தமிழ் சினிமா


த்ரிஷா இல்லனா நயன்தாரா




எனக்கு எண்ட் கார்டே கிடையாதுடா.. த்ரிஷா இல்லனா நயன்தாரா என்ற வடிவேலுவின் ஹிட் டயலாக் எல்லோருக்கும் தெரியும். இதையே டைட்டிலாக வைத்து அறிமுக இயக்குனர் ஆத்விக் இயக்கியிருக்கும் படம் தான் த்ரிஷா இல்லனா நயன்தாரா.
டார்லிங் வெற்றிக்கு பிறகு அடுத்து என்ன நடிப்பார் ஜிவி என ஆவலுடன் காத்திருக்க, யாருமே எதிர்ப்பார்க்காத ப்ளே பாய் இமேஜ்ஜை கையில் எடுத்து கொஞ்சம் ஷாக் கொடுத்து களத்தில் இறங்கிவிட்டார்.
கதைக்களம்
காதல் ரொம்ப புனிதமானது, ஒரு ரோஜா செடி ஒரு முள்ளு இப்படி பேசி பேசி 2 லட்சம் தமிழ் படம் வந்திருக்கும், இதையெல்லாம் கிழித்து காதல்னாலே கசமுசா தான்யா ஜாலியா இருன்னு புது வாழ்க்கை தத்துவத்த சொல்லியிருக்காரு நம்ம அறிமுக இயக்குனர் ஆத்விக்.
ஜி.வி பிறக்கும் போதே ப்ளே பாய் மாதிரி இரண்டு பெண்களுக்கு நடுவே பிறக்கிறார். இதை தொடர்ந்து அந்த பெண்களில் ஒருவரான ஆனந்தியின் காதலில் விழுகிறார். அதன்பின் சில 18+ காட்சிகளுடன் இவர்கள் காதல் அரங்கேற, இந்த ரகசியம் பள்ளி முழுவதும் தெரிகிறது. அதோடு இந்த லவ் கதம் கதம்.
அதை தொடர்ந்து அடுத்த போனில் மனிஷா யாதவ், ‘நான் உன்னை காதலிக்கிறேன்’ என்று சொல்ல, அடுத்த கியரை போட்டு வண்டியை ஸ்டார்ட் செய்கிறார் ஜி.வி. பெண்கள் குணம் 100 வகை அதை அறிந்த ஆண் யார்? இது தெரியாத ஜிவி, இந்த பெண்ணிடம் நல்லவனாக நடிக்க முயற்சி செய்து இந்த காதலிலும் பல்ப் வாங்குகிறார்.
இந்த பொண்ணுங்களே இப்படித்தான் இந்த காதலே வேண்டாம் என்று தன் மாமா விடிவி கணேஷ் இருக்கும் கும்பகோணத்திற்கு செல்ல, அங்கு மீண்டும் ஆனந்தியை பார்த்து, தன் பழைய காதலை புதுப்பிக்க முயற்சி செய்கிறார் சீனியர் ஆர்டிஸ்ட் சிம்ரன் உதவியுடன். இவர் காதல் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை இவ்ளோ தைரியமான கலகலப்பான கிளைமேக்ஸுடன் கூறியிருக்கிறார் ஆத்விக். (வெர்ஜின் பசங்க சாபம் மட்டும் இல்லை பாஸ், பொண்ணுங்க சாபம் கூட உங்கள் சும்மா விடாது.....)
படத்தை பற்றிய அலசல்
தமிழ் சினிமாவிலே இப்படி ஒரு படமா? என்று புருவத்தை உயர்த்த வைக்கின்றது, அட...டெக்னிக்கல், உலகத்தரத்த சொல்லலங்க...பசங்க பதுங்கி பதுங்கி பேசுற விஷயத்தை கூட திரையில பப்ளிக்கா சொல்லி ஆச்சரியப்படுத்தியிருக்காரு ஆத்விக்.
ஜி.வி நடிப்பில் பள்ளியில் பாஸ் ஆகி கல்லூரிக்கு வந்துவிட்டார், ப்ளே பாய், சூப் பாய் என அனைத்து ‘ஏ’ரியாக்களிலும் கலக்கியுள்ளார். மனிஷா ஒன்லி கிளாமர் மட்டும் தான், ஆனால், ஆனந்தி அந்த கண்களை வைத்துக்கொண்டு ஜி.விக்கு செம்ம ப்ரஷர் கொடுத்திருப்பார் போல.
படம் ஆரம்பித்தது முதல் முடியும் வரை சீரியஸ் என்ற வார்த்தையை எங்கு தேடினாலும் கிடைக்காது, அதிலும் விடிவி கணேஷின் புதிய புதிய வார்த்தைகள், செங்கல் சைக்கோ கதாபாத்திரம் என இளைஞர்களுக்கான அனைத்து விஷயங்களும் படத்தில் உள்ளது. சிம்ரன் நீண்ட இடைவேளைக்கு பிறகு சூப்பர் கதாபாத்திரம் கிட்டத்தட்ட லவ் குரு மாதிரி.
படத்தின் நாயகனே இசை என்பதால், பின்னணி இசை, பாடல்கள் என அனைத்தும் சிறப்பு, அதிலும் ‘பிட்டு படம் டி’ பாடல் ஒருத்தரும் சீட்டில் இல்லை. ஆனால், இன்னும் எத்தன வருஷத்துக்கு தான் பெண்களையே குறை சொல்லி கைத்தட்டல் வாங்குவார்கள் என்று தெரியவில்லை. அதை விட இந்த விஜய், அஜித் டயலாக் Reference என இன்னும் எத்தனை படத்தில் பயன்படுத்துவார்களோ.
க்ளாப்ஸ்
ஜி.வி-ஆனந்தி காதல் காட்சிகள், மிகவும் யதார்த்தமாக இன்றைய இளைஞர்கள் என்ன செய்வார்களோ அதை அப்படியே காட்சிப்படுத்தியிருக்கின்றனர். பின்னணி, பாடல்கள், ஒளிப்பதிவு என அனைத்தும் இளைஞர்களுக்கான டார்க்கெட்.
பல்ப்ஸ்
படம் கலகலப்பாகவே சென்றாலும் கொஞ்சம் நீளமாக இருப்பது போல் ஒரு உணர்வு, குடும்பத்துடன் பார்க்க முடியுமா என்றால்???.
மொத்தத்தில் பூவே உனக்காக விஜய், காதல் கோட்டை அஜித் இதில் நீங்கள் எந்த ரகம் சீரியஸ் காதலர்களாக இருந்தாலும், அட வாழ்க்கை ரொம்ப ஈஸி பாஸ், ஜாலியா விடுங்கன்னு அவர்களையும் மாற்றிவிடும் இந்த த்ரிஷா இல்லனா நயன்தாரா.
ரேட்டிங்- 3/5  நன்றி cineulagam   





No comments: