உலகச் செய்திகள்


பிரித்தானிய எண்ணெய் தாங்கி கப்பல் கைப்பற்றப்படுவதை வெளிப்படுத்தும் காணொளிக் காட்சி ஈரானால் வெளியீடு

மகளின் திருமணத்திற்காக பரோலில் வந்தார் நளினி..!

ஏவுகணை பரிசோதனையை மேற்கொண்டது  வடகொரியா

லிபிய அகதிகளின் படகு கவிழ்ந்ததில்150 பேர் பரிதாபமாக பலி !

3 இந்திய வம்சாவளியினருக்கு போரிஸ் ஜோன்சன் அமைச்சரவையில் பதவிகள்

பாகிஸ்தானில் செயற்படும் பயங்கரவாத குழுக்களை அழிக்க இம்ரான் கான் நடவடிக்கை எடுக்க வேண்டும் - இந்தியா

அனுமதி கிடைத்தது ; எல்லை சுவர் எழுப்ப தயராகும் ட்ரம்ப்


பிரித்தானிய எண்ணெய் தாங்கி கப்பல் கைப்பற்றப்படுவதை வெளிப்படுத்தும் காணொளிக் காட்சி ஈரானால் வெளியீடு

22/07/2019 பிரித்­தா­னிய கொடி பறக்­க­வி­டப்­பட்ட எண்ணெய் தாங்கிக் கப்­ப­லொன்று வளை­குடா பிராந்­தி­யத்தில்   ஈரானால் கைப்­பற்­றப்­ப­டு­வ­தற்கு முன்னர் பிரித்­தா­னிய கடற்­ப­டை­யி­ன­ருக்கும்   கப்­பல்­களில்  வந்த ஈரா­னிய ஆயுதப் படை­யி­ன­ருக்­கு­மி­டையில் இடம்­பெற்ற  வானொலித்  தொடர்­பாடல் பதி­வுகள் வெளியா­கி­யுள்­ளன.

இந்த ஒலிப்­ப­திவில்  எச்.எம்.எஸ். மொன்ட்ரோஸ் கப்­ப­லி­லி­ருந்த  பிரித்­தா­னிய  கடற்­ப­டைக்கு அவர்­க­ளது எண்ணெய் தாங்கிக் கப்­பலை பாது­காப்புக் கார­ணங்­க­ளுக்­காக  பரி­சோ­தனை செய்ய விரும்­பு­வ­தாக  ஈரா­னிய கப்­ப­லொன்­றி­லி­ருந்து  அனுப்­பப்­பட்­ட­தாக நம்­பப்­படும்  செய்தி  பதி­வா­கி­யுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
அந்த ஸ்ரெனா இம்­பெரோ எண்ணெய் தாங்கிக் கப்­பலில்  கடந்த  வெள்ளிக்­கி­ழமை ஈரா­னிய  அதி­கா­ரிகள் ஏறி­யி­ருந்­தனர்.
இத­னை­ய­டுத்து அந்த எண்ணெய் தாங்கிக் கப்­பலை உட­ன­டி­யாக விடு­விக்க  பிரித்­தா­னிய  வெளிநாட்டு செய­லாளர் ஜெரேமி ஹன்ட் ஈரா­னுக்கு வலி­யு­றுத்­தி­யுள்ளார்.
இந்­நி­லையில் பிரித்­தா­னிய கடல் பாது­காப்பு நிறு­வ­ன­மான றையட் குளோ­பலால் பெறப்­பட்­டுள்ள ஒலிப்­ப­திவில்  ஈரா­னிய கப்­பலி­லி­ருந்து  ஸ்ரெனா இம்­பெரோ எண்ணெய் தாங்கிக் கப்­ப­லுக்கு அனுப்­பப்­பட்­ட­தாக நம்­பப்­படும் செய்­தியில்  அந்தக் கப்­பலை பாதையை மாற்றிச் செல்ல  கோரப்­பட்­டி­ருந்­த­தாக  தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
"நீங்கள் கீழ்ப்­ப­டிந்தால்  நீங்கள் பாது­காப்­பாக இருக்­கலாம்" என இதன்­போது தெரி­விக்­கப்­பட்­டுள்ளது.
இந்­நி­லையில்  பிரித்­தா­னிய எச்.எம்.எஸ். மொன்ட் ரோஸ் கப்­பலால் ஸ்ரெனா இம்­பெரோ  கப்­ப­லுக்கு அனுப்­பப்­பட்ட செய்­தியில்,  "சர்­வ­தேச சட்­டத்­தின் பிர­காரம் நீங்கள்  சர்­வ­தேச ரீதியில்  அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட   நீரி­ணையில்  போக்­கு­வ­ரத்தை மேற்­கொள்­கையில்  உங்கள்  பாதையில் இடை­யூறு, தடை ஏற்­ப­டுத்­து­வது அன்றி உங்­களை தடுப்­பது கூடாது" என அறி­வு­றுத்­தப்­பட்­டது.
தொடர்ந்து பிரித்­தா­னிய கடற்­ப­டை­யினர்  ஈரா­னிய கப்­ப­லிடம் எண்ணெய் தாங்கிக் கப்­பலில் ஏறு­வ­தற்கு முயற்­சிப்­பதன் மூலம்  சர்­வ­தேச சட்டத்தை மீறு­வதை நோக்­காகக் கொண்­டி­ருக்­க­வில்லை என் ­பதை உறு­திப்­ப­டுத்த கேட்­டுக்­கொண்டுள்­ளனர்.
இந்­நி­லையில் ஈரான் அந்த ஸ்ரெனா இம்­பெரோ   எண் ணெய் தாங்கிக்  கப்பல் கைப்­பற்­றப்­ப­டு­வதை வெளிப்ப டுத்தும் காணொளிக் காட்­சி­யொன்றை நேற்று முன்­தினம் சனிக்­கி­ழமை  வெளியிட்­டுள்­ளது.
அந்த  எண்ணெய் தாங்கிக் கப்­பலை அதிவேக கப்­பல்கள் சுற்றிவளைத்­த­தை­ய­டுத்து அந்தக் கப்­பலில்  உலங்­கு­வா­னூர்­தி­யி­லி­ருந்து முக­மூ­டி­ய­ணிந்த ஈரா­னிய  படை­யினர் கயி­றுகள் மூலம் இறங்­கு­வதை அந்தக் காணொளிக் காட்சி வெளிப்­ப­டுத்­து­கி­றது.
எச்.எம்.எஸ். மொன்ரோஸ் கப்பல்  குறுக்­கீடு செய்து அந்த எண்ணெய் தாங்கிக் கப்­பலை மீட்க  விரைந்த போதும் அந்தக் கப்பல் ஏற்­க­னவே ஈரா­னிய  கடல் பரப்பில்  இருந்­ததால் அந்தக் கப்­பலால் அங்கு செல்ல முடி­யாது போன­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.
அந்தக் கப்பல் கடந்த வெள்ளிக்­கி­ழமை வளை­கு­டா­வி­லுள்ள  முக்­கிய கப்பல் போக்­கு­வ­ரத்துப் பாதையில் வைத்து ஈரா­னிய புரட்­சி­கர காவல் படை­யி­னரால் கைப்­பற்­றப்­பட்­டி­ருந்­தது.
அந்த எண்ணெய்த் தாங்கிக் கப்பல் சர்­வ­தேச கடல் போக்­கு­வ­ரத்து சட்­டங்­களை மீறி­யுள்­ள­தாக ஈரானால் குற்­றஞ்­சாட்­டப்­ப­டு­கி­றது.
மேற்­படி எண்ணெய் தாங்கிக் கப்பல்  மீன் பிடிப் பட­கொ­ன்­றுடன் மோதிய பின்னர்  நிற்­காது  அங்­கி­ருந்து விரைந்து செல்ல முயற்­சித்த­தை­ய­டுத்தே  அதனை ஈரா­னிய  புரட்­சி­கர காவல் படை­யினர்  கைப்­பற்­றி­ய­தாக   ஈரா­னிய அர­சாங்­கத்தால் செயற்­ப­டுத்­தப்­படும் ஐ.ஆர்.என்.ஏ. ஊடகம் தெரி­விக்­கி­றது.
இந்தக் குற்­றச்­சாட்டு தொடர்பில் பிரித்­தா­னிய வெளிநாட்டு செய­லாளர் ஹன்ட் தெரி­விக்­கையில், அந்த எண்ணெய்த் தாங்கிக்  கப்பல் ஓமானிய கடல் பரப்பில் பய­ணிக்­கையில் கைப்­பற்­றப்­பட்டு பின்னர் ஈரானை நோக்கிப் பய­ணிக்க நிர்ப்­பந்­திக்­கப்­பட்­ட­தா­கவும் இது சர்­வ­தேச சட்­டங்கள் தொடர்­பான தெளிவான ஒரு மீறல் எனவும்  கூறினார்.
ஐரோப்­பிய ஒன்­றி­யத்தால் விதிக்­கப்­பட்­டுள்ள  தடை­களை மீறி சிரி­யா­வுக்கு எண்­ணெயை  எடுத்துச்சென்ற  ஈரா­னிய எண்ணெய் தாங்கிக் கப்ப­லொன்றை   கிரால்டர் பிராந்­தி­யத்­துக்கு அப்பால் பிரித்­தா­னிய கடற்­ப­டை­யினர்  கைப்­பற்­றி­யி­ருந்த நிலை­யி­லேயே மேற்­படி சம்­பவம் இடம்­பெற்­றுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.
இந்­நி­லையில் மேற்­படி எண்ணெய் தாங்கிக் கப்பல் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளமை குறித்து பிரித்­தா­னிய அமைச்­சர்கள் நேற்று முன்­தினம் சனிக்கிழமை அவ­சரக் கூட்­ட­மொன்றைக்கூட்டி கலந்­து­ரை­யா­டி­யுள்­ளனர்.
இது தொடர்பில் என்ன நட­வ­டிக்கை எடுப்­பது என்­பது குறித்து பாரா­ளு­மன்ற  உறுப்­பி­னர்கள்  திங்­கட்­கி­ழமை (இன்று)  தீர்­மா­ன­மெ­டுக்­க­வுள்­ள­தாக ஹன்ட் கூறினார். நிலை­மையை தணி­விப்­ப­தற்­கான வழி­யொன்றைக் காண்­ப­தற்கு தாம் தொடர்ந்து முன்­னு­ரிமை கொடுக்­க­வுள்­ள­தாக  அவர் தெரி­வித்தார்.
பிரித்­தா­னிய  எண்ணெய் தாங்கிக் கப்­பலை ஈரான் கைப்­பற்­றி­யமை குறித்து  அமெ­ரிக்கா, பிரான்ஸ், ஜேர்­மனி உள்­ள­டங்­க­­லான நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.   நன்றி வீரகேசரி 











மகளின் திருமணத்திற்காக பரோலில் வந்தார் நளினி..!

25/07/2017 தமிழகத்தின் வேலூர் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் நளினி அவரது மகள் திருமணத்திற்காக ஒரு மாதம் பரோலில் வெளியே வந்தார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகிய 7 பேரும் கடந்த 28 ஆண்டுகளாக சிறைத்தண்டனையை அனுபவித்து வருகின்றனர். இவர்கள் அனைவருக்குமே விசாரணை நீதிமன்றத்தில் தூக்குதண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அந்த தண்டனையை உச்சநீதிமன்றம்  பல்வேறு காலகட்டங்களில் ஆயுள் தண்டனையாக குறைத்து தீர்ப்பளித்தது. 
அதுமட்டுமின்றி, அவர்கள் அனைவரும் ஆயுள் தண்டனை காலமான 14 ஆண்டுகளை ஏற்கெனவே சிறைகளில் கழித்துவிட்டதால், குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவுகளின்படி அவர்களை விடுதலை செய்யலாம் என்று கடந்த 2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில், அவர்களை விடுவிப்பதை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததால், அவர்களை விடுதலை செய்ய முடியவில்லை.
இந்நிலையில், வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, தனது மகளின் திருமண ஏற்பாடுகளை கவனிப்பதற்காக 6 மாத பரோல் வழங்குமாறு, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ‘ஊடகங்களிடம் பேசக்கூடாது…’ என்பது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன், அவருக்கு ஒரு மாதம் பரோல் வழங்கி உத்தரவிட்டது. 
இதையடுத்து, வேலூர் சிறையிலிருந்து இன்று (25 ஆம் திகதி) காலை வெளியே வந்த நளினியை, பலத்த பாதுகாப்புடன் பொலிஸார் சத்துவாச்சாரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, சிங்கராயர் என்பவரின் வீட்டில் நளினி தங்குகிறார்.  நன்றி வீரகேசரி 













ஏவுகணை பரிசோதனையை மேற்கொண்டது  வடகொரியா

25/07/2019 வடகொரியா தனது ஏவுகணை பரிசோதனைகளை இன்று அந்நாட்டு கிழக்கு கடற்கரை பகுதியில் பரிசோதனை செய்துள்ளது.
கடந்த சில காலமாக அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையே அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பில் பேச்சுவார்த்தைகள் நடைபெற இருந்த நிலையில் அது தோல்வியில் முடிந்தது.
இதனை அடுத்து வடகொரியா ஜனாதிபதி அமெரிக்க ஜனாதிபதியுடனான சந்திப்பை முற்றாக நிராகரிப்பு செய்து வந்தார் .
இந்நிலையில் தனது குறுகிய தொலைதூரம் செல்லக்கூடிய ஏவுகணை பரிசோதனையை மேற்கொண்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 












லிபிய அகதிகளின் படகு கவிழ்ந்ததில்150 பேர் பரிதாபமாக பலி !

26/07/2019 லிபியாவில் இருந்து ஐரோப்பாவிற்கு  சட்டவிரோதமாக சென்ற அகதிகளின் படகு கவிழ்ந்ததில் 150 பேர் கடலில் மூழ்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.
கடந்த 2011 ஆம் ஆண்டு அந்நாட்டின் ஜனாதிபதியாக  இருந்த கடாபியின் ஆட்சி முற்றாக ஒழித்த பின்னர் அங்கு அதிகார போர் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளதுடன் அங்கு குழுமோதல்களும் இடம்பெற்று வருவதுடன் இதில் சிக்கி பல்லாயிரக்காணக்கான பொதுமக்கள் கொல்லப்படுகின்றனர்.
இவ்வாறு ஏற்படும் மோதல்களில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ள அந்நாட்டு மக்கள் வேறு இடங்களை நோக்கி கடல் மார்க்கமாக செல்ல முயற்சிக்கையில் இவ்வாறான உயிரிழப்புகள் பெருமளவில் ஏற்படுகின்றதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு லிபியாவில் இருந்து மக்கள் ஜேர்மனி, இத்தாலி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் புகலிடம் தேடி சட்ட விரோதமாக கடலில் ஆபத்தான பயணத்தை மேற்கொள்கின்றனர். 
இந்நிலையில், லிபியா நாட்டின் அல் கோம்ஸ் நகரில் இருந்து படகு ஒன்றில் 300 க்கும் மேற்பட்ட அகதிகள் ஐரோப்பா நோக்கி பயணித்தனர். 
லிபியாவிலிருந்து 120 கிலோ மீற்றர் தொலைவில் மத்திய தரைகடல் பகுதியில் படகு சென்று கொண்டிருந்தபோது திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 
படகு கடலில் மூழ்கியதில் 150 பேர் உயிரழந்துள்ளதாகவும் ,150 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு செய்திகள் தெரிவித்துள்ளன.
உயிரிழந்தவர்களின்  உடல்களைத் தேடும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.  நன்றி வீரகேசரி 











3 இந்திய வம்சாவளியினருக்கு போரிஸ் ஜோன்சன் அமைச்சரவையில் பதவிகள்

26/07/2019 இங்கிலாந்தில் 3 இந்திய வம்சாவளியினருக்கு போரிஸ் ஜோன்சன் அமைச்சரவையில் இடம் கிடைத்துள்ளது.
இங்கிலாந்தின் புதிய பிரதமராக போரிஸ் ஜான்சன் நேற்று முன்தினம் பதவி ஏற்ற நிலையில், உள்த்துறை அமைச்சராக இந்திய வம்சாவளிப்பெண் 47 வயது பிரித்தி பட்டேல் பொறுப்பேற்றுள்ளார். மேலும் அலோக் சர்மா, ரிஷி சுனாக் ஆகிய இரு இந்திய வம்சாவளியினருக்கு பிரதமர் போரிஸ் ஜோன்சன் தனது அமைச்சரவையில் வாய்ப்பு அளித்திருக்கிறார். 
போரிஸ் ஜோன்சன், தனது அமைச்சரவையில் முக்கியத்துவம் வாய்ந்த உள்துறை அமைச்சர் பதவியை இந்திய வம்சாவளிப்பெண்ணான 47 வயதான பிரித்தி பட்டேலுக்கு  வழங்கியுள்ளார். இதன்மூலம் இங்கிலாந்தில் முதல் இந்திய வம்சாவளி உள்துறை அமைச்சர் என்ற பெருஐமயை பிரித்தி பட்டேல் பெற்றுள்ளார். 
பிரித்தி, லண்டனில் 1972 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29ஆம் திகதி குஜராத்தை பூர்விகமாக கொண்ட சுஷில், அஞ்சனா பட்டேல் தம்பதியரின் மகளாக பிறந்தவர். இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் திரேசா மேயின் அமைச்சரவையில் , சர்வதேச வளர்ச்சித்துறை அமைச்சர் பதவி வகித்தவர்.
வெளிவிவகாரத்துறையிடம் சொல்லாமல் இஸ்ரேல் அரசியல்வாதிகளுடன் பேச்சு நடத்தியதாக எழுந்த சர்ச்சையால், 2017 ஆம் ஆண்டு பிரித்தி தனது பதவியை துறந்தார்.
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் விவகாரத்தில் திரேசா மே மேற்கொண்ட ஒப்பந்தம் மோசமானது என கூறி, அதற்கு எதிராக தொடர்ந்து வாக்களித்து வந்தார்.
புதிய பிரதமர் போரிஸ் ஜோன்சனின் தீவிர ஆதரவாளர். இங்கிலாந்து வாழ் இந்தியர்கள் நடத்தும் விழாக்களில் எல்லாம் தவறாமல் கலந்து கொள்பவர் என்ற பெயர் பிரித்தி பட்டேலுக்கு உண்டு. பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளரும் ஆவார்.
பிரித்தி பட்டேலின் கணவர் அலெக்ஸ் சாயர், பங்குச்சந்தை சந்தைப்படுத்தல் ஆலோசகர். இந்த தம்பதியருக்கு பிரெட்டி என்ற 11 வயதுடைய மகன் உள்ளார்.
மேலும் அலோக் சர்மா, ரிஷி சுனாக் ஆகிய இரு இந்திய வம்சாவளியினருக்கு பிரதமர் போரிஸ் ஜோன்சன் தனது அமைச்சரவையில் வாய்ப்பு அளித்திருக்கிறார். 
அலோக் சர்மா, சர்வதேச வளர்ச்சித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ரிஷி சுனாக்கிற்கு குக்கு, கருவூலத்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
அலோக் சர்மா (51), முந்தைய திரேசா மே அமைச்சரவையில் முதலில் வீட்டு வசதித்துறை பின்னர் வேலை வாய்ப்புத்துறை இராஜாங்க அமைச்சராக இருந்து வந்துள்ளார். ஆக்ராவில் பிறந்த இவர் 5 வயதாக இருந்தபோது பெற்றோருடன் இங்கிலாந்தில் குடியேறினார். அலோக் சர்மாவின் மனைவி சுவீடனை சேர்ந்தவர். இந்த தம்பதியருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இங்கிலாந்தில் பிறந்த ரிஷி சுனாக் (39), இன்போசிஸ் தகவல் தொழில் நுட்ப நிறுவனத்தின் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மருமகன் ஆவார். நாராயண மூர்த்தி, சுதா தம்பதியரின் மகள் அக்‌ஷதாவை இவர் மணந்து கொண்டுள்ளார். இந்த தம்பதியருக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் முன்னைய திரேசா மே அமைச்சரவையில் இராஜாங்க அமைச்சர் பதவி வகித்துள்ளார்.  நன்றி வீரகேசரி 











பாகிஸ்தானில் செயற்படும் பயங்கரவாத குழுக்களை அழிக்க இம்ரான் கான் நடவடிக்கை எடுக்க வேண்டும் - இந்தியா

26/07/2019 பாகிஸ்தான் மண்ணில் செயல்படும் பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக, அந் நாட்டு பிரதமர் இம்ரான் கான் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது.
அமெ­ரிக்­கா­வுக்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜ­ய­மொன்றை மேற்­கொண்­டிருந்த இம்ரான் கான், அமெ­ரிக்க காங்­கி­ரஸின் பாகிஸ்தான் விவ­காரக் குழுவின் தலை­வி­யான ஷீலா ஜக்சன் லீயினால் கப்­பிட்டல் ஹில்லில் அளிக்­கப்­பட்ட விருந்­து­ப­சா­ரத்தின்போது, தமது நாட்டில் 40 பயங்­க­ர­வாதக் குழுக்கள் இருப்­ப­தா­கவும் 30 ஆயிரம் தொடக்கம் 40 ஆயிரம் வரை­யான பயங்­க­ர­வா­திகள் ஆயு­தங்கள் சகிதம் இயங்­கிக்­கொண்­டி­ருப்­ப­தா­க அதிர்ச்­சி­க­ர­மான தக­வலை வெளி­யிட்­டி­ருக்­கிறார்.
அத்துடன் அவர்கள் ஆப்­கா­னிஸ்­தானின் அல்­லது காஷ்­மீரின் சில பகு­தி­களில் பயிற்­சி­களைப் பெற்று சண்­டையில் ஈடுபட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிடிருந்தார். 
இந் நிலையிலேயே பாகிஸ்தான் மண்ணில் செயல்படும் பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக, இம்ரான் கான் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் இதனை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், 
பாகிஸ்தானில் பயங்கரவாதிகளும், பயங்கரவாத பயிற்சி முகாம்களும் இருப்பதாக பாகிஸ்தான் அரசும், அந்நாட்டின் தலைவர்களும் ஒப்புக்கொள்வது, இது முதல் முறையல்ல. 
இதை சர்வதேச சமூகம் நன்கு அறியும். இந்த முறை, இம்ரான் கான் ஒப்புக் கொண்டிருக்கிறார். எனவே, பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக இம்ரான் கான் நம்பத்தகுந்த, கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு இதுவே சரியான தருணமாகும்.
பாகிஸ்தானில் இயங்கி வரும் பயங்கரவாதிகளின் புகலிடங்கள் அழிக்கப்பட்டுவிட்டன என்பதை அந்நாட்டு அரசு உறுதிப்படுத்த வேண்டும். சர்வதேச நாடுகளை சமாதானப்படுத்த வேண்டும் என்பதற்காக ஒரு மனதோடு இதை பாகிஸ்தான் செய்யக் கூடாது என்றார் ரவீஷ் குமார் என்றார்.  நன்றி வீரகேசரி 












அனுமதி கிடைத்தது ; எல்லை சுவர் எழுப்ப தயராகும் ட்ரம்ப்

28/07/2019 அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக அகதிகள் வருவதை தடுக்கும் வகையில் மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் திட்டத்திற்கு இராணுவ நிதியை பயன்படுத்திக் கொள்ள அந்த நாட்டு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
மெக்சிகோவையொட்டிய எல்லை வழியாக ஏராளமானோர் அமெரிக்காவினுள் சட்ட விரோதமாக நுழைவதைத் தடுப்பதற்கு எல்லையில் பிரமாண்ட சுவர் எழுப்புவதற்கு நிதியை ஒதுக்கும்படி அமெரிக்க பாராளுமன்றத்திடம் ட்ரம்ப் கோரிக்கை வைத்தார்.
இதற்கு ஜனநாயக கட்சியினர் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் விவகாரத்தில் டிரம்ப், அவசர நிலையை பிரகடனம் செய்தார். இதன் மூலம் இராணுவ நிதியை மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்ப அவர் பயன்படுத்த முடியும்.
அதன்படி எல்லை சுவர் திட்டத்துக்கு 1.5 பில்லியன் டாலரை நிதியாக ஒதுக்க அமெரிக்க இராணுவ தலைமையகம் ஒப்புதல் வழங்கியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்க சிவில் உரிமைகள் ஒன்றியம் சார்பில் 20 மாகாணங்களின் அமெரிக்க மத்திய நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்தன. இதில் கலிபோர்னியா மாநிலத்தின் மத்திய நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் திட்டத்துக்கு இராணுவ நிதியை பயன்படுத்துவதற்கு தற்காலிக தடை விதித்தார்.
இதை எதிர்த்து அரசு தரப்பில் உயர் நீதமன்றில் மேல்முறையீடு செய்யப்பட்டது.இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், எல்லைச்சுவரின் ஒரு பகுதியை கட்டி முடிப்பதற்கு 2.5 பில்லியன் டாலர் ராணுவ நிதியை பயன்படுத்துதற்கு அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த நிதியைக் கொண்டு, கலிபோர்னியா, அரிசோனா, நியூமெக்சிகோ மாகாணங்களில் தெற்கு எல்லைச்சுவர் கட்டப்படவுள்ளது.  நன்றி வீரகேசரி 






No comments: