உலகச் செய்திகள்

.
குடியேற்றவாசிகளுடன் சென்ற படகு பிறிதொரு படகுடன் மோதி விபத்து

மக்காவில் சனநெரிசல் : பலியானவர்களின் எண்ணிக்கை 310 ஆக உயர்வு

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

குடியேற்றவாசிகளுடன் சென்ற படகு பிறிதொரு படகுடன் மோதி விபத்து

21/09/2015 துருக்­கிய கடற்­க­ரைக்கு அப்பால் குடி­யேற்­ற­வா­சி­களை ஏற்றிச் சென்ற மிதவைப் பட­கொன்று பிறி­தொரு பட­கொன்­றுடன் மோதி ஞாயிற்­றுக்­கி­ழமை விபத்­துக்­குள்­ளா­னதில் குறைந்­தது 13 குடி­யேற்­ற­வா­சிகள் உயி­ரி­ழந்­துள்­ள­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.




வட மேற்கு துருக்­கிய துறை­மு­க­மான கனாக்­கே­லி­யி­லி­ருந்து லெஸ்பொஸ் தீவை நோக்கி 46 குடி­யேற்­ற­வா­சி­க­ளுடன் பய­ணித்த மிதவைப் படகே இவ்­வாறு விபத்­தக்­குள்­ளா­கி­யுள்­ளது.
அந்தப் படகில் பயணம் செய்த 20 பேர் உயிருடன் காப்பாற்றப்பட்டுள்ள அதே சம யம், மேலும் 13 பேர் காணாமல்போயுள்ள னர்.  நன்றி வீரகேசரி 








மக்காவில் சனநெரிசல் : பலியானவர்களின் எண்ணிக்கை 310 ஆக உயர்வு

24/09/2015 மக்கா மசூதி அருகே ஏற்பட்ட சன நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 310 ஆக உயர்ந்துள்ளதோடு 450 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.



மினாவில் சாத்தான் சுவர் மீது கல்லெறியும் நிகழ்ச்சியின் போதே இந்த சன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தியாகத் திருநாளான ஹஜ் பெருநாளை உலக   இஸ்லாமிய மக்கள் இன்று சிறப்பாக கொண்டாடி வருவதோடு பள்ளி வாசல்களில் சிறப்பு தொழுகைகளும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் சவூதியில் இவ்வாறு சோகச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சவூதி அரேபியாவில் உள்ள புனித நகரான மக்காவுக்கு ஆண்டுதோறும் உலகம் முழுவதிலும் இருந்து இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் ‘ஹஜ்’ புனித பயணம் செல்வது வழக்கம். 
இந்நிலையில் இந்த ஆண்டும் இலட்சக்கணக்கானோர் மக்காவில் உள்ள பெரிய மசூதியில் திரண்டு தங்கள் ‘ஹஜ்’ கடமையை நிறைவேற்றினார்கள்.

மேலும் ஹஜ் பெருநாளை முன்னிட்டு இன்று மக்காவில் பாதுகாப்பு ஏற்பாடும் செய்யப்பட்டு இருந்தது. எனினும் ஹஜ் புனித வழிபாட்டிற்கு யாத்திரிகள் பலர் ஒன்றாக குவிந்தமை காரணமாகவும் மினாவில் சாத்தான் சுவர் மீது கல்லெறிய முற்பட்டதாலும் இந்த  சன நெரிசல் ஏற்பட்டுள்ளது. 
எனவே இந்த சன  நெரிசலில் சிக்கி 310 பேர்  உயிரிழந்துள்ளதோடு 450க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு பல்வேறு வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே சன நெரிசல் ஏற்பட்ட இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. 
காயமடைந்தவர்களில் பெரும்பாலானோரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.இதனால்  உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என்ற அச்சம் எழுந்து உள்ளது. 
 அண்மையில் மக்கா மசூதியில் கிரேன் முறிந்து   107 பேர் பரிதாபமாக பலியானதோடு 200 க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 











இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

25/09/2015 இந்தோனேசியாவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தோனேஷியாவின் வட மேற்கில் உள்ள சோரங் பகுதியில் இருந்து 29 கிலோ மீட்டர் தொலைவில், 64 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவாகியுள்ளது.

நிலநடுக்கம் 6.9 ஆக ரிக்டர் அளவுகோலில் பதிவாகியுள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 
மேலும் கடந்த வாரம் சிலியில் இடம்பெற்ற நில நடுக்கத்தினால் 13 பேர் பலியானதுடன் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.   நன்றி வீரகேசரி





No comments: