விளிப்புடன் இருக்க வேண்டும் ! - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா .... மெல்பேண் ... அவுஸ்திரேலியா        மண்ணிலே வாழ்கின்ற மனிதரெல்லாம்  நாளும்
image1.JPG             வாய்மையை போற்றியே வாழவேண்டும்  அவர்
        கண்ணாலே பார்க்கின்ற காட்சிகளை   என்றும் 
               கருத்துடன் மனமதில் இருத்த  வேண்டும் !

        பெண்மையை பழிக்கின்ற செயல்களை என்றுமே
             மண்ணுக்குள் புதைந்திட செய்யவேண்டும் நிதம்
        புண்படும் வகையிலே பேசிடும் போக்கினை 
              புறமெனத் தள்ளியே விடுதல் வேண்டும்  !

          அன்புடன்  பேசிடும்  ஆற்றலை  யாவரும் 
                 அகமதில் இருத்திட விரும்ப  வேண்டும் 
          அறமதை செய்திட  நினைத்திடும் பாங்கினை
                 அனைவரும் ஏற்றிட  முனைதல் வேண்டும்   ! 

          துட்டராய் இருப்பாரை காணாது  என்றுமே
                 தூங்காமல் விளிப்புடன் இருத்தல் வேண்டும் 
          முட்டியே மோதிடும் குணமதை வாழ்க்கையில்
                 வெட்டியே எறிந்துமே நிற்றல் வேண்டும்   !              
               
               
No comments: