நியூஸிலாந்தின் வடக்கே அமைந்துள்ள 'White Island' என்ற தீவிலுள்ள எரிமலையொன்று இன்று அதிகாலை முதல் வெடித்து, குமுறத் தொடங்கியுள்ளமையினால் அப் பகுதியில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறைந்தது 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அந் நாட்டு பிரதமர் ஜசிந்த ஆர்டெர்ன், எரிமலையானது வெடித்து, குமுற ஆரம்பித்த வேளையில் 'White Island' இல் அல்லது அதனை அண்மித்த பகுதியில் 100 சுற்றுலாப் பயணிகள் இருந்துள்ளதாகவும் மேலும் பலர் கணக்கெடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
எரிமலை வெடித்து, குமுற ஆரம்பித்த நேரத்தில் வேளையில் மேற்படி தீவில்  மக்கள் இருந்துள்ளதாகவும், இதன்போது சிலர் காயமடைந்துள்ளதாகவும் 'White Island' தீவை அண்மித்த கடற்கரை நகரமான 'Whakatane' மேயர் ஜூடி டர்னர் தெரிவித்துள்ளார்.
இதன் பின்னர் கப்பல்கள் மற்றும் ஹெலிகொப்டர்கள் மூலமாக குறித்த தீவுக்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை மீட்க்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
நன்றி வீரகேசரி