.
Brayan Brow Theater Bankstown மண்டபத்தில் டிசம்பர் மாதம் 13ம் திகதி வெள்ளிக்கிழமை திரிவண்ணம் என்ற பரத நாட்டிய நிகழ்ச்சி சகானா , இன்பனா , ஆரணா சகோதரிகளால் ஆடப்பட்டது, சென்ற வருடம் அரங்கேற்றம் செய்துகொண்ட சகோதரிகளின் நடனநிகழ்வு மீண்டும் இன்று இடம் பெற்றது. அரங்கேற்றம் செய்தவர்கள் பலர் மீண்டும் தனிக்க கச்சேரி நடத்துவதென்பது இன்று காணக் கிடையாத ஒரு விடயமாகவே இருந்து வருகிறது. இதற்கு காரணம் இதை நடை முறைப் படுத்துவது ஒரு பகீரத பியத்தனமே. இதற்கு கலைமேல் கொண்ட ஆறா காதலும் அதை ஊக்குவிக்கும் பெற்றோர் களுமே காரணம். இவர்கள் முயற்சி திருவினை ஆகி அருமையாக கச்சேரி அமைந்தது. அவர்கள் மேலும் கலையுலகில் பிரகாசிக்க வேண்டும்.
அன்றைய நிகழ்விலே லண்டனில் இருந்து வருகை தந்த நடன ஆசிரியர் டாக்டர் ஜெயந்தி யோகராஜா நடன கலை பற்றி எழுதிய நூல் வெளியீடும் நடைபெற்றது. நிகழ்ச்சியை திரு திருநந்தகுமார் ஆரம்பித்து அழகாக ஜெயந்தி யோகராஜாவை சிட்னி சபையோருக்கு அறிமுகப் படுத்தினார். இவர் ஆடலைக் கற்றுக் கொடுக்கும் ஆசிரியை மட்டுமல்லாது தானே ஆடும் ஒரு நர்த்தகியாக விளங்குவதுடன் ஆடல் கலை பற்றி நூலும் எழுதியுள்ளார் என்று கூறி அது பற்றி மூத்த கலைஞரான நாட்டியக் கலாநிதி கார்த்திகா கணேசர் உங்களுக்கு எடுத்துக் கூறுவார் என்றார். கார்த்திகா கணேசர் ஜெயந்தியுடன் மேடைக்கு வந்தார், இவர் சுருக்கமாக எமது பண்டைய நூலான சிலப்பதிகாரத்திலே மாதவிக்கு ஆடலைப் பயிற்றுவித்த ஆசிரியன் நாட்டிய நன்னூல் கற்றுணந்தோன் என இளங்கோ கூறியுள்ளார், அதனாலே எமது ஆடலிலே ஆடல் பற்றிய நூல்கள் இருந்துள்ளன
காலாதி காலமாக முறை வகுக்கப்பட்ட ஆடலை ஆடுகிறோம் எனக் கூறி, ஜெயந்தியின் நூல் இன்றய பரீட்சை பாடத்திட்டத்தை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டது என விளக்கினார். நூல் வெளியீட்டை இளவாலை திருக்குடும்ப கன்னியர் பாடசாலையில் இருந்து வருகை தந்த அதிபர் சங்கைக்குரிய அருட் சகோதரி சகாயநாயகி பஸ்தியாம்பிள்ளையும் , முன்னை நாள் அதிபர் சங்கைக்குரிய அருட் சகோதரி பொணவென்ச இமானுவேல் அவர்களும் வெளியிட பல ஆடல் இசை கலைஞர்கள் நூலைப் பெற்றுக் கொண்டனர்.

ஆடல் கணேச வந்தனத்துடன் ஆரம்பமானது. சகானா, இன்பனா , ஆரணா மூவரும் இதனை ஆட நிகழ்வு மங்களகரமாக ஆரம்பமானது. வழமையான பரத கச்சேரி வழிமுறைக்கு மாறுபட்ட நிகழ்வாக இது அமைந்திருந்தது. இன்றோ இறைவன் மேல் வெவ்வேறு கவுத்தங்கள் பாடப்படுகிறது. இதுவோ இராமாயண காட்சியை மையமாக கொண்டது. மிதிலையிலே உப்பரிகையில் சீதை தோழிகளுடன் பந்தாடுகிறள். பந்து கீழே விள எடுத்த இராமன் சீதையை கண்ணுற்றான். "கண்ணொடு கண் கவ்வ" கம்பன் பாடினான், வில்லை ஒடித்து சீதைக்கு மாலை யிட்டான் இராமன்.
சரஸ்வதி சபதம் ஆயகலைகளின் நாயகி வீணாவாணி சரஸ்வதி;, கல்வி தெய்வமான அவள் அருள் வேண்டிய பாடல். வாணியில் பல்வேறு நிலைகளை ஆடலாக கண்டோம். நிகழ்வில் பல பாடல்களை நடன ஆசிரியை திருமதி ஜெயந்தி யோகராஜா அவர்களே எழுதி இருந்தது குறிப்பிடத்தக்கது.
அடுத்து வந்த ஆடல் துர்கையை துதிக்கும் முரளீதரனின் கீர்த்தனம். விறுவிறுப்பான கலை அழகு நிறைந்த பாடல். ஆடலும் அற்புதமாக அமைந்தது. கொடுமைகளை அழித்துத் துவசம் செய்யும் காளியின் மகிமைகளை கண்டோம். முhகஷனை கொண்டு வெற்றிக் களிப்பில் ஆடினாள் துர்க்கா தேவி.
பெண்மை வெல்லும், மகாபாரதத்தில் ஒரு பகுதி நாடகமாக்கப்பட்டிருந்தது.
தந்தையின் பொருட்டு அம்பைஜையும் சகோதரிகளையும் கடத்துகிறார் பீஷ்மர் . வழியிலே அம்பையோ தான் பிறிதொருவனைக் மனத்தால் விரும்பி விடடபடியால் தன்னை விட்டு விடும் படி கோருகிறாள். பிறிதொருவனை மனத்தால் விரும்பியவள் தன் தந்தைக்கு ஏற்றவள் அல்ல என பீஷ்மர் அவளை விட்டு விடுகிறார். அவள் காதலனிடம் செல்ல , காதலனோ பீஷ்மரால் கவரப்பட்டு சென்றவள் என அவளை ஒதுக்கி விடுகிறான்.
பீஷ்மரிடம் மீண்ட அம்பை தனது நிலையைக் கூறி நீயே அதட்கு காரணம் அதனால் நீயே என்னை ஏற்கவேண்டும் என்கிறாள், நித்திய பிரம்மச்சாரியாக இருப்பதாக விரதம் பூண்ட பீஷ்மர் அவளை நிராகரிக்கிறார் . கோபம் கொண்ட அம்பை தீக் குளிக்கிறாள். மீண்டும் மறு பிறப்பெடுத்த அவளோ ஆணோ பெண்ணோ அற்ற திரு நங்கையாக பிறந்தாள். அவள் பீஷ்மர் மேல் கொண்ட கோபம் ஆறவில்லை அவரை கொன்று தீர்க்கவே பிறப்பெடுத்தவள், பாரதப் போரிலே பீஷ்மரைக் கொல்ல வளி அரியாக் கண்ணன் அம்பையை அவருக்கு எதிராக போரிடும் படி கூறுகின்றான். சிகண்டியாக பிறந்த அம்பை பெண் என அறிந்த பீஷ்மர் அவளுக்கு எதிராக ஆயுத எடுக்க மறுக்கிறார். சிகண்டியின் மூலம் பீஷ்மரின் உயிர் பிரிகிறது. இதுவே பெண்மை வெல்லும். இக்கதையை மூன்று சகோதரிகளும் வெவ்வேறு பாத்திரம் எடுத்து அற்புதமாக ஆடினார்கள்.
அதை அடுத்து இசை இடைவேளை சிட்னி மேடைக்கு புதியவராக பாடகர் சிக்கப்பூரில் இருந்து வருகை தந்த சாய் விக்னேஷ் அவர்கள் தனது அருமையான குரலால் நம்மை மகிழ்வித்தார். ( இனி சிட்னியில் அரங்கேற்றங்களில் இவரை காணலாம் ) வீணையிலும் , வேணுவிலும் சிட்னி சகோதர கலைஞர்களான சௌம்மியா ஸ்ரீதரனும் , வெங்கடேஷ் சிறிதரனும் அட்புதமாக வாசித்தார்கள். மிருதங்கம் கிஷன் சேகரம் ஆடலுடன் பிறந்தவர் அறிந்து அட்புதமாக மிருதங்கத்தை வாசித்து மெருகேற்றினார். இவர்கள் சிட்னியில் பிறந்து நாம் பார்க்க வளர்ந்தவர்கள் . இவர்கள் பல இளம் சிறார்களுக்கு சிறந்த எடுத்துக் காட்டு.
அடுத்து திரிவேணி சங்கமம் கங்கை ஜாமூனை காவிரி என்று மூன்று ஆறுகள் சங்கமித்தன. மூன்று சகோதரிகளும் அட்புதமாக ஆடி எம்மை மகிழ்வித்தார்கள். இதற்கான பாடலான திரிவேணி சங்கமம் என்ற அருமையான பாடலை நர்த்தகிகளின் தாயாரான திருமதி மதுபாலா ஜெறோமே எழுதியிருந்தார். இவர் நடன அரங்கேற்றத்தின் போதும் பாடல்களை எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் பணி தொடர வாழ்த்துக்கள் . நிகழ்ச்சியை நெறியாள்கை செய்த டாக்டர் ஜெயந்தி ஜோகராஜா சிட்னில் அழகான ஒரு நிகழ்வை கொடுத்து பாராட்டுக்களை பெற்றுக் கொண்டார்.

1 comment:
I enjoyed the dance like many others. Great of Jayanthi who came all the way from UK and trained the three sisters bit more than a week and to give excellent dance performance.
Post a Comment