1983 - இல் தமிழர்களிற்கு எதிரான வன்முறைகள் குறித்து சில குறிப்புகள்


இம்தியாஸ் ரசாக்
தமிழில் ரஜீபன்
25/07/2019 கறுப்பு யூலை எனப்படும் 1983 இல் இடம்பெற்ற சம்பவங்கள் குறித்து பலர் நன்கு பதிவு செய்துள்ளனர்.தமிழர்களிற்கு எதிராக, சிங்கள காடையர்கள் கும்பல்கள்  இனப்படுகொலைகளை ஆரம்பிக்க முயன்றதன் காரணமாக யூலை- ஆகஸ்ட் மாதங்களில் இரண்டாயிரத்திற்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் 1983 இல் இடம்பெற்ற அரச ஆதரவுடனான சிங்களவர்களின் கலகத்தினை நன்கு பதிவு செய்துள்ளது.
கொழும்பில் தமிழர்கள் வாழ்ந்த பல பகுதிகள் முற்றாக அழிக்கப்பட்டதுடன் ஒரு இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் இடம்பெயர்ந்தனர் - இந்த கலகங்களிற்கு அரசாங்கத்தின் ஆதரவு இருந்ததை ஆதாரங்கள் புலப்படுத்துகின்றன.
அரச ஊடகமான லேக்ஹவுசில் தமிழ் ஊழியர் ஒருவரை காப்பாற்றிய நபர் ஒருவர் தனது அனுபவத்தை இவ்வாறு விபரிக்கின்றார்.
கொழும்பு நகரத்தின் செல்வாக்கு மிக்க அரச அரசியல்வாதிகளின்  ஆதரவு பெற்ற குழுக்கள் தங்கள் நரபலிவேட்டையை ஆரம்பிக்க தொடங்கின.
பொலிஸாரும் படையினரும் எதனையும் செய்ய முடியாதவர்களாக காணப்பட்ட அந்த தருணத்தில்  பட்டப்பகலில் சூறையாடல்களும் வன்முறைகளும் இடம்பெற்றன.
எனக்கு லேக்ஹவுசிலிருந்து வாகனமொன்றை எடுத்துக்கொண்டு சென்றமை ஞாபகமிருக்கின்றது,நான் வத்தளையில் வசித்து வந்த லேக்ஹவுசின் கணக்காளர் எட்வேர்ட்டை அந்த வாகனத்தில் அழைத்து சென்றேன்,
அந்த வாகனத்தில் நாங்கள் ஐந்து சிங்களவர்கள் இருந்தோம் , நாங்கள் எங்களிற்கு மத்தியில் நடுவில் எட்வேர்டை இருக்க செய்தோம்.
ஒவ்வொரு 100 மீற்றரிலும் கத்தி போன்ற ஆபத்தான ஆயுதங்களுடன் காணப்பட்ட கும்பல்கள் எங்கள் வாகனத்தினை சோதனையிட்டன, எங்கள் வாகனத்தில் தமிழர்கள் யாராவது பயணிக்கின்றார்களா என அவர்கள் சோதனையிட்டனர்.
கொழும்பு நகரம் புகைமண்டலமாக காணப்பட்டது.
நாங்கள் லேக் ஹவுசிலிருந்து வெளியேறும்போது பிரபலமான சாரதா டெஸ்க்ஸ்டைல்என்ற கடை  சூறையாடப்பட்டுக்கொண்டிருந்ததை பார்த்தோம். படையினர் மற்றும் பொலிஸார் தங்கள் கண்முன்னாள் இடம்பெறும் குற்றச்செயல்களை அலட்சியம் செய்துகொண்டிருக்க  இது இடம்பெற்றது.
யூலை கலவரத்தில் அரசாங்கத்தின் தொடர்பு குறித்து நேரில் கண்ட சாட்சி இவ்வாறு குறிப்பிடுகின்றார்
வன்முறைகளில் ஈடுபட்ட கும்பல் வீடுகளில் வசிப்பவர்கள் குறித்த பட்டியலுடன்  நடமாடியதையும் தமிழ் மக்கள் வசித்த வீடுகள் மற்றும் அவர்களின் அலுவலகங்களிற்கு முன்னாள் தங்கள் வாகனங்களை சரியாக நிறுத்தி தாக்குதலை மேற்கொண்டதையும் வெளிப்படையாக அவதானிக்க முடிந்தது.
ஜேஆர் ஜெயவர்த்தன தலைமையிலான அரசாங்கம் இந்த விபரங்களை வன்முறை கும்பல்களிற்கு வழங்காவிட்டால் அவர்களிற்கு  அவை எவ்வாறு கிடைத்திருக்கும?;.
இது இரண்டு விடயங்களை வெளிப்படுத்தியது.
யாழ்ப்பாணத்தில் கொல்லப்பட்ட படையினரின் உடல்கள் அடக்கம் செய்யப்படுவதை வேண்டுமென்றே தாமதித்த அரசாங்கம் கொழும்பிலும் அதன் புறநகர் பகுதிகளிலும் உள்ள தமிழர்கள் மீது தாக்குதலிற்கு திட்டமிட்டதுடன்  தமிழர்கள் மாத்திரம் தாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக காடையர்கள் கும்பல்களிற்கு தமிழர்கள் குறித்த ஆவணங்களை வழங்கியது.
அரசாங்க ஆதரவு இல்லாமல் வேறு எந்த தரப்பினாலும் இந்த வன்முறைகளை முன்னெடுத்திருக்க முடியாது.
தமிழர்களிற்கு எதிரான நடவடிக்கைகள் இலங்கையின் ஏனைய பகுதிகளிற்கு பரவுவதை தடுப்பதற்காக இலங்கையின் ஆளும் உயர்குழாமும் அரச ஸ்தாபனங்களும் எந்த நடவடிக்கைகளையும் எடுக்காததுடன் அதனை கண்டிக்கவுமில்லை.
மாறாக அவ்வேளை ஜனாதிபதியாக காணப்பட்ட ஜேஆர்ஜெயவர்த்தன சிங்கள மக்களின் வெகுஜன இயக்கம் என இதனை பாராட்டியதுடன் காடையர் கும்பலை சிங்கள மக்களின் கதாநாயர்கள் என பாராட்டினார்.
1983 கலவரத்திற்கு முன்னர் பிரிட்டனின் பத்திரிகையாளர் இயன் வோர்ட்டிற்கு  அவர் வழங்கிய பேட்டி  அவருக்கு இந்த கலவரத்துடன் உள்ள தொடர்பை புலப்படுத்துகின்றது.
நான் யாழ்ப்பாண மக்களின் ( தமிழ்)  கருத்து குறித்து கவலையடையவில்லை,நாங்கள் அவர்கள் குறித்து சிந்திக்க முடியாது அவர்களின் வாழ்க்கை அவர்களின் கருத்து குறித்து கவலைப்படமுடியாது , வடக்கின் மீது நீங்கள் எவ்வளவு அழுத்தங்களை கொடுக்கின்றீர்களோ அவ்வளவிற்கு சிங்கள மக்கள் மகிழ்ச்சியடைவார்கள் - நான் தமிழ் மக்களை பட்டினிபோட்டால்  சிங்கள மக்கள் மகிழ்ச்சியடைவார்கள் - என ஜேஆர் தெரிவித்திருந்தார்.
மிகமோசமான 1983  அட்டுழியங்களிற்கு பின்னரும் தமிழ் மக்களிற்கு எதிரான சிங்களவர்களின் அட்டுழியங்கள் தொடர்ந்தன.ஆயிரக்கணக்கானவர்கள்  சிறைகளில் அடைக்கப்பட்டனர் என சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவிக்கின்றது.
சிங்கள அரசியல்வாதிகள் தமிழர்களிற்கு எதிரான நிறுவனமயப்படுத்தப்பட்ட வன்முறைகளை முன்னெடுத்தனர் என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதன் பின்னர் ஈழம் என்ற தனிநாட்டிற்காக விடுதலைப்புலிகள் வன்முறைகளை கையிலெடுத்தனர்.சிங்கள வன்முறையும் பேரினவாதமுமே தங்கள் உருவாக்கத்திற்கு காரணம் என விடுதலைப்புலிகள் தெரிவித்தனர்.சிங்கள அரசியல்வாதிகளிடமிருந்து தமிழ் மக்களிற்கு எந்த நீதியும் கிடைக்காது என்ற நம்பிக்கையையும் அவர்கள் கொண்டிருந்தனர்.
விடுதலைப்புலிகள் அரசாங்கத்தின் மீதும் அதன் ஸ்தாபனங்கள் மீதும் மேற்கொண்ட தாக்குதல்களிற்கு பழிவாங்கும் விதத்தில் இலங்கை படையினராலும் பொலிஸாரினாலும் தாக்குதலிற்கு உள்ளான தமிழர்களும் இதே கருத்தை கொண்டிருந்தனர்.
இலங்கையின் பிரதேச ஒருமைப்பாட்டை பாதுகாக்கி;;ன்றோம் என்ற நோக்கில் அரசாங்கம் தமிழர்களிற்கு எதிரான வன்முறைகளை நியாயப்படுத்தியது.எனினும் படையினர் தமிழ் இளைஞர்களிற்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகள் சாதாரண தமிழர்களை தீவிரவாத மயப்படுத்தியதுடன்  அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்திற்கு தமிழர்களை உள்வாங்குவதற்கு ஏற்ற சூழலை உருவாக்கியது.
குறிப்பிட்ட சமூகமொன்று தொடர்ச்சியாக மத- இன- அரசியல்- ஆதிக்க குழுவினால் அச்சுறுத்தப்படும்போது, ஒடுக்குமுறையையும் துன்புறுத்துபவர்களி;ன் வன்முறையையும் எதிர்ப்பதற்காக பலர் அரசியல் இராணுவ இயக்கத்தில்  இணைந்துகொள்வார்கள் என்பதை  விடுதலைப்புலிகளின் வளர்ச்சி உணர்த்தியது.
விடுதலைப்புலிகள் தங்கள் துப்பாக்கிகளை மௌனமாக்கியிருக்கலாம் ஆனால் சிங்கள பௌத்த அரசியல்வாதிகளும் அரசாங்கமும் தமிழ் தேசியத்திற்கான அடிப்படை பிரச்சினைகளிற்கு தீர்வை காண்பதற்கு சிறந்த வழிமுறைகளை பயன்படுத்தவேண்டும்.
இந்த வழிமுறைகள் முஸ்லீம்களின் கரிசனைகளிற்கு தீர்வை காண்பதற்கும் உதவலாம்.
இதன் மூலம் ஏப்பிரல்  21 போன்ற கொடுரமான பயங்கரவாத தாக்குதல்களை தடுக்கலாம்.
நன்றி வீரகேசரி 

No comments: