இலங்கைச் செய்திகள்


ஆவா குழுவினர் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் - புதிய காரணம் வெளியாகியது

கன்னியா விவகாரம் ; நீதிமன்றம் அதிரடி  உத்தரவு

இந்துக்கள் தமது பூர்வீக நிலத்தை அனுபவிக்க வழி அமைக்கப்பட்டுள்ளது - எம்.ஏ.சுமந்திரன்

மானிப்பாயில் இளைஞன் சுட்டுக்கொலை  ; வாள்வெட்டுக் கும்பலைச் சேர்ந்த மூவர் கைது

டிசம்பர் ஏழாம் திகதி ஜனாதிபதி தேர்தல் - மஹிந்த தேசப்பிரிய

வெலிகடைச் சிறைப் படுகொலையின் 36 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு…

வைத்தியர் ஷாபிக்குப் பிணை!

சகோதரர்களுக்கு இடையில் மோதல் ; இடித்து தரைமட்டமாக்கப்பட்ட வைரவர் ஆலயம் - யாழில் சம்பவம்

இந்­திய வம்­சா­வளி மலை­யக சமூ­கத்தின் முதல் பேரா­சி­ரியரான மு.சின்­னத்­தம்பி கால­மானார்



ஆவா குழுவினர் மீது பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் - புதிய காரணம் வெளியாகியது

22/07/2019 யாழ்ப்­பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட இணுவில் இணைப்பு வீதியில் சுது­மலை வடக்கு தமிழ் கலவன் பாட­சாலை  முன்­பாக ஆவா குழு  உறுப்­பினர் எனக் கூறப்­படும்  இளைஞர் ஒருவர்  பொலி­ஸாரின் துப்­பாக்கிச் சூட்டில் உயி­ரி­ழந்த விவ­காரம் தொடர்­பி­லான விசா­ர­ணை­களில் பல தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.
ஆவா குழுவில் இருந்து விலகிச் சென்ற கொலின் குழு எனப்­படும் மற்­றொரு குழுவின்  தலைவன் மீது தாக்­குதல் நடாத்­தவே இணுவில் பகு­திக்கு  மூன்று மோட்டார் சைக்­கிள்­களில்  இவர்கள் வந்­துள்­ள­தாக இது­வ­ரை­யி­லான விசா­ர­ணை­களில் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள தக­வல்­களில் இருந்து சந்­தே­கிப்­ப­தாக  விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்­பான உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் கூறினார்.
இந் நிலையில் மானிப்பாய் - இணுவில் சம்­பவம் தொடர்பில்  கொல்­லப்­பட்ட ஆவா குழு உறுப்­பி­ன­ருடன் அப்­ப­கு­திக்கு  வந்து, பொலிஸ் துப்­பாக்கிச்  சூட்டை அடுத்து, தப்­பி­யோ­டிய 5 ஆவா குழு உறுப்­பி­னர்­களில் இரு­வரை நேற்று மாலை ஆகும் போதும் பொலிஸார் அடை­யாளம் கண்­டி­ருந்­த­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர வீரகேச­ரிக்கு கூறினார். 
அடை­யாளம் காணப்­பட்­டோரைக் கைது செய்­யவும் ஏனை­யோரை அடை­யாளம் காணவும் விஷேட பொலிஸ் குழுக்கள் கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும்  இவ்­வ­ரு­டத்தில் நேற்று வரை­யி­லான காலப்­ப­கு­திக்குள் மட்டும் யாழ். குடா­நாட்டில் இடம்­பெற்ற பல்­வேறு குற்­றங்கள் தொடர்பில் 27 ஆவா குழு உறுப்­பி­னர்கள் கைது செய்­யப்­பட்­டுள்­ள­தா­கவும் பொலிஸ் அத்­தி­யட்சர் ருவன் குண­சே­கர சுட்­டிக்­காட்­டினார்.
நேற்று முன்­தினம் இரவு 8.40 மணி­ய­ளவில், யாழ்ப்­பாணம், மானிப்பாய் பொலிஸ் பிரிவின் இணுவில் இணைப்பு வீதியில் மூன்று மோட்டார் சைக்­கிள்­களில் பய­ணித்த ஆவா குழு­வினர் மீது பொலிஸார் துப்­பாக்கிச் சூட்டை நடத்­தி­யி­ருந்­தனர். ஆவா குழு இணுவில் பகு­தியில் வீடுகள் மீது தாக்­குதல் நடத்த வரு­வ­தாக மானிப்பாய் பொலி­ஸா­ருக்கு கிடைத்த தக­வ­லுக்கு அமைய, முன் கூட்­டியே பிர­தே­சத்தின்  உதவி பொலிஸ் அத்­தி­யட்­சரின் ஆலோ­ச­னைப்­படி,  கோப்பாய், மானிப்பாய் உள்­ளிட்ட பொலிஸ் நிலை­யங்­களின்  உத்­தி­யோ­கத்­தர்­களை உள்­ள­டக்­கிய  குழு­வினர் இரவு நேர விஷேட கட­மையில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டி­ருந்­துள்­ளனர்.
இதன்­போது பொலிஸார் பல இடங்­க­ளி­லிலும் பாதை­களில் வாக­னங்­களை சோதனை செய்­துள்­ளனர். அதன்­ப­டியே இணுவில் இணைப்பு வீதி­யிலும் பொலிஸ் குழு­வொன்று சோதனை நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டுள்­ளது. இதன்­போது ஒரே நேரத்தில் மூன்று மோட்டார் சைக்­கிள்கள் வேக­மாக வரு­வதை அவ­தா­னித்­துள்ள பொலிஸார் அம்­மோட்டார் சைக்­கிள்­களை நிறுத்­து­மாறு சமிக்ஞை காண்­பித்­துள்­ளனர். ஆனால் அதனை பொருட்­ப­டுத்­தாது அவர்கள் தொடர்ந்தும் மோட்­டார் சைக்­கிளில் முன் நோக்கி பய­ணிக்­கவே, பொலிஸார், தமது தற்­காப்பு அதி­கா­ரத்தை பயன்­ப­டுத்தி அவர்கள் மீது துப்­பாக்கிச் சூடு நடாத்­தி­யுள்­ளனர்.
இதன்­போது என்.பி. பீ.எப்.ஏ.4929 எனும் இலக்­கத்தை உடைய மோட்டார் சைக்­கிளில் பய­ணித்த இளைஞர் மீது துப்­பாக்கி தோட்­டாக்கள் இரண்டு பாய்ந்­துள்­ளன.
 இத­னை­ய­டுத்து அந்த மோட்டார் சைக்கிள் கட்­டுப்­பா­டின்றி அருகில் இருந்த மதி­லுடன் மோதி விழுந்­துள்­ள­துடன், குண்­ட­டி­பட்ட இளை­ஞனும் படு­கா­ய­ம­டைந்­துள்ளான். இத­னை­ய­டுத்து 22 வய­தான கொடி­காமம் பகு­தியைச் சேர்ந்த  செல்­வ­ரத்­தினம் கவிகஜன் எனும் அந்த இள­ஞனை பொலிஸார் யாழ். வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­தித்­தனர்,  எனினும் அங்கு சிகிச்சைப் பல­னின்று அவ்­வி­ளைஞன் உயி­ரி­ழந்­துள்ளார்.
இந் நிலையில் நேற்று குறித்த இளைஞன் தொடர்பில் பிரேத பரி­சோ­த­னைகள் யாழ். வைத்­தி­ய­சா­லையில் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளன. அதன்­போது துப்­பாக்கிச் சூட்­டினால் அதிக இரத்தம் வெளி­யே­றி­யதால் மரணம் சம்­ப­வித்­துள்­ள­தாக தெரி­ய­வந்­துள்­ளது.
இத­னி­டையே துப்­பாக்கிச் சூடு நடத்­தப்­பட்ட இடத்தில் இருந்து குறித்த மோட்டார் சைக்­கி­ளுக்கு மேல­தி­க­மாக 2 வாள்கள், மேலும் இரு கூரிய ஆயு­தங்­களை பொலிஸார் மீட்­டுள்­ளனர். மோட்டார் சைக்­கிளின் இலக்­கத்­த­கடும் போலி­யா­னது என ஆரம்­ப­கட்ட விசா­ர­ணை­களில் கண்­ட­றிந்­துள்ள பொலிசார் சம்­பவ இடத்­தி­லி­ருந்து தப்பிச் சென்ற ஆவா உறுப்­பினர் ஒரு­வ­ரி­னு­டை­ய­தாக இருக்­கலாம் என சந்­தே­கிக்­கப்­படும் பணப் பை ஒன்றையும் மீட்டுள்ளனர்.
இந் நிலையிலேயே மீள தலை தூக்கும் ஆவா குழுவை ஒடுக்கவும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களைக் கைது செய்யவும் வடக்கு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி விஜேகுணவர்தனவின் ஆலோசனைக்கு அமைய  மானிப்பாய், கோப்பாய் மற்றும் கொடிகாமம் பொலிஸ் நிலையங்களை உள்ளடக்கி நான்கு விஷேட பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி 













கன்னியா விவகாரம் ; நீதிமன்றம் அதிரடி  உத்தரவு

22/07/2019 திருகோணமலை சர்சைக்குரிய கன்னியா தொடர்பாக மேல்நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்த ஐந்து  இடைக்காலத்தடை உத்தரவுக்கோரிக்கையில் நான்கை மேல் நீதிமன்றம் ஏற்று அதற்கான தடையுத்தரவை இன்று பிறப்பித்தது.
இதனடிப்படையில் பல ஆயிரமாம் ஆண்டுகளாக இந்து மக்கள் வழிபட்டு வந்த வழிபாட்டுரிமை மற்றும் பிதிர்கடன் நடவடிக்கைகளுக்கு எந்தத் தடையும் தொல்பொருள் திணைக்களம் வழங்கமுடியாது எனவும்  அறிவிக்கப்பட்டுள்ளது.
 பிள்ளையார் ஆலயம் இருந்தாக குறிக்கப்பட்ட இடத்தில் ஆலயத்தை மீள அமைப்பதற்கு தொல்பொருள் திணைக்களம் விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்கி அவ்விடத்தில் ஆலயம் கட்ட அனுமதிக்க வேண்டும் என்கின்ற கோரிகையை தவிர மேலும் சமர்ப்பிக்கப்பட்ட நான்கு கோரிக்கைளையும் மேல்நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளம்செழியன் ஏற்றுக்கொண்டு குறித்த பிரதேசத்தின் காணி உரிமையாளரான மாரியம்மன் ஆலய முகாமையளாரினால் முன்வைக்கப்பட்ட தடையுத்தரவு கோரிக்கைகளுக்கு  ஆதரவாக நீதிமன்றம் இவ்வுத்தரவை வழங்கியுள்ளது.
திருகோணமலை மாகாண மேல்நீதிமன்றத்திற்குள்ள கிழக்கு மாகாண காணி தொடர்பான எழுத்தாணைக்கமைய இந்நடவடிக்கையை நீதிமன்றம் எடுத்துள்ளது. இன்றைய இந்த நீதிமன்ற நடவடிக்கையில் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் வழக்காளியான ஆலய முகாமையாளர் தரப்பில் ஆஜாராகியிருந்தார்.
இதற்கிணங்க இந்துக்களின் மத நடவடிக்கைளுக்கு எவரும் எந்தத் தடையும் ஏற்படத்தமுடியாது என சட்டத்தரணி சுமந்திரன் குறிப்பிட்டார்.  நன்றி வீரகேசரி 












இந்துக்கள் தமது பூர்வீக நிலத்தை அனுபவிக்க வழி அமைக்கப்பட்டுள்ளது - எம்.ஏ.சுமந்திரன்

22/07/2019 கன்னியா வெந்நீருற்று பகுதியை மீள பூர்விக மக்களிடம் கையளிக்குமாறு திருகோணமலை நீதி மன்ற கட்டித் தொகுதியில் அமைந்துள்ள கிழக்கு மாகாண மேல் நீதி மன்றத்திலே மிக முக்கியமான நான்கு விடயங்களுக்கு நீதி மன்றம் தடையுத்தரவை வழங்கி இந்துக்கள் தமது பூர்வீக நிலத்தை அவர்கள் அனுபவிக்க வழி அமைக்கப்பட்டுள்ளது. என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
மாகாண மேல் நீதி மன்றத்தில் தடையுத்தரவை பெற்றதன் பின் நீதி மன்ற முன்றலில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.
நீண்டகாலமாக நிலவி வந்த கன்னியா வெந்நிருற்று ஆதனத்தின் பிரச்சினைக்கு தீர்வு கிட்டப்பட்டுள்ளது. இந்த ஆதனங்கள் திருகோணமலை மாரியம்மன் ஆலயத்திற்கு சொந்தமான ஆதனங்கள் அதனுடைய நம்பிக்கைப் பொறுப்பளராக உள்ள கோகிலவாணி ரமனி அம்மா உள்ளார். எனவே அவர்தான் இன்று வழக்கைகின் மனுதாரராக நீதி மன்றத்திற்கு கொண்டு வந்து வெந்நிருற்று பகுதி மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் பல்லாயிரம் ஆண்டுகளாக இந்து மக்கள் செய்து வந்த கிரிகைகளை தற்போது தொல்பொருள் திணைக்களம் தடுக்கின்றது என்ற முறைப்பாட்டை வைத்திருக்கின்றார்.
இது சம்மந்தமான எழுத்தாணை வழங்குகின்ற அதிகாரம் மாகாண மேல் நீதி மன்றத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது. காணி தொடர்பான அதிகாரங்கள் கிழக்கு மாகாண சபைக்கு கொடுக்கப்பட்டிருக்கின்ற படியால் காணி தொடர்பாக எவரையும் கட்டுப்படுத்துகின்ற அதிகாரம் கொண்ட எழுத்தானைகளை நீதி மன்றம் வழங்க முடியும். எனவே கிழக்கு மாகாண நீதி மன்றம் இன்று 22ம் திகதி திருகோணமலை அமர்விலே எமது எழுத்தனை மனுவை பரிசீலித்து நீதி மன்ற நியாயத்திட்டத்திற்கு உட்பட்ட விடயம் கருதி இந்த வழக்கு தொடர்பாக எதிர் மனுதாரருக்கு நாங்கள் கொடுத்த அறிவித்தல்கள் அவர்களுக்கு முறையே சேர்ப்பிக்கப்பட்டது. என்பதை உறுதி செய்து நாங்கள் கேட்டுக் கொண்ட இடைக்கால தடை உத்தரவு ஐந்தில் நான்கை நீதி மன்றம் வழங்கியுள்ளது.
இதில் ஒரு இடைக்கால தடையுத்தரவு பிள்ளையார் ஆலயத்தை மீள கட்டுவதை எவரும் தடுக்கக் கூடாது என்று கேட்டிருந்தோம் அதனை நீதி மன்றம் வழங்க வில்லை. அது சம்மந்தமாக தொல் பொருள் திணைக்களம் வரத்தமானி அறிவித்தல் ஒன்றினை விடுத்துள்ளது. எனவே வழக்கின் இடையில் அல்லது வழக்கின் இறுதியில் இது தொடர்பாக இரு தரப்பினையும் விசாரித்து தீர்ப்பு வழங்குவதாக மன்று கூறியுள்ளது.
எனினும் மிக அவசரமான  மற்றைய நான்கு விடயங்களுக்கும் நீதி மன்றத்தால் தடையுத்தரவு வழங்கப்பட்டள்ளது.
இவற்றில் முதலாவதாக பிள்ளையார் ஆலயம் இருந்த இடத்தில் விகாரை அமைப்பதை உடனடியாக நிறுத்துமாறு நீதி மன்ற தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும்  இந்த பிரதேசத்திற்கு பக்தர்கள் செல்வதைத் தடுக்கக் கூடாது, அடுத்தாக  ஆலயத்திற்கும் இப்பிரதேசத்திற்கும் செல்பவர்களிடம் டிக்கட் விற்று  பணம் பெறக் கூடாது என்றும் சுதந்திரமாக இந்து மக்கள் சென்று வர வேண்டும் என்றும் அதனை அவரும் தடுக்கக் கூடாது என்றும் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 அடுத்தாக இந்த ஆதனங்களுக்கு நம்பிக்கைப் பொறுப்பாளராக உள்ள கோகிலவாணி ரமனி அம்மா அவர்களும் அவர்களின் முகவர்களும் இந்த பிரதேசத்தை நிர்வகிப்பதில் எவரும் தடுக்கக் கூடாது என்றும் நான்காவதாக மிகுதிப் பிரதேசத்தை அதாவது பிள்ளையார் ஆலயம், வெந்நீருற்று உள்ள இடத்தை தவிர்ந்த ஏனைய பிரதேசங்களை புனரமைப்பு செய்வதையும் எவரும் தடுக்கக் கூடாது என்றும் நான்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
நீதி மன்ற கட்டளைகளையும் நீதி மன்ற பதிவாளர் ஊடாக அனுப்புகின்ற அறிவித்தலையும் எதிர்மனுதாரர் இருவருக்கும் அனுப்பி அவர்கள் இருவரையும் எதிர்வரும் ஓகஸ்ட் 29ம் திகதி சமூகமளிக்குமாறு அழைப்பானையும் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் அவசரமாக இன்னுமொரு கோரிக்கையையும் முன் வைத்தோம். அதாவது இந்த வெந்நீருற்றுக்களிலே தான் இறந்த தங்களுடைய மூதாதைகளுக்கான பிதுர் கடன்களை இந்து சமயத்தவர் செய்வது வழக்கம் அதிலேயும் விசேடமாக ஆடி ஆமாவாசையன்று இதனை அணைவரும் மேற்கொள்வது வழக்கம் எதிர்வரும் 31ம் திகத இந்த ஆடி அமாவாசை தினம் ஆதலால் இந்து பக்தர்கள் அங்கு செல்வதை தடுப்பார்கள் அப்படி தடுக்கக் கூடாது என்ற தடையுத்தரவு தற்போது கிடைக்கப் பெற்றுள்ளது. எனவே எந்த தடையும் இல்லாது இந்துக்கள் ஆடி அமாவாசை தினத்தில் தங்களது கிரிகைகளை  மேற் கொள்ள முடியும் . என்றார்
 முழு இந்து மக்களுக்குமாக கோகிலவாணி ரமனி அம்மையார் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார். அவருக்கும் அனைத்து மக்கள் சார்பிலும் நன்றி சொல்ல நாம் கடமைப்பட்டுள்ளோம் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.  நன்றி வீரகேசரி 












மானிப்பாயில் இளைஞன் சுட்டுக்கொலை  ; வாள்வெட்டுக் கும்பலைச் சேர்ந்த மூவர் கைது

23/07/2019 மானிப்பாயில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட இளைஞனுடன் தாக்குதல் நடத்த வந்தனர் என்ற குற்றச்சாட்டில் மூன்று பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.
அத்துடன், மானிப்பாய் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கும் பொறுப்பு கோப்பாய் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரால் வழங்கப்பட்டுள்ளது.
மானிப்பாய் இணுவில் வீதியில் 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட வாள்வெட்டுக் கும்பலை காவலில் ஈடுபட்டிருந்த பொலிஸார் வழிமறித்தனர். எனினும் அவர்கள் தப்பித்த வேளை, பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இரவு 8.40 மணியளவில் இடம்பெற்றது
கொடிகாமம் கச்சாயைச் சேர்ந்த செல்வரத்தினம் கவிகஜன் (வயது -23) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்தார். 
ஆவா குழுவைச் சேர்ந்தவர் என்று தெரிவிக்கும் பொலிஸார் சம்பவ இடத்திலிருந்து 2 வாள்களையும் மீட்டிருந்தனர். அத்துடன், உயிரிழந்தவர் பயணித்த மோட்டார் சைக்கிளின் இலக்கத் தகடு போலியானது என்றும் பொலிஸார் தெரிவித்திருந்தனர். 
இந்த நிலையில் வட்டுக்கோட்டைப் பொலிஸ் பிரிவில் பதுங்கிருந்த மூவர் இன்று கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகரின் சிறப்புப் பொலிஸ் பிரிவினரே சந்தேகநபர்கள் மூவரையும் கைது செய்தனர்.
அவர்களில் இருவர், இளைஞன் சுட்டுக்கொல்லப்பட்ட போது பின்னால் நான்காவது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் என்று பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் சந்தேகநபர்களைத் தேடி தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெறுவதால் கைது செய்யப்பட்டோரின் விவரத்தை வெளியிட பொலிஸார் மறுத்துள்ளனர்.
பொலிஸாரின் கண்ணில் தென்பட்டுத் தப்பித்த 5 பேரும் கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.  நன்றி வீரகேசரி 













டிசம்பர் ஏழாம் திகதி ஜனாதிபதி தேர்தல் - மஹிந்த தேசப்பிரிய

22/07/2019 டிசம்பர் ஏழாம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடக்கும் எனத் தெரிவித்த தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, நீதிமன்றம் சென்று தேர்தலை பிற்படுத்த ஜனாதிபதி முயற்சிக்க மாட்டார் என்றும் குறிப்பிட்டார். 
மேலும் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் பதிலாள் வேட்பாளர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு இடமளிக்கப்போவதில்லை. 
அதனால் அரசியல் கட்சிகள் தங்களுக்கு ஆதரவாக பதில் வேட்பாளர்களை நியமிக்க முயற்சிக்கவேண்டாம். பிரதான வேட்பாளருக்கு ஒத்ததாக ஆடை அணிந்தும் உருவத்தை மாற்றிக்கொண்டு செயற்படுவதும்  மக்களை ஏமாற்றும் நடவடிக்கையாகும். இதற்கு நாங்கள் இணங்கமாட்டோம். அதேபோன்று ஜனாதிபதி வேட்பாளராக சுயாதீனமாக போட்டியிட களமிறங்கும்  யாராவது பதிலாள் வேட்பாளர் போன்று செயற்பட்டால் அவர் பதிலாள் என்று பகிரங்கப்படுத்த ஆணைக்குழுவுக்கு நேரிடும். அவர்கள் எங்களுக்கு எதிராக நீதிமன்றம் சென்றாலும் பரவாயில்லை என்றும் குறிப்பிட்டார்.   நன்றி வீரகேசரி 













வெலிகடைச் சிறைப் படுகொலையின் 36 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு…

25/07/2019 தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஸ்தாபகர் குட்டிமணி மற்றும் தளபதி தங்கதுரை உட்பட 53 பேர் படுகொலை செய்யப்பட்ட வெலிகடைப் படுகொலையின் 36வது நினைவு தினம் இன்றைய தினம் தமிழீழ விடுதலை இயக்கத்தின் மட்டக்களப்பு காரியாலத்தில் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், தமிழீழ விடுதலை இயக்கத்தின் பொருளாளருமான கோவிந்தம் கருணாகரம் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் உபதலைவரும், முன்னாள் கிழக்கு மாகாணசபை உபதவிசாளருமான இந்திரகுமார் பிரசன்னா, மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வர் க.சத்தியசீலன், மண்முனை தென்எருவில் பற்றுப் பிரதேசபைத் தவிசாளர் யோகநாதன், போரதீவுப் பற்றுப் பிரதேசபைத் தவிசாளர் ரஜனி உட்பட உள்ளுராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள், கட்சியின் மூத்த உறுப்பினர்கள், இளைஞர் அணி உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஸ்தாபக தலைவர் குட்டிமணி, தளபதி தங்கதுரை ஆகியோரின் படங்களுக்கு மலர்மாலை அணிவித்து சுடரேற்றி மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
1983ம் ஆண்டு ஜுலை 25 தொடக்கம் 27ம் திகதி காலப்பகுதிகளில் இடம்பெற்ற வெலிகடைச் சிறைச்சாலை கலவரத்தின் போது குட்டிமணி தங்கதுரை உட்பட போராளிகள், பொதுமக்கள் என 53 பேர் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டார்கள். அத்தினத்தை தமிழீழ விடுதலை இயக்கத்தினால் தமிழ்த் தேசிய வீரர்கள் தினமாக வருடாவருடம் அனுஷ்டித்து அஞ்சலி செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 










வைத்தியர் ஷாபிக்குப் பிணை!

25/07/2019 சொத்துக்குவிப்பு மற்றும் கருத்தடை செய்தமை போன்ற போலியான இரு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கடந்த மேதம் 24 ஆம் திகதி கைது செய்யப்பட்டு சுமார் 2 மாத காலம் தடுத்து வைக்கப்பட்டிருந்த குருணாகல் போதனா வைத்தியசாலையின் பிரசவ மற்றும் பெண்ணியல் நோய் தொடர்பிலான சிரேஷ்ட வைத்தியர் சேகு சிகாப்தீன் மொஹம்மட் ஷாபி இன்றைய தினம் 2,50000 ரூபா ரொக்க பிணையிலும் 2.5 மில்லியன் ரூபாவுடைய 4 சரீர பிணையிலும் சற்றுமுன் விடுவிக்கப்பட்டுள்ளார்.
முறையற்ற விதத்தில் சொத்து சேகரிப்பு குற்றச்சாட்டு தொடர்பில் குருணாகல் வைத்தியருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் அவருக்கு எதிரான வழக்கு விசாரணை குருணாகல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்தது.
இந்நிலையில், குறித்த வழக்கு கடந்த 11 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சந்தேக நபரான வைத்தியரை இன்று வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டிருந்தது. 
இதையடுத்து  வைத்தியர்  ஷாபிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழக்கு இன்று (25) குருணாகல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போதே நீதிவான் பிணையில் செல்ல அனுமதி வழங்கினார்.
இதேவேளை வைத்தியர் ஷாபியின் வழக்கு விசாரணைக்கு முன்னதாக குருணாகல் மக்களினால் அமைதிப் போராட்டம் ஒன்று இன்று (25) காலை 9 மணியளவில் முன்னெடுக்கப்பட்டதுடன் பலத்த பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது. 
நன்றி வீரகேசரி
















சகோதரர்களுக்கு இடையில் மோதல் ; இடித்து தரைமட்டமாக்கப்பட்ட வைரவர் ஆலயம் - யாழில் சம்பவம்

25/07/2019 யாழில். சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக வைரவர் ஆலயம் ஒன்று இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளதாக ஆலயத்தில் வழிபாடுகளை மேற்கொண்டு வந்த அயலவரான முதியவர் ஒருவர் தெரிவித்தார். 
யாழ்ப்பாணம் சுண்டுக்குளி பகுதியில் அமைந்துள்ள மாவிளந்தையடி ஞான வைரவர் கோவில் நேற்று புதன்கிழமை இரவு இனம் தெரியாத கும்பல் ஒன்றினால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஆலயத்தில் இருந்த வைரவர் சிலை உள்ளிட்ட விக்கிரங்களையும் குறித்த கும்பல் களவாடி சென்றுள்ளது. 
குறித்த சம்பவம் தொடர்பில் அயலவரான முதியவர் கருத்து தெரிவிக்கையில், 
இந்த ஆலயம் பல வருடங்கள் தொன்மையானது. அவ்வாலயத்தை பரம்பரை பரம்பரையாக ஒரு குடும்பம் பாதுகாத்து வந்தது. அக்குடும்பத்தில் இறுதியாக பாதுகாத்து வந்தவர் 1983 ஆம் கால பகுதியில் வெளிநாட்டுக்கு செல்லும் போது, ஆலயத்தில் அணைத்து தரப்பினரும் வழிபாடுகளை மேற்கொள்ள வழியமைத்து கொடுத்தார். 
அதனை தொடர்ந்து அயலவர்கள் பலரும் வைரவரை வழிபட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த 2017ஆம் ஆண்டு கால பகுதியில், ஆலயத்திற்கு அருகில் வசிப்போர் , புலம்பெயர் தேசத்தில் வசிப்போர் என பலரின் நிதி பங்களிப்புடன் ஆலயம் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு கும்பாபிசேகம் செய்யப்பட்டது. 
அதனை தொடர்ந்து ஆலயத்தில் சிறப்பான முறையில் வழிபாடுகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் குறித்த ஆலயத்தினை ஆரம்ப காலங்களில் ஆதரித்து வந்த குடும்பத்தின் சகோதரர்களுக்கு இடையில் கருத்து மோதல்கள் உருவாகி முரண்பாடுகள் தோற்றம் பெற்றன. குறித்த ஆலயமே கருத்து முரண்பாடுகள் தோற்றம் பெற காரணமாக அமைந்திருந்தன. 
இந்நிலையிலையே ஆலயத்தினுள் புகுந்த கும்பல் ஒன்று ஆலயத்தினை முற்றாக இடித்தழித்ததோடு ஆலய விக்கிரகங்களையும் களவாடி சென்றுள்ளனர். 
குறித்த கும்பலை புலம்பெயர் நாட்டில் வாழும் ஆலயத்தினை முன்னைய காலத்தில் ஆதரித்து வந்தவரின் மகளே காசு கொடுத்து கூலிக்கு அமர்த்தி இந்த நாசகார செயலை செய்வித்துள்ளார் என நாம் சந்தேகிக்கின்றோம். 
ஆலயம் இடித்தழிக்கப்பட்டு, விக்கிரகங்கள் களவாடப்பட்டமை தொடர்பில் யாழ்ப்பாண போலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளோம். பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 
இதேவேளை ஆலயம் இடிக்கப்பட்டமை தொடர்பில் இந்து சமய பெரியவர்கள் , அமைப்புக்கள் உள்ளிட்டவற்றுக்கு தெரியப்படுத்தியுள்ளோம். சிவசேனா அமைப்பின் தலைவர் மறவன் புலவு சச்சிதானந்தன் இடிக்கப்பட்ட ஆலயத்திற்கு நேரில் சென்று பார்த்து எமக்கு ஆறுதல் கூறி சென்றுள்ளார்.
அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவிடம் ஆலயத்திற்கு நிதியுதவி கோரி இருந்தோம். அவரும் நிதி ஒதுக்கி இருந்தார். அந்த நிதியில் ஆலயத்தினை மேலும் சில புனரமைப்பு வேலைகளை செய்ய முயன்ற போதிலேயே ஆலயம் முற்றாக இடித்தழிக்கப்பட்டுள்ளது என கவலையுடன் முதியவர் தெரிவித்தார். நன்றி வீரகேசரி 











இந்­திய வம்­சா­வளி மலை­யக சமூ­கத்தின் முதல் பேரா­சி­ரியரான மு.சின்­னத்­தம்பி கால­மானார்

28/07/2019 இந்­திய வம்­சா­வளி மலை­யக சமூ­கத்தின் முதல் பேரா­சி­ரியர் என்ற பெரு­மைக்­கு­ரிய பொரு­ளியல் பேரா­சி­ரியர் மு.சின்­னத்­தம்பி தனது 79 ஆவது வயதில் நேற்று கொழும்பில் கால­மானார். 
 கண்டி மாவட்டம் ரங்­கல எனும் பிர­தே­சத்தில் முத்­து­சாமி –முத்­து­வ­டிவு தம்­ப­தி­க­ளுக்கு பிறந்த இவர்,  அங்­குள்ள தோட்டப் பாட­சா­லையில் ஆரம்பக் கல்­வி­யைத் ­தொ­டர்ந்தார். இவ­ரது தந்தை தோட்ட வெளிக்­கள உத்­தி­யோ­கத்­த­ராவார். 1948 ஆம் ஆண்டு இவ­ரது குடும்பம் தல­வாக்­கலை கல்­கந்த எனும் பிர­தே­சத்­துக்கு  இடம்­பெ­யர்ந்­தது. பின்னர் தல­வாக்­கலை அரச சிரேஷ்ட பாட­சா­லையில் சாதா­ரண தரம் வரை பயின்றார். பின்னர் 1959 இல் தெல்­லிப்­பளை மக­ஜனா கல்­லூ­ரியில் உயர்­தரம் பயின்று 1961 இல் பேரா­தனை பல்க­லைக்­க­ழ­கத்­துக்கு தெரி­வாகி பொரு­ளி­யலை விசேட பாட­மாக தொடர்ந்தார். 1965 இல் உதவி விரி­வு­ரை­யா­ள­ராகும் சந்­தர்ப்பம் கிடைத்­தது. 



இரண்டு வரு­டங்­களில் நிரந்­தர விரி­வு­ரை­யா­ள­ராகி பின்பு 1969 இல் இங்­கி­லாந்தின் மன்­செஸ்டர் பல்­க­லைக்­க­ழ­கத்தில் பொரு­ளியல் முது­மாணி பட்­டத்தைப் பெற்றார். 1974 இல் பேரா­தனைப் பல்­க­லைக்­க­ழ­கத்தின் சிரேஷ்ட விரி­வு­ரை­யா­ள­ராகி கட­மை­யாற்றி வந்த இவர்,  1993 ஆம் ஆண்டு  பொரு­ளி­யல்­துறை பேரா­சி­ரி­ய­ரா­கவும் 1997 இல் துறைத்­த­லை­வ­ரா­கவும்  தெரிவு செய்­யப்­பட்டு  2006 இல் ஓய்வு பெற்றார். தோட்ட வீட­மைப்பு உட்­கட்­ட­மைப்பு மற்றும் சமூக அபி­வி­ருத்தி அமைச்சின் கீழ் 2006 ஆம் ஆண்டு பத்­தாண்டு திட்ட உரு­வாக்­கத்தில்  தொழில் கல்வி சம்­பந்­த­மான குழு­விற்கு தலைமை தாங்கி பல்­வேறு காத்­தி­ர­மான பங்­க­ளிப்பை செய்தார். தேயி­லையின் செழு­மையும் தொழி­லா­ளர்­களின் ஏழ்­மையும் என்ற ஆய்வு நூலிற்­காக 2015 ஆம் ஆண்டு இவ­ருக்கு சாகித்ய விருது கிடைத்­தது. 
தோட்­டத்­தொ­ழி­லா­ளர்­களின் மாதச்­சம்­பளம் குறைந்த பட்சம் ஆயிரம் ரூபா­வாக இருக்க வேண்டியதன் அவசியம் ஏன் என்­பதை புள்ளி விப­ரங்­க­ளோடு ஆய்வு செய்து வெளி­யிட்ட இவர், மலை­யக பல்­க­லைக் ­க­ழகம் பற்­றிய செயற்­பா­டு­களில் காத்­தி­ர­மான கருத்­துக்­களை முன்­வைத்­தார்.  அன்­னாரின் பூத­வுடல் அஞ்­ச­லிக்­காக கொழும்பு ஜய­ரத்ன மலர்ச்­சா­லையில் வைக்­கப்­பட்டு, இன்று ஞாயிற்­றுக்­கி­ழமை மாலை 4 மணி­ய­ளவில் பொரளை கனத்தை மயா­னத்தில் நல்­ல­டக்கம் செய்­யப்­படும்.   
– எம். வாம­தேவன் - நன்றி வீரகேசரி 









No comments: