என்றுமே விரும்பி நான் இருக்கின்றேன் ! - மகாதேவஐயர் ஜெயராமசர்மா மெல்பேண் .. அவுஸ்திரேலியா

image1.jpeg
கற்றிடும் நூல்களால் பெற்றிடும் பயனினை நற்றுணை என்று நான் நினைக்கின்றேன் 
மற்றவர் முகமதில் மகிழ்ச்சியை கண்டிட  நித்தமும் விரும்பி நான் இருக்கின்றேன் !

சொற்களை என்றுமே இனிமையாய் பேசிட எண்ணி நான் சொற்களைத் தேடுவேன் 
அடுத்தவர் மனத்தினில் அமர்ந்திடும் சொற்களால் அவர் அகம் நிறைந்திட்டால் மகிழுவேன் !

வேற்றுமை காட்டிடும் சொற்களை என்றுமே விரும்பி நான் பார்ப்பது இல்லையே 
சாற்றிடும் அத்தனை சொற்களும் நாளுமே  சங்கடம் வரா வண்ணம் வழங்குவேன் !

வள்ளும் தந்திடும் கருத்தினை நாளுமே மனம் அதில் இருத்தியே வாழ்கிறேன் 
என்மனம் நிறைந்திடும் கருத்தினை ஈய்ந்திட  என்றுமே  விரும்பி நான்  இருக்கிறேன் !

No comments: