13 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் அன்றைய பிளஸ் - இன்றை மைனஸ்


09/12/2019  குடும்ப அர­சியல் செய்­கின்­றார்கள் என எதி­ர­ணி­யினர் என்ன தான்  மக்கள் மத்­தியில் ராஜ­பக் ஷ அணி­யி­னரை பற்றி விமர்­சனம் செய்­தாலும் இடம்­பெற்று முடிந்த ஜனா­தி­பதித் தேர்­தலில் அதை­யெல்லாம் காதில் போடாமல் கோத்­தா­பய ராஜ­பக் ஷவை ஜனா­தி­ப­தி­யாக்கி அழகு பார்த்­தனர்  மக்கள்.
எதிர்­பார்த்­தது போலவே தான் ஜனா­தி­ப­தி­யா­ன­வுடன் அண்ணன் மஹிந்­தவை  பிர­த­ம­ராக்­கினார்  ஜனா­தி­பதி  கோத்­தா­பய. தனது மற்­று­மொரு அண்ணன் சமல் ராஜ­பக் ஷவை பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்­ச­ராக்­கினார். மக்­களின் மெளனம் தொடர்­கி­றது. தேர்தல் காலத்தில்  எதி­ர­ணி­யி­ட­மி­ருந்து ஒலித்த குடும்ப அர­சியல் கோஷங்­களை  இப்­போது காண­மு­டி­ய­வில்லை.
தேர்தல் பிர­சாரக் கால­கட்­டத்தில் வேட்­பா­ள­ராக பல நிகழ்­வு­களில் பங்கு கொண்ட  கோத்­தா­பய ராஜபக் ஷவிடம் கேட்­கப்­பட்ட பல கேள்­வி­க­ளுக்கு அவரால் பதில் கூற முடி­ய­வில்லை. அதற்கு பதில் கூறி சமா­ளித்­தவர் அவ­ரது சகோ­தரர் மஹிந்த. இந்த சம்­ப­வங்­களை கூட எதி­ர­ணி­யினர் தமது பிர­சா­ரத்­துக்கு பயன்­ப­டுத்­திக்­கொண்­டனர்.
கோத்­தா­பய ஜனா­தி­ப­தி­யா­னாலும் கூட அவரை வழி­ந­டத்­து­ப­வ­ராக அவ­ரது அண்ணன் மஹிந்­தவே இருக்­கப்­போ­கின்றார்  என்­றெல்லாம் எதி­ர­ணி­யினர் மேடை­களில் பேசி மக்கள் மனதை மாற்ற முயற்சி செய்­தனர். எனினும் அவர்கள் எதிர்­பார்த்­தது ஒன்றும் இடம்­பெ­ற­வில்லை.  ஆனால் இந்த விமர்­ச­னங்­க­ளை­யெல்லாம் காதில் போட்­டுக்­கொள்­ளாத ஜனா­தி­பதி கோத்­தா­பய, தற்­போது தனது தனித்­து­வ­மான செயற்­பா­டு­களால் மக்­களை ஈர்த்து வரு­கிறார் .
தன்னால் தனித்து இயங்க முடியும் என்றும்  தனது அண்ணன் மஹிந்­தவை பின்­பற்றி அவ­ரைப்­போன்­ற­தொரு அர­சி­யலை செய்­யத்­தே­வை­யில்லை என்றும் அவர் பல விட­யங்­களில் தன்னை வெளிப்­ப­டுத்­தி­யுள்ளார். இதில் பிர­தா­ன­மாக மக்­களை கவர்ந்த விடயம் அநா­வ­சிய செல­வு­க­ளையும் வீண் விர­யங்­க­ளையும்  கட்­டுப்­ப­டுத்­துதல் ஆகும்.  மஹிந்த ஆட்சி காலத்தில்  அவர் விமர்­சிக்­கப்­பட்­ட­தற்கு பிர­தான கார­ணமே அவ­ரி­னதும் அவர் சார்ந்த அமைச்­சர்கள் மற்றும் குடும்­பத்­தி­னரின் ஆடம்­பர செல­வுகள் தான்.  இதி­லி­ருந்து விலகி நிற்க கோத்­தா­பய முடிவு செய்­தி­ருக்­கிறார்.
வெளி­நாட்டு கொள்­கை­க­ளிலும் தனித்­துவம்
இதே வேளை தான் ஜனா­தி­ப­தி­யா­ன­வுடன் இலங்­கை­யு­ட­னான தனது வெளி­நாட்டு கொள்­கை­க­ளிலும் சற்று இறுக்­கத்தை கோத்­தா­பய கடை­பி­டிக்­கின்­றாரோ எனக் கூறத்­தோன்­று­கி­றது. தனது முதல் வெளி­நாட்டு பய­ண­மாக இந்­தியா சென்­றி­ருந்த கோத்­தா­பய அங்கு பிர­தமர் மோடி உட்­பட பல இந்­திய பிர­மு­கர்­களை சந்­தித்­தி­ருந்தார்.  மோடியின் பிர­தான கோரிக்­கையே  தேர்­த­லுக்­குப்­பின்னர் இலங்­கையில் வாழ்ந்து வரும் சிறு­பான்மை மக்­களின் சமத்­துவம், நீதி, கெள­ரவம், அபி­லா­ஷை­களை  நிறை­வேற்றும் நல்­லி­ணக்க முயற்­சி­களை புதிய ஜனா­தி­பதி முன்­னெ­டுக்க வேண்டும் என்­ப­தாகும்.
அதா­வது 13 ஆவது திருத்­தச்­சட்­டத்தை அமுல்­ப­டுத்­து­வது முக்­கியம் என்­ப­தா­கத்தான் மோடியின் எதிர்­பார்ப்பு இருந்­தது. அதை மறை­மு­க­மா­கவும்  அதே வேளை இரா­ஜ­தந்­திர  அணு­கு­மு­றை­யிலும்  கோத்­தா­ப­ய­விடம் வலி­யு­றுத்­தி­யி­ருந்தார்  பிர­தமர் மோடி. இதற்கு ஜனா­தி­பதி  கோத்­தா­ப­ய­விடமிருந்து நேர­டி­யாக என்ன பதில்கள் வெளிப்­பட்­டி­ருக்கும் என்­பது எவ­ருக்கும் தெரிந்­தி­ருக்­காது.  கூடு­த­லாக கதைப்­பதை விட செயற்­பாட்டில் அதிக அக்­கறை காட்டும் ஒரு­வ­ரா­கவே கடந்த காலங்­க­ளிலும் கோத்­தா­பய நோக்­கப்­பட்­டி­ருக்­கிறார். எனினும் மரி­யாதை நிமித்தம் அவர் பிர­தமர் மோடி­யிடம் அது குறித்து பரி­சீ­லிக்­கலாம் அல்­லது அதற்­கீ­டான மாற்­றுத்­திட்­டங்கள் பற்றி கதைப்போம் என்று கூறி­யி­ருக்­கலாம்.  அதற்கு அடுத்­த­தாக அவர் இந்­திய ஊட­கங்­க­ளி­டமே இவ்­வி­டயம் பற்றி மனந்­தி­றந்து கதைத்­தி­ருந்தார். இதை இந்­திய அர­சாங்­கத்­துக்கு வழங்­கிய செய்­தி­யா­கவும் நாம் கொள்­ளலாம். பிர­தமர் மோடியை சந்­தித்த பின்னர் ஜனா­தி­பதி கோத்­தா­பய புது டெல்­லியில் வைத்து  தி ஹிந்து    ஆங்­கிலப் பத்­தி­ரி­கைக்கு வழங்­கிய பேட்­டியின் போது  13 ஆவது திருத்­தச்­சட்­டத்தில் சில விட­யங்­களை அமுல்­ப­டுத்­து­வது சாத்­தி­ய­மில்லை என்று தெரி­வித்­துள்ளார்.   அதா­வது தமிழர் வாழும் பிர­தே­சங்­களில் அபி­வி­ருத்­தி­யைப்­பற்­றியே தான் யோசிப்­ப­தா­கவும்  குறித்த பகு­தி­களில் அபி­வி­ருத்தி பற்றி பெரும்­பான்­மை­யி­னரும் அக்­கறை கொண்­டி­ருப்­ப­தா­கவும் அர­சியல் வேறு அபி­வி­ருத்தி வேறு என்று பொருள்­பட பேசி­யுள்ளார்.
கடந்த காலங்­களில் கடும் போக்­கா­ள­ராக சித்­தி­ரிக்­கப்­பட்­டி­ருந்­தாலும் சிங்­கள மக்­களின் கணி­ச­மான வாக்கில் தெரிவு செய்­யப்­பட்­டுள்ள ஜனா­தி­பதி கோத்­தா­பய,  அம்­மக்­களின்  இன உணர்­வு­களை சீண்­டிப்­பார்க்க முடி­யாத பல­கீ­ன­மா­ன­வ­ரா­கவே இவ்­வி­ட­யத்தில் விளங்­கு­கிறார்.  13 ஆவது திருத்­தச்
­சட்­டத்தை சிங்­கள மக்­களின் விருப்­பத்­துக்கு எதி­ராக செயற்­ப­டுத்த முடி­யாது என்றும் அவர் நேர­டி­யா­கவே தெரி­வித்­தி­ருக்­கிறார்.
  மஹிந்த ராஜ­பக் ஷ ஜனா­தி­ப­தி­யாக இருந்த போது 13 ஆவது திருத்­தச்­சட்­டத்­தைப்­பற்றி பேசி­யதை விட இது சற்று மாறுப்­பட்ட கருத்­தாகும். பல சந்­தர்ப்­பங்­களில் மஹிந்த 13 பிளஸ் பற்­றியே சர்­வ­தே­சத்­துக்கும் கூறி வந்தார்.  தாம் அதற்கு அப்பால் செல்­லவே விரும்­பு­கிறோம் என்று கூறி வந்த மஹிந்த தனது ஆட்சிக் காலத்தில் அதை இம்­மி­ய­ளவும் அமுல்­ப­டுத்­த­வில்லை. அதேவேளை இத்­தி­ருத்­தச்­சட்­டத்தின் படி மாகா­ணங்­க­ளுக்கு பொலிஸ், காணி அதி­கா­ரங்­களை வழங்க முடி­யாது என்றும் நேர­டி­யாக கூறி­யி­ருக்­க­வில்லை.
ஆனால் ஜனா­தி­பதி கோத்­தா­பய மாகா­ணங்­க­ளுக்கு அதி­கா­ரங்கள் வழங்­கு­வ­தற்குப் பதி­லாக மாற்று யோச­னைகள் பரி­சீ­லிக்­கப்­படும் என்று கூறி­ய­தோ­டில்­லாமல் 13 பிளஸ் என்று எங்­கேயும் கூற­வில்லை. அவர் தமிழ் மக்கள் பிர­தே­சங்­களில் அபி­வி­ருத்­தியைப் பற்றி மட்­டுமே சிந்­திக்­கிறார். அதில் கார­ணங்­க­ளில்­லா­ம­லில்லை. துரித அபி­வி­ருத்தித் திட்­டங்கள் மூலம் வேலை வாய்ப்பு , பொரு­ளா­தார மீட்சி  போன்ற விட­யங்­களில் முன்­னேற்றம் காணப்­பட்டால் இந்த அதி­காரப் பகிர்வு என்ற விட­யத்தைப் பற்றி ஏன் மக்கள் யோசிக்­கின்­றார்கள் என அவர் சிந்­தித்­தி­ருக்­கலாம். அது தான் உண்­மையும் கூட. அதி­காரப் பகிர்வின் மூலம் இந்த மக்கள் அர­சியல் ரீதி­யான உரி­மை­களை மட்­டுமே பெறு­வார்கள். அதன் மூலம் இவர்­க­ளுக்கு பொரு­ளா­தார மீட்­சி­யினைப் பெற்­றுக்­கொ­டுக்க குறித்த மக்­களின் பிர­தி­நி­திகள் இடம்­கொ­டுப்­பார்­களா என்­பதும் நிச்­ச­ய­மில்லை. ஏனென்றால் அவர்­களின் அர­சியல் ஸ்திரத்­திற்கு இந்த மக்­க­ளுக்கு ஏதாவ­தொரு பிரச்­சினை காலங்­கா­ல­மாக இருக்க வேண்­டுமே?
எது எப்­ப­டி­யா­னாலும் இறுதி யுத்­தத்­திற்­குப்­பி­றகு அதி­காரப் பகிர்வு குறித்த வடக்கு, கிழக்கு வாழ் சிறு­பான்மை மக்­களின் மனப்­போக்கு  எப்­ப­டி­யா­னது என்­பது குறித்து இம்­மக்­களின் பிர­தி­நி­திகள் ஆராய்ந்­தி­ருக்­க­வில்லை. பல சேதங்கள் இழப்­பு­க­ளுக்­குப்­ பி­றகும் இந்த அதி­காரப் பகிர்வு விட­யத்தில் தமது பிர­தி­நி­திகள் ஏன் பிடி­வா­த­மாக இருக்­கின்­றனர் என்­பது அவர்­க­ளுக்கு நன்­றா­கவே தெரியும்.
இன்னும் எத்­தனை நாட்­க­ளுக்கு இந்த ஒரு விட­யத்­தையே வலி­யு­றுத்தி அர­சியல் செய்து கொண்­டி­ருப்­பது என பிர­தி­நி­திகள் யோசிக்க வேண்­டிய காலம் வந்­தி­ருக்­கின்­றது. ஏனென்றால் எந்­நி­லை­யிலும் அதி­காரப் பகிர்வு பற்றி புதிய ஜனா­தி­பதி பேசப்­போ­வ­தில்லை. இனப்­பி­ரச்­சினை விவ­காரம் குறித்த தீர்­வுகள் பற்றி அவர் தனது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்­தி­லேயே எங்கும் குறிப்­பி­ட­வில்லை. இந்­நி­லையில் பேச்­சுக்கு தயா­ராக இருக்­கிறோம் என்றும்  சாத­க­மாக பதில் இருந்தால் ஆத­ரவு அளிப்­பது பற்றி யோசிக்­கலாம் என்றும் தமிழ்த்­த­ரப்­பினர் இன்னும் பேசிக்­கொண்­டி­ருந்தால் நடக்­கப்­போ­வது
ஒன்­று­மில்லை.
தனது பத்­தி­ரிகை பேட்டி ஒன்றின் மூலம்  இந்­திய அர­சாங்­கத்­துக்கே சில விட­யங்­களை கூறி­யுள்ள ஜனா­தி­பதி இங்கு தமிழ்த் தரப்­புடன் அவர்கள் கூறும் விட­யங்­களை காதில் போட்­டுக் ­கொள்­வாரோ தெரி­ய­வில்லை.  தான் சிங்­கள மக்­களின் பெரும்­பான்­மை­யான வாக்­கு­களால் தெரிவு செய்­யப்­பட்ட ஜனா­தி­பதி என்ற அடிப்­ப­டையில்  13 ஆவது திருத்தம் தொடர்­பா­கவோ அல்­லது அதி­காரப் பகிர்வு சம்­பந்­த­மா­கவோ பேசப்­போ­வ­தில்லை என்­பதை அவர் இந்­தி­யா­வுக்கு மட்­டு­மல்ல இலங்கை தமிழ்ப் பிர­தி­
நி­தி­க­ளுக்கும் தான் மறை­மு­க­மாகக் கூறி­யுள்ளார்.  குறித்த பத்­தி­ரிகை பேட்­டியில் அவர் இலங்கை தமிழ் தலை­வர்­களைப் பற்றி விமர்­சிக்­கவும் தவ­ற­வில்லை. அர­சியல் விவ­கா­ரங்­களைப் பற்றி தன்னால் கலந்­து­ரை­யாட முடியும் என்று தெரி­வித்த அவர் கடந்த 70 வரு­டங்­க­ளாக தமிழ்த்­த­லை­வர்கள் அதி­காரப் பகிர்வு என்ற விட­யத்தை மட்­டுமே இந்த மக்­க­ளுக்­காக கூறி காலத்தை கடத்தி விட்­டார்கள் என்று தெரி­வித்­துள்ளார்.  ஆனால் அவர்கள் கூறிய அந்த அதி­காரப் பகிர்வு பற்றி இறு­தியில் ஒன்­றுமே நடக்­க­வில்லை என்றும் அவர் உறு­தி­யாக தெரி­வித்­தி­ருந்தார்.  எனவே இவ­ரது கால­கட்­டத்தில்  13 ஆவது திருத்­தச்­சட்டம் என்­பது மைன­ஸா­கவே இருக்­கப்
­போ­கின்­றது என்­பது தெளி­வா­கின்­றது.
மேலும் தான் எப்­போதும் வெளிப்­ப­டை­யான ஒருவர் என்­ப­தையும்  முடி­யாத காரி­யங்­களை அப்­ப­டியே தெரி­விக்கும்   ஒரு நபர் என்­ப­தையும் தனது இந்­திய விஜ­யத்தின் போது கோத்­தா­பய நிரூ­பித்­துள்ளார்.   ‘எம்மால் சில விட­யங்­களை செய்ய முடி­யா­தி­ருந்தால் அது பற்றி நேர்­மை­யாக புது டெல்­லிக்கு கூற முடியும் என நான் கரு­து­கிறேன் ‘ என அவர் ஹிந்து பத்­தி­ரி­கைக்கு அளித்த பேட்­டியில் தெரி­வித்­தி­ருந்­தமை முக்­கி­ய­மா­னது.
இதேவேளை இந்­திய விஜ­யத்­திற்­குப்­பி­றகு ஜனா­தி­பதி கோத்தா இந்­தியா சீனா ஆகிய இரு­நா­டு­க­ளுக்கும் ஒரு முக்­கிய விட­யத்தை வலி­யு­றுத்தி தமது நாட்டில் முத­லீடு செய்ய வரு­மாறு அழைப்பு விடுத்­தி­ருந்தார். ‘ பூகோ­ளத்தின் பெரும் சக்­தி­க­ளான இந்­தியா மற்றும் சீனா ஆகிய நாடு­களை எங்கள் மீது நம்­பிக்கை வைத்து இறை­யாண்மை மிக்க ஒரு நாடாக எங்­களின் தனித்­து­வத்­திற்கு மதிப்­ப­ளித்து, எமது எதிர்­கா­லத்தின் மீது முத­லிட வரு­மாறு அழைத்­தி­ருக்­கின்றேன்   என அவர் தெரி­வித்­தி­ருந்தார்.
இறை­யாண்மை மிக்க நாடாக எங்கள் தனித்­து­வத்­திற்கு மதிப்­ப­ளித்து என்றால் எம்மை சுயா­தீ­ன­மாக இயங்க விடுங்கள் என்­பதே அதன் பொருள்.  இருந்தாலும் சிறுபான்மை மக்களின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும் என இந்தியா கூறியது மட்டுமல்லாது இலங்கைக்கு உடனடியாக  பாதுகாப்பு மற்றும் அபிவிருத்திக்கான நிதி உதவியையும் வழங்கியுள்ளமை முக்கிய விடயம்.
அதை விட ஜனாதிபதிக்கு எதிர்பாராத ஒரு அன்பளிப்பையும் பிரதமர் மோடி வழங்கியிருந்தார். அதாவது ஜனாதிபதி கோத்தாபய இலங்கை இராணுவத்தில் பணியாற்றிய போது இந்தியாவில் அவர் மேற்கொண்ட இராணுவ பயிற்சியில் பங்கு கொண்டவர்களின் படம் அது. அந்த அன்பளிப்பிலும் அரசியல் இல்லாமலில்லை.  ஒரு இராணுவ அதிகாரியான  அனுபவத்திலேயே அவர் பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றியிருந்தார். அதுவே விடுதலை புலிகளுடனான இறுதி யுத்தத்தில் பல வியூகங்களை வகுக்க அவருக்கு பேருதவி புரிந்தது. மட்டுமன்றி இறுதி யுத்த நேரத்தில் இந்தியாவும் இலங்கைக்கு உதவிய ஒரு நாடு.  பெரும்பான்மை மக்கள் கோத்தாபயவை ஜனாதிபதியாக தெரிவு செய்தமைக்கு அதுவும் ஒரு காரணம். ஆகவே  யுத்த வெற்றியில் மட்டுமல்லாது ஜனாதிபதியாக வெற்றி பெறுவதற்கும் இந்தியா பின்புலத்தில் இருந்துள்ளது என்பதை உணர்த்தும் செய்தியாக அந்த படத்தை பிரதமர் மோடி வழங்கியிருக்கலாம்.
- சிவலிங்கம் சிவகுமாரன் - நன்றி வீரகேசரி 














No comments: