தமிழ் சினிமா - டியர் காம்ரேட் திரைவிமர்சனம்


சில நடிகர்கள், நடிகைகள் படங்கள் என்றால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் ஒரு ஜோடியை மீண்டும் ஸ்கிரீனில் எதிர்பார்க்கிறார்கள் என்றால் அது விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா காம்போ தான். இவர்கள் இருவரின் நடிப்பில் தற்போது வந்துள்ள டியர் காம்ரேட் படம் எப்படி இருக்கிறது என பார்க்கலாம்.

கதைக்களம்

படத்தின் ஹீரோ விஜய் தேவரகொண்டா காம்ரேட் கொள்கைகள் கொண்டவர். அவருக்கு அழகான குடும்பம். கல்லூரி மாணவனாக வரும் அவர் ஸ்டூடன்ட்ஸ் யூனியன் லீடராகவும் வலம் வருகிறார்.
கோபம் ரத்தத்தில் கலந்தது போல அநியாயங்களை காணும் போது அவரிடம் பொங்கி எழுகிறது. ஒரு நாள் ஒரு சிறிய விபத்தில் ஹீரோயின் ராஷ்மிகாவை சந்திக்கிறார்.
பின்னர் அவர் தன் உறவினர் என தெரிந்ததும் ஒரே மகிழ்ச்சி தான். ராஷ்மிகா கிரிக்கெட் வீரர் என தெரிந்ததும் விஜய்க்கு அவர் மீது காதல் லேசாக துளிர் விடுகிறது.
சண்டை, கல்லூரி கலாட்டாக்கள் என போய்க்கொண்டிருக்கையில் எதிர்பாராத பிரச்சனை சந்திக்க விஜய்யின் உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. அதே வேளையில் கிரிக்கெட்டில் தேசிய லெவலுக்கு செல்ல வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் ஹீரோயினுக்கு வெளியில் சொல்ல முடியாத பிரச்சனை.
ஒரு பக்கம் காதல் பிரிவு, மறுபக்கம் கிரிக்கெட்டை கைவிட வேண்டிய நிலை என லில்லி மனக்கவலையில் உள்ளார். பிரிந்த இவர்கள் மீண்டும் சந்தித்தார்களா, ராஷ்மிகாவுக்கு நேர்ந்த பிரச்சனை என்ன? அவரும் காம்ரேட் ஆக மாறினாரா என்பதே கதை.

படத்தை பற்றிய அலசல்

விஜய் தேவரகொண்டா ஏற்கனவே அர்ஜூன் ரெட்டி, கீதா கோவிந்தம் என இரண்டு லவ் ஸ்டோரி படங்கள் மூலம் ஹிட் கொடுத்து பெரும் ரசிகர்கள் வட்டாரத்தை பெற்றவர். கடந்த முறை படத்தில் ரவுடியாக களமிறங்கியவர் தற்போது காம்ரேட் ஆக இறங்கியுள்ளார்.
அவருக்கும் சரியான ஜோடியாக ராஷ்மிகா மூன்றாவது முறையாக இணைந்துள்ளார். இவர் தியேட்டரில் எண்டிரி ஆகும் காட்சிகளுக்கு ரசிகர்களின் விசில் சத்தம் தியேட்டரில் பறக்கிறது. காம்ரேட் ஆக அவரும் கிரிக்கெட் வீரராக இவரும் கொள்கையில் உறுதியாக இருக்கிறார்கள். இருவருக்குமான லவ், ரொமான்ஸ் கெமிஸ்டிரி சூப்பர்.
பாபி, லில்லி என இவர்களின் பெயர்கள் பலரையும் ஈர்க்கிறது. இவர்களின் படத்தில் லிப்லாக் காட்சிகள் இருக்காமல் போய்விடுமா என. அக்காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் செம ரெஸ்பான்ஸ்.
பாரத் கம்மா பட கதையை இயற்கையாக கொண்டு செல்கிறார். சென்னை, தூத்துக்குடி, பெங்களூரு என காட்சிகள் மாறும் விதமாக மழைக்காலத்தில் ரயில் பயணமாக காட்டுகிறார். நிஜ வாழ்க்கையில் ஆண்களால் பெண்கள் சவாலை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும், தவறை தட்டிக்கேட்க வேண்டும் என்ற மெசேஜ் ஹைலைட்.
ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் படத்தில் லவ் சென்சேஷன் என கூறலாம். பின்னணி இசையும் கிளாசிக். சுஜித் சராங்க் ஒளிப்பதிவில் காட்சிகள் ரியாலிஸ்டிக்.

கிளாப்ஸ்

பாபி, லில்லி இருவரின் ரொமான்ஸ், கெமிஸ்ட்ரி ரியலான லவ் ஃபீல்.
படத்தில் சித்ஸ்ரீராம் பாடிய பாடல் அசத்தல்..
இயல்பான காமெடிகள் படத்தில் சின்ன சின்ன இம்பிரஷன்.

பல்பஸ்

படத்தில் நீளம் கொஞ்சம் அதிகம். காட்சிகள் நகர்வு மெதுவாக இருப்பது போன்ற ஒரு ஃபீல்.
மொத்ததில் டியர் காம்ரேட் மழைக்காலத்தில் ஒரு நல்ல ஃபீல் குட் படம்.










No comments: