ஏனையவர்களிலிருந்து கார்த்திகா வேறுபடும் விதம் 3- நாட்டியகலாநிதி கார்த்திகா கணேசர்

.

நல்வாழ்வில் ஊன்றி நிற்கும்
உணர்வ னொடும்
நம்முடைய பரதக்க கலை
உறவு கொண்டால்
சுவையான பல புதிய
படைப்புக்கள் தோன்றும்
என்றார் கவிஞர் முருகையன்.

நண்பர் சிவத்தம்பியோ  “நடனத்தை வெறும் பொளுதுபோக்காக கொள்ளாது ஆக்கமுறைக்குப் பயன்படுத்த தக்க கலைவடிவமாக கொண்டு அதனை விளக்கியுள்ளது இந்நூலின் சிறப்பம்சமாகும்” என நான் எழுதிய முதல் நூல் “தமிழர் வளர்த்த ஆடற்கலைகள்” எனும் நூலுக்கான விமர்சனத்தில் எழுதி உள்ளார். ஆக்க முறையில் எடுத்துச் செல்வது என் கடன். என் ஆய்வுகள் மூலம் நான் அறிந்தவையே என்னை துணிகரமாக செயல்பட வைத்தது. கருத்தை கூற எந்தவகை நாட்டியம் பொருந்துகிறதோ அதை தயங்காது கையாணட்டேன். சமூகத்திற்கு நாட்டியம் பயன் உள்ள கலையா அமைவதற்கு கருப்பொருள் முக்கியம். நடனம் அதை எடுத்து விளக்க உதவும் சாதனமே.


வடஇந்திய நாட்டிய நாடகத்தின் வளர்ச்சிக்கு முன்னோடியாக விளங்கியவர் உதயஷங்கர். (இவர் சித்தார் மேதை ரவி ஷங்கரின் மூத்த தமையன்) மேடை  திறனுடனும், துணிவுடனும் பலவகை ஆடல் முறைகளையும் கலந்து புதிய பாணியை உருவாக்கினார். பரதம், கதகளி மணிப்புரி, கதக் போன்ற நாட்டியங்களை தேவைக்கேற்ப பயன் படுத்தினார் உதயஷங்கர். நானும் பரதம், வடமோடி, கண்டியன நடனம், scotish country  நடனம் போன்றவற்றை கற்று எனது நாட்டிய நாடகங்களில் பயன் படுத்தினேன். பிற்பாடு கூச்சிப்புடி நடனத்தையும் கற்றேன். “கார்த்திகேயன்” என்ற நாட்டிய நாடகத்தில் முருகன் பொறாமைகளை படைத்து வெற்றி கண்ட உதயஷங்கர் “உழைப்பும் யந்திரமும்” (Labour and machenary) என்ற நாட்டியத்தின் மூலம் தொழில் நுட்ப வளர்ச்சிக்கும் மனித சமுதாய நிலைக்கும் உள்ள முரண்பாட்டினை எடுத்து காட்டினார். இவர் 1930 களிலே ஐரோப்பாவிற்கு ஒவியம் கற்க சென்றார். அன்று பவ்லோவா என்ற Ballet நர்தத்கியே இவர் தன்னுடன் ராதா கிறிஷ்ணா என்ற நாட்டியத்தில் ஆட அழைத்தார் அவ்வாறே உதய ஷங்கர் நடனகாறர். 

1930 களில் ஐரோப்பா பொருளாதார பின்னடைவால் பாதிக்கப்பட்டது மக்கள் வேலை அற்று தவித்தனர். நவீன இயந்திரமயமாக்கலே வேலை இன்மைக்கு காரணம் என்ற சிந்தனையே இவரது “உழைக்கும் யந்திரத்திற்கு” கருப் பொருளாக அமைந்திருக்கலாம் உதயஷங்கரின் கலா நிலையத்தில் சேர்ந்து பணியாற்றிய ஷாந்திபர்தன் குறிப்பிட தக்கவர்;. பிரபல மணிப்புரி கலைஞரான ஷாந்திபரதன் பரதம், கதகளி, கற்று புதுமை படைத்தார். 1940 களிலே வங்காள தேசம் சாங்கொனா பஞ்சத்தால் பீடிக்கப்பட்ட காலம். இது இந்தியாவையே உலுக்கியது. “மக்களின் பஞ்சத்தையும், தரித்திரத்தையும், போக்கவும் சமுதாயத்தை விரித்தென செய்யவும். தம்போன்ற சிருஷ்டி கலைஞரின் பங்கு என்ன” என குமுறிய ஷாந்திபர்தன் ஃபூர்ஹாஹய் பெங்கால் (வங்கத்தின் குரல்) என்ற நாட்டிய நாடகத்தை தயாரிதார். அதை தொடர்ந்து  சமூக பொருளாதார சிக்கல்களையும் பண்டைய வரலாற்றையும் கற்றுணர்ந்து இந்தியாவை கண்டுபிடித்தல் (Discovery of India) தலைசிறந்த நாட்டியத்தை தயாரித்தார்.

இத்தனையும் கற்றுணர்ந்த எனக்கு புதுமை படைப்பதில் ஆர்வம் இருப்பது இயற்கையே. என்மனம் பழமையில் தூங்கி இருக்கவில்லை. இழமை துடிப்பும் சேர பல்வகை நாட்டியத்தை கற்றவர் – 1974 இல் இராமாயண நாட்டிய நாடகத்தில் வெற்றி கண்டவள் 1975 இரு நாட்டிய நாடகங்களை தயாரித்தேன். அவையே “உதயம்”    கிருஷ்ணலீலா”

எமது நாட்டிலும் நாட்டிய நாடகமும், அதன் மூலம் ஆடற்கலையும் நன்கு விருத்தி பெற்று பரிநமிக்க வேண்டுமெனில் மேற்கூறிய நாட்டிய மேதைகளில் வழியில் சென்று, எமது சமுதாய பிரச்சனைகளையும் கருப்பொருளாக்கிக் கொண்டு எமது ஆடற்கலை வடிவங்களை தரம் அறிந்து சந்தர்ப்பத்துக்கேற்ப பயன் படுத்த வேண்டும் என்ற முடிவுடன் இயங்கிறேன். நான் தயாரித்த உதயம் நாட்டிய நாடகம் இதை விமர்சகா எவ்வாறு நோக்கினார்கள் என்பதை தருகிறேன்.

தினகரன் வார மஞ்சரி 22.6.75 சரியான பாதையிலே……..
திரு பத்துல ஜெயவர்த்தன – சிங்கள நாடக ஆசிரியர். குலா விமர்சகர் பௌத்த கலைக்களஞ்சியத்தின் துணை ஆசிரியர்.
சில வாரங்கட்கு முன்பு கார்த்திகாவின் புதிய நாட்டிய நாடகங்கள் “உதயம்” "கிருஷ்ணா லீலா” என்பவற்றை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. இவற்றுள் உதயம் மூலம் கார்த்திகா மேலும் சில அடிகள் முன்னோக்கி வைத்துள்ளார் என்பதில் ஐயம் இல்லை. உதயத்தின் கருப்பொருள் மிக எளிமையானது. சிறுமிகள் உணர்ந்து நடிக்கத் தகுந்தது. ஆயினும் ஈசாப் கதைகள், கிரேக்க புராணக் கதைகள் போன்று பெரியவர்களையும் ஈர்க்கும் பண்பு கொண்டது. காயணி ஆதிக்கத்தி நின்றும் விடுதலை அடைவதற்கு ‘சிறிய நாடுகள் ஒருங்கிணைந்து தொடுக்க வேண்டிய போராட்டத்தையும் அதன் வெற்றியையும் ‘ உணர்த்தும் முகமாக அமைக்கப்பட்ட கதை, காட்டில் நடைபெறுகிறது. பாத்திரங்கள் யாவும் மிருகங்களும் பறவைகளுமே. சந்தர்ப்பங்களுக்கும் உணர்ச்சி பாவங்களுக்கும் சம்பவங்குளுக்கும் ஏற்ற வகையில் வெவ்வேறு வகையான ஆட்ட முறைகள் புகுத்தப்பட்டதால் நாடகம் வெகு விறுவிறுப்புடன் வெற்றிகரமாக நடந்தேறியது.

தினகரன் வாரமஞ்சரி – 6 யூன் 1976 – கே. ஏஸ். சிவகுமாரன்
கூட்டுக்கலை முயற்சியாக கார்த்திகா கணேசரின் நாட்டிய நாடகங்கள் அமைவது வளக்கம். உதயம் என்ற நாட்டிய நாடகம் மூன்றாவது உலகநாடுகள் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக மேற்கொள்ளும் போராட்டத்தை சித்தரிப்பதாக அமைந்திருந்தது. இயற்கையோயிணைந்த காட்டுப் பிரதேசத்தில் விலங்குகள் ஒன்று கூடி தமது எதிரியான வேடனை வீழ்த்துவதாக நாடகத்தின் புறச்சூளழலைச் சித்தரிப்பு அமைந்தது.

வீரகேசரி – 29 யூன 1975 - இரு நாட்டிய நாடகங்கள் ஒரு நோக்கு – “உதயம்” ச. கேசவன்
தமிழ்க் கலைகளின் பழமையை பேணும் கருத்து ஆதிக்கம் புரிகின்ற சூளலிலே புதுமையான பயன்நிறைந்த சிறந்த கலைப்படைப்புகளை அளிக்க முன்வரும் கலைஞர்கள் கலை ஆர்வம் கொண்ட ரசிகர்களாலும், திறனாய்வாளர்களாலும் உன்னிப்பாக கவனிக்கப்படுவது இயல்பே. சென்ற ஆடியிலிருந்து ஒரு புதுமை பூக்கத் தொடங்கியுள்ளது.
திருமதி கார்த்திகா கணேசர் தமது முதற் தயாரிப்பான இராமாயணம் நாட்டிய நாடகத்தைத் தொடர்ந்து அவரது இரண்டாவது தயாரிப்பாக இரண்டு குறு நாடகங்களை அண்மையில் “லயனல் வென்ட்” அரங்கத்தில் மேடை ஏற்றியிருந்தார்.
முதலாவது நாட்டியம் “உதயம்”. சமுதாயப் பிரக்ஞையுள்ள கலைஞர்களது படைப்புக்கள் அனைத்திலுமே இந்த நாட்டுக்கும் மக்களுக்கும் தேவையான ஏதாவது செய்தி இருந்தே தீரும். தனியே பாவங்களையும் பாடல்களையும் கொண்டு கலை கலைக்காகவே எனும் நோக்கில் ஒரு நாட்டியம் படைப்கப்பட்டால் அது வெறும் பயனற்ற ஒன்றாக போய்விடும். அதே சமயம் உண்மைகள் என்பதற்காக அவற்றை அப்படியே மக்கள் முன் கூறப்போனாலோ அது வெறும் மேடை பேச்சாகி விடும். உண்மைகள் கலை எழிலோடு பக்குவமாக கலந்து படைக்கப்படுகையிலே, அவை மக்களின் மனங்களிலே இலகுவாகவும், ஆழமாகவும் பதிகின்றன. கலையின் பெரும் பயனே இதுதான்.
நாட்டு மக்கள் ஒற்றுமையுடனும், துணிவுடனும் ஒரு இலட்சியமாக செயற்பட்டால் அந்நியனின் ஆதிக்கத்தை ஒழித்து விடலாம்! இது தான் “உதயம்” சொல்லும் செய்தி.
கதையைக் கூறுபவை விலங்குகளும், பறவைகளும் தேனீக்களும், தாமரை மலர்களுமே. காட்டின் ஒரு காலை நேரம் சூரியன் உதயமாகிறான். அவனது பொற்கதிர்களின் தமுவல்களில் தாமரைகள் இதள் விரிக்கின்றன. பறவைகளும் விலங்குகளும் ஆடிப் பாடித் திரிகின்றன. இன்னிலையில்தான் “அன்னிய வேடர்கள்” புகுகின்றனர். நாள்தோறும் பறவைகளும், விலங்குகளும் வேடரின் அம்புக்குப் பலியாகின்றன. முடிவில் வேடர்களும் பறவைகளும் ஒன்ற கூடி வேடரை ஒழிக்கத் திட்டம் தீட்டுகின்றன. அதன்படி ஒன்றாக சேர்ந்து வேடரை அழித்து முடிக்க மீண்டும் சுதந்திரம் உதயமாகிறது. இந்த நாட்டியத்தில் இரண்டே இரண்டு பாட்டுக்கள் மட்டுமே உள்ளன. இவை இரண்டுமே உணர்ச்சிகரமாக எழுதப்பட்டன. இதை எழுதிய ஈழத்து ரத்தினம் பாரட்டுக்க உரியவர்.
இந்த இரண்டு பாடல்கள் தவிர மீதியெல்லாம் நடன உத்திகளாலேயே வெளிப்படுத்தப் பட்டன. மொழியை கடந்த கார்த்திகாவினது கலைத்திறன் ஒவ்வொரு காட்சியிலும் அதில் பங்குபற்றிய ஒவ்வொரு பாத்திரத்தினதும் ஒவ்வொரு நடன அசைவுகளிலும் சுடர் விட்டது!
அந்த தாமரை மலர்களின் மலர்வையும், தேனீக்களின் ரீங்காரத்தையும், அந்தப் பறவை வேடனின் அம்பால் அடிபட்டுத் தவித்த தவிப்பையும், அதன் இணையினது அளவற்ற சோகமும் ஒன்று கூடி செயல்பட்டது. கிடைத்த வெற்றியும் யாராலும் என்றும் மறக்க முடியாது”
என வீரகேசரியில் ச. கேசவன் எழுதினார்.

Tribune July 26 1975 Review
The Dawn – K. S. Sivakumaran & Krishnaleela
Presented by Karthiga Kanesar’s Adal Kalaiyaham Saraswathie Hall 29 June 1975.
Karthiga Kanesar is the first Tamil dancer in this country to use the dance forms (oriental) to convey socialist ideas. She has a school which teaches dance forms with new content to society and to dancers themselves. The idea of collectivism as opposed to self important egoistic trents is encouraged. Her Art House presented for the second time two short ballets end of the last month.

1 comment:

யசோதா.பத்மநாதன் said...

நாட்டிய வித்தகிக்கு வாழ்த்துக்கள். கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.கட்டுரை மூலம் பல விடயங்களை அறிய முடிந்தது.

ஓடிக்கொண்டிருக்கும் நதி போல இருக்கவேண்டும் கலை, இலக்கியம், சமூகம்,வாழ்க்கை,சமயம், பண்பாடு, மொழி மற்றும் இன்ன பிற.....அப்படி இருக்கின்ற போது தான் அது தன்னை தக்க வைத்துக் கொள்ளும். மாற்றங்களுக்கேற்ப வளைந்தும் நெளிந்தும் தண்ணீரைப் போல நெகிழ்ந்தும், ஏற்றுக் கொண்டும்,புது வடிவம் எடுத்துக் கொண்டும் செல்லும் தன்மையால் அது தன்னை தக்கவைத்துக் கொள்ளும். அவ்வாறு நெகிழாத தன்மை கொண்டவை எல்லாம் தேங்கியவையாக காலப்போக்கில் வளர்ச்சியற்று வற்றி விடும் சாத்தியங்களே அதிகம்.

மேலும், பரதக் கலையில் புதுமைகளை புதிய சாத்தியங்களை பரிசோதனை முயற்சியாக செய்து பார்ப்பவர்கள் மிக அரிது. குறிப்பாக வெளி நாடுகளில் வாழ்பவர்கள் அந் நாட்டு கலைகளை அறிவதும் அவற்றின் அரிய அழகியல் தன்மைகளை நம் பாரம்பரியக் கலைகளுக்குள் கொண்டுவருவதும் கலையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தும் முயற்சியாகும்.அது தான் வரலாற்றில் நின்று நிலைக்க வல்லது. மற்றவை எல்லாம் கால வெள்ளத்தில் கலைந்து போய் விடும்.

உங்களின் புதுமையானதும் பயனுள்ளதுமான துணிகர முயற்சிகளை உங்கள் கட்டுரை மூலமாக அறிய முடிந்தது.ஒரு கலைஞனுக்கு இருக்கவேண்டிய கற்பனைத் திறனும் ஆக்க செயற்பாடும் உங்கள் நடனச் செயற்பாட்டில் மிளிர்வதை அறிந்து மகிழ்ந்தேன். பார்ராட்டுக்கள்.

மற்றும் உங்களிடம் எனக்கொரு வேண்டுகோள் இருக்கிறது. நம் நாட்டுப் பழங்குடிகளான அபிரோஜினல் மக்களின் நடனங்களில் நம் காவடி நடனத்தின் சாயல் இருக்கக் கண்டிருக்கிறேன். ஆதி காலத்தில் லெமூரியாக் கண்டம் இருந்ததாகவும் அவுஸ்திரேலிய ஆசியக்கண்டங்கள் இணைந்திருந்ததாகவும் ஒரே மக்கள் கூட்டம் அங்கிருந்ததாகவும் இன்றும் பல ஐதீகங்கள் உலாவுகின்றன. அதனை நம்புபவர்கள் இந்த நடனத்தையும் அதற்கு ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

உங்கள் நாட்டிய அனுபவத்தோடு இந் நடனத்தையும் இணைத்து ஏதேனும் புதுமை செய்யும் சாத்தியங்கள் இருக்குமா? அறியவும் அதனைக் கண்குளிரக் காணவும் ஆவலுடையேன்.