கொழும்பில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தில் கடமையாற்றும் இலங்கையைச் சேர்ந்த பெண் ஊழியர், பாலியல் துன்புறுத்தல்கள் மற்றும் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பதை துல்லியமாக கண்டறிய நேற்றைய தினம் அவர் விஷேட சட்ட வைத்திய பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார்.
அத்துடன் அவரிடம் நேற்றும் நேற்றுமுன்தினம் கொழும்பு கோட்டையில் உள்ள சி.ஐ.டி. தலைமையகமான நான்காம் மாடியில் வாக்குமூலங்கள் பெறப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
யாழ். விமான நிலையத்திற்கு 300 மில்லியன் ரூபா கொடை வழங்கும் இந்தியா
14/12/2019 யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை தரமுயர்த்துவதற்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக இந்திய அரசாங்கம் உறுதி அளித்துள்ளது.
கைத்தொழில் ஏற்றுமதி, முதலீட்டு ஊக்குவிப்பு, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அண்மையில் இந்தியத் தூதுவர் தரன்ஜித் சிங் சந்துவுடன் நடத்திய சந்திப்பின் போதே இந்த உறுதிமொழி அளிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பு தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் பிரசன்ன ரணதுங்க,
“பயணிகளுக்கான வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கும் பொதிகளை நகர்த்தும் பட்டியை அமைப்பதற்கும் இந்தியா 300 மில்லியன் ரூபா கொடையை வழங்குவதாக உறுதியளித்துள்ளது.
பிராந்திய விமானப் போக்குவரத்துக்காக யாழ்ப்பாணம் விமான நிலையத்தை முன்னைய அரசாங்கம் அவசரமாக திறந்த போதும், அது சரியான முறையில் செயற்படுத்தப்படவில்லை.
அங்கு விமானங்களுக்கு வழிகாட்டும், கட்டுப்படுத்தும், தரையிறங்கும் கருவிகள் கூட இல்லை. எனவே, பிராந்திய விமானங்களை இயக்குவதற்கான வசதிகளை நாங்கள் மேம்படுத்த வேண்டும்.
இந்திய தூதுவர் தரன்ஜித் சிங் சந்து விடுத்த வேண்டுகோளின் பேரில், நாட்டை விட்டு வெளியேறும் பயணிகளுக்கு விதிக்கப்படும் வரிகளை குறைப்பதற்கான சாத்தியங்களை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது.” என்று தெரிவித்துள்ளார். நன்றி வீரகேசரி
போரிஸ் ஜோன்சனுக்கு ஜனாதிபதி,பிரதமர் வாழ்த்து
14/12/2019 பிரித்தானிய பொதுத்தேர்தலில் வெற்றிபெற்றுள்ள போரிஸ்ஜோன்சனுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பொதுத் தேர்தல்களில் மகத்தான வெற்றியைப் பெற்றதற்கு போரிஸ்ஜோன்சனுக்கும் கொன்சவேர்ட்டிவ் கட்சிக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் வெற்றியானது தேசிய கொள்கை சார்பு அரசாங்கங்களின் தற்போதைய உலகளாவிய போக்கை பிரதிபலிக்கின்றது. புதிய பிரதமருக்கும், அரசாங்கத்திற்கும் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் மக்களுக்கும் எனது வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.

பிரதமர் மகிந்த ராஜபக்ஷ வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 2019 பிரித்தானிய பொதுத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பிரதமர் போரிஸ்ஜோன்சனுக்கும் கொன்சவேர்ட்டிவ் கட்சிக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது தீர்க்கமான தலைமைத்துவம் இந்த வெற்றிக்கு வழிவகுத்தது என்பதில் சந்தேகமில்லை. பிரதமராக பதவி வகிக்கும் காலத்திற்கு எனது வாழ்த்துகள் “ என தெரிவித்துள்ளார்.

வெள்ளை வேன் தொடர்பில் கருத்து தெரிவித்த இருவர் கைது!
14/12/2019 ஐ.தே.கவின் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவின் ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு வெள்ளை வேன் தொடர்பில் கருத்து தெரிவித்த இருவர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மாதம் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் பிரசாரக் காலகட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவால் ஏற்பாடுசெய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வெள்ளை வேன் சாரதி என தன்னை அடையாளம் படுத்திக் கொண்டு ஜனாதிபதி வேட்பாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான கோத்தாபய ராஜபக்ஷவுக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்த இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. நன்றி வீரகேசரி
ஜனாதிபதியை சந்தித்த ஆசியான் அமைப்பு நாடுகளின் தூதுவர்கள்
13/12/2019 தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பு (ஆசியான் - ASEAN) நாடுகளின் தூதுவர்கள் குழுவினர் இன்று (13) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை சந்தித்தனர்.

தாய்லாந்து, இந்தோனேசியா, மியன்மார், வியட்நாம், மலேசியா ஆகிய நாடுகளின் தூதுவர்கள் மற்றும் கொன்சியுலர்கள் இந்த சந்திப்பில் கலந்துகொண்டதுடன், அவர்கள் முதலில் தமது வாழ்த்துகளை ஜனாதிபதிக்கு தெரிவித்தனர்.

இலங்கைக்கும் தமது நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு தொடர்புகளை விருத்தி செய்தல் தொடர்பாக இதன்போது கலந்துரையாடியதுடன், இதற்காக தாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் எனவும் தூதுவர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர்.

மேலும் பிராந்திய ஒத்துழைப்பினை மேம்படுத்தி எதிர்கால சவால்களை வெற்றி கொள்வதற்கு ஒன்றிணைந்து செயற்படுதல் தொடர்பாகவும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. நன்றி வீரகேசரி
இது பௌத்த நாடு- யாழில் படையினர் முன்னிலையில் பாதுகாப்புசெயலாளர்
13/12/2019 விடுதலைப்புலிகள் புத்துயிர் பெற முயலும்அதேவேளை தங்கள் மதத்தினை பிழையாக விளங்கிக்கொண்டுள்ள தீவிரவாத இளைஞர் குழுவொன்று நாட்டின் அமைதி நிலையை குழப்புவதற்கு முயலும் இந்தவேளையில் இவ்வாறன சக்திகளை கண்காணித்து நாட்டை பாதுகாப்பாக வைத்திருப்பதில் புலனாய்வு அமைப்புகள் ஆற்றவேண்டிய முக்கிய பங்களிப்பு உள்ளது என பாதுகாப்பு செயலாளர் கமால் குணரட்ண யாழ்ப்பாணத்தில் கருத்து வெளியிட்டுள்ளார்.
யாழ் குடாநாட்டிற்கான விஜயத்தின் போது படையினர் மத்தியில் உரையாற்றுகையில் அவர் இதனைதெரிவித்துள்ளார்.
முஸ்லீம்தீவிரவாத சக்திகள் நாட்டில் பேரழிவை ஏற்படுத்தியுள்ள என தெரிவித்துள்ள பாதுகாப்பு செயலாளர் அவர்கள் நாட்டின் பொருளாதாரத்தைஅழித்துள்ளதுடன் சந்தேகத்தையும் அச்சத்தையும் உருவாக்கியுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து முழுமையான விசாரணைகள் அவசியம் என குறிப்பிட்டுள்ள கமால்குணரட்ண இந்த பயங்கரவாத தாக்குதல்களிற்கு யார் காரணம் என்பதை கண்டறியவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது பௌத்த நாடு, மக்களிற்கு தமதுசொந்த மதங்களை பின்பற்றுவதற்கான உரிமையுள்ளது,அனைத்து மதத்தினரும் அமைதியாக வாழக்கூடிய சூழலை ஏற்படுத்துவதுபடையினரின்கடமை என அவர் குறிப்பிட்டுள்ளார். நன்றி வீரகேசரி
ஊடகவியலாளரை பொலிஸ் விசாரணைக்கு வருமாறு அழைப்பு !
13/12/2019 மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளரை பொலிஸ் விசாரணைக்கு வருமாறு ஏறாவூர் பொலிஸார் அழைப்பு விடுத்துள்ளனர்.

செங்கலடி பிரதேச செயலாளர் வில்வரெட்ணத்திற்கு எதிராக மட்டக்களப்பு கச்சேரிக்கு முன்னால் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தொடர்பாக ஊடகங்களில் செய்தி வெளியிட்டமை குறித்து பிரதேச செயலாளர் வில்வரெட்ணத்தினால் செய்யப்பட்ட முறைப்பாட்டை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் செ.நிலாந்தனை ஏறாவூர் பொலிஸார் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறும் ஊழல் தொடர்பாக செய்திகளை வெளியிட்டு வரும் சுதந்திர ஊடகவியலாளர் நிலாந்தன் மீது கடந்த காலங்களில் பல தடவைகள் இதுபோன்ற பொலிஸ் விசாரணைகள் நான்கு தடவைக்கு மேல் நடைபெற்றுள்ள நிலையில் தற்போது மீண்டும் ஊழல் தொடர்பான செய்திகளை வெளியிட்டதற்காக அவரை ஏறாவூர் பொலிஸார் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.
ஊடகவியலாளர் நிலாந்தன் மீதான விசாரணைக்கு மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளது.
குறித்த கண்டன அறிக்கையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் காலத்துக்கு காலம் ஊழல் செய்யும் அதிகாரிகள் தங்களது ஊழல்கள் குறித்த செய்திகள் வெளிவரும் போது அதனை மூடி மறைப்பதற்காக ஊடகவியலாளர்கள் மீது அதிகாரத்தை பயன்படுத்தி தங்களது ஊழல்கள் வெளிவருவதை தடுப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது ஆட்சிக்கு வந்துள்ள அரசாங்கம் உடனடியாக இதுபோன்ற ஊழல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இனியும் ஊழல் செய்யும் அரச அதிகாரிகள் தங்களது ஊழல்களை மறைப்பதற்காக பாதுகாப்பு தரப்பையும் சட்டத்தையும் தவறாகப் பயன்படுத்தி ஊடகவியலாளர்களை அச்சுறுத்துவதை நிறுத்த வேண்டும். இது குறித்து புதிய ஜனாதிபதியின் கவனத்திற்கு நாம் கொண்டு செல்ல உள்ளோம் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம் தனது கண்டன அறிக்கையில்குறிப்பிடப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி
சுவிட்சர்லாந்து தூதரக ஊழியர் கடத்தல் விவகாரம் ; கோரிக்கையை நிராகரித்த நீதிவான்
(எம்.எப்.எம்.பஸீர்)
12/12/2019 கடத்தப்பட்டு, அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் கொழும்பில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தில் கட்மையாற்றும் உள் நாட்டு பெண் ஊழியரின் வெளிநாட்டு பயணத் தடையானது எதிர்வரும் 17 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவரை விஷேட மானசீக வைத்திய நிபுணர்கள் கொண்ட குழுவொன்றின் முன்னிலையில் ஆஜர் செய்து அறிக்கை சமர்ப்பிக்கவும் இன்று கொழும்பு பிரதான நீதிவான் லங்க ஜயரத்ன விஷேட உத்தரவொன்றினைப் பிறப்பித்தார்.
குறித்த பெண்ணின் மன நிலை தொடர்பில் பரிசோதனை ஒன்று முன்னெடுப்பது அவசியம் என பெண் சட்ட வைத்தி அதிகாரி மன்றுக்கு அறிவித்திருந்த நிலையிலேயே , கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரிக்கு நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
இதேவேளை, மேற்படி பெண் அதிகாரி சுகயீனமுற்றுள்ள நிலையில் எஞ்சிய வாக்கு மூலங்களை சி.ஐ.டி.யினர் சுவிட்சர்லாந்து தூதுவரின் இல்லத்துக்கு வருகை தந்து பதிவு செய்ய உத்தரவிடுமாறு அப் பெண்ணின் சட்டத்தரணி உபுல் குமரப்பெரும முன்வைத்த கோரிக்கையையும் நீதிவானால் நிரகாரிக்கப்பட்டது. நன்றி வீரகேசரி
No comments:
Post a Comment