பொன் விழா ஆண்டில் இந்தப்படங்கள் 1969 -2019 ச. சுந்தரதாஸ் பகுதி 4


சுஜாதா சினி ஆர்ட்ஸ் மூலம் சிவாஜி கணேசனின் நடிப்பில் அடுத்தடுத்து இரண்டு வெற்றிப் படங்களை தயாரித்தவர் பாலாஜி நடிகராக இருந்து தயாரிப்பாளரான இவர் 1969ல் தயாரித்தப் படம்தான் திருடன்.

ஏற்கனவே அதிர்ஷம் வந்துலு என்ற பெயரில் தெலுங்கில் இப்படம் உருவாகியிருந்தது. நாகேஸ்வரராவும் ஜெயலலிதாவும் இதில் இணைந்து நடித்திருந்தார்கள். தெலுங்கில் வெற்றி கண்ட இந்தப் படத்தை தமிழில் சிறு மாற்றங்களுடன் பாலாஜி உருவாக்கினார். 
துமிழில் ஜெயலலிதா பிரபலமாக இருந்த போதும் பாலாஜியின் நண்பராக திகழ்ந்த போதும் அவரை தமிழ்ப் படத்தில் நடிப்பதற்கு பாலாஜி ஒப்பந்தம் செய்யவில்லை. அதற்கு பதில் கே.ஆர். விஜயாவை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்தார்.

பாலாஜி சிவாஜியின் நடிப்பில் தயாரித்த முதல் படம் தங்கை. இப்படத்தின் தயாரிப்பதற்கு நிதியுதவி வழங்கியவர் சுதர்சன் சிட்பண்ட் நிதி நிறுவனத்தின் அதிபர் வேலாயுதம் நாயர். அதன் காரணமாகவே நாயரின் மனைவி கே. ஆர். வுpஜயாவை கதாநாயகியாக தங்கை படத்தில் ஒப்பந்தம் செய்தார் பாலாஜி. அவரின் இரண்டாவது தயாரிப்பான என் தம்பி படத்திற்கு சரோஜாதேவி கதாநாயகியானார். காரணம் அப்படம் உருவான சமயம் கே. ஆர். விஜயா காப்பமாக இருந்ததேயாகும். அடுத்த தயாரிப்பான திருடனில் மீண்டும் விஜயா இடம் பெற்றார்.
சிவாஜி கே. ஆர். விஜா இருவருடன் பாலாஜி சுந்தரராஜன் நாகேஷ் விஜயலலிதா ஆகியோரும் நடித்திருந்தனர். இவர்களுடன் சசிகுமார் என்ற புதுமுகமும் இந்தப் படத்தின் மூலம் அறிமுகமாகியிருந்தார். பிற்காலத்தில் இவர் பல படங்களில் துணை வேடங்களிலும் நடித்திருந்தார்.

சிறு வயதிலேயே அனாதையாகி விட்ட ராஜீ சந்தர்ப்ப வசத்தினால் திருடனாக உருவாக்கப்படுகிறான். அவனின் திறமையை பயன்படுத்தி ஜெகதீஷ் பல கொள்ளைகளை நடத்துகிறான். ஒரு சந்தர்ப்பத்தில் போலிஸிடம் சிக்கி சிறை செல்லும் ராஜீ திருந்தி நல்லவனாகிறான். அவனுக்கு ஒரு காதலியும் தொடர்ந்து குழநதையும் கிடைக்கிறது. திருந்தி குடும்பத்துடன் ஒழுங்காக வாழ விரும்பும் ராஜீக்க பழைய கொள்ளைக் கூட்டத்தினர் தொல்லை கொடுக்கிறார்கள். இப்படி செல்கிறது திருடனின் கதை.

குணச்சித்திர நடிப்புடன் சண்டைக் காட்சிகளிலும் திறமையாக நடித்திருந்தார் சிவாஜிp. ஓடும் ரயிலிலும் வளைந்து வளைத்து செல்லும் உயர் கட்டடத்தின் மீதும் சிவாஜி போடும் சண்டைகள் விறுவிறுப்பாக இருந்தன. திருவாருர் தாஸ் அமைத்த சண்டைக் காட்சிகள் ரசிகர்களை கவர்ந்தன. 


படத்திற்கு வசனம் எழுதியவர் ஏ. எல். நாராயணன். துன்பத்தில் துடிக்கும் சிவாஜி கலண்டரில் கைகாட்டி ஆசீர்வதிக்கும் முருகனின் படத்தைப் பார்த்து முருகா நீ நல்லா இருன்னு சொல்றியா இல்லை நாசமா போன்னு சொல்றியா என்ற வசனம் ரசிகர்களை உலுக்கி எடுத்தது. இது போல் பல அர்த்த புஷ்டியான வசனங்களை நாராயணன் எழுதியிருந்தார். சிவாஜி, விஜயா இருவரின் நடிப்பில் அவை மேலும் மெருகு பெற்றன.

கே.ஆர். விஜயாவுக்க கணவனையும் மகளையும் ஆறுதல் படுத்தும் வேடம். நல்ல விதமாக செய்திருந்தார். பாலாஜி சுந்தரராஜன் இருவரும் தங்கள் திறமையை வெளிப்படுத்தியிருந்தார்கள்.

படத்தில் நான்கே நான்கு பாடல்கள்தான். கோட்டை மதில் மேலே பழனியப்பன் பழனியம்டாவா, பொன்ற பாடல்கள் கேட்கும்படி அமைந்தன.

கண்ணதாசனின் பாடல்களுக்கு எம். எஸ். விஸ்வநாதன் இசையமைத்திருந்தார். மேற்கத்திய நடனமும் இசையும் படத்தில் சற்று துக்கலாகவே காணப்பட்டது. இந்தியாவில் இருந்து இலங்கை வந்து பல சிங்களப் படங்களை ஒளிப்பதிவு செய்து இயக்கிய எம். மஸ்தான் திருடன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருந்தார். பாலாஜியின் தங்கை, என் தம்பி படங்களை டைரக்ட் செய் ஏ,சி திருலோகசந்தர் திருடன் படத்தையும் இயக்கியிருந்தார். தமிழக்திலும் இலங்கையிலும் திருடன் வெற்றி பெற்றான்.

தெலுங்கில் அதிர்ஷம் வந்துலுவாக உருவாகி தமிழில் திருடனாகி பின்னர் ஹிந்தியில் ஹிமட் என்ற பெயரில் வெளிவந்து அதற்கும் பிறகு சிங்களத்தில் எதத் சூரியா அதக் சூரயா என்ற பெயரில் தயாரிக்கப்பட்டு ஆக நான்கு மொழிகளை இப்படம் கண்டது! 













No comments: