இலங்கைச் செய்திகள்


வேலையற்ற பட்டதாரிகள் மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டம்

யாழில் கடற்கரையினை தூய்மைப்படுத்தும் விழிப்புனர்வு

இலங்கை வந்தடைந்தார் ஜேர்மன் வெளிவிவகார அமைச்சர்

கொள்ளுப்பிட்டி ஹோட்டல் அறையில் அஸி.பிரஜையின் சடலம் மீட்பு

மோடியை சந்தித்தார் மைத்திரி

சேயா, வித்தியா படுகொலைக்கு நீதி கோரி விசேட தேவையுடையோர் ஆர்ப்பாட்டப் பேரணி

வேலையற்ற பட்டதாரிகள் மட்டக்களப்பு நகரில் ஆர்ப்பாட்டம்


21/09/2015 மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் இன்று காலை மட்டக்களப்பு நகரில் பாரிய ஆர்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
மட்டக்களப்பு காந்தி பூங்காவிற்கருகில் மணிக்கூட்டுக்கோபுச்சந்தியில் இப்போராட்டம் நடாத்தப்பட்டது.
கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் நியமனம் வழங்கப்படாத 1200 பட்டதாரிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்க தலைவர் யு.உதயவேந்தன் தெரிவித்தார்.
ஆர்பாட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலான ஆண்,பெண் வேலையற்ற பட்டதாரிகள் பங்கு கொண்டனர்.
புதிய அரசாங்கமே வேலை வழங்கு, ஜனாதிபதியே தொழிலின்றி வாடும் எமக்கு தொழில் தாருங்கள் உட்பட பல வாசகங்கள் அடங்கிய பதாதைகளையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஏந்தியிருந்தனர்.  நன்றி வீரகேசரி யாழில் கடற்கரையினை தூய்மைப்படுத்தும் விழிப்புனர்வு


21/09/2015 யாழ்ப்பாணத்தில் இன்று காலையில் தேசிய கடல் பாதுகாப்பு செயற்திட்டத்தின் கீழ் கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் ஏற்பாட்டில் கடற்கரையோராங்களை பாதுகாத்தல் சம்பந்தமான விழிப்புனர்வு செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

யாழ். மாவட்ட செயலாளர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் யாழ்ப்பாணம் கோட்டைக்கு முன்புறமாக இந்த விழிப்புனர்வு நடவடிக்கைகள் இடம்பெற்றன.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரன், கடல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி ஸ்ரீ நிஹால், வட மாகாண சபையின் எதிர்க் கட்சித்தலைவர் சி.தவராசா உறுப்பினர் பா.கஜதீபன், வட மாகாண ஆளுனரின் செயலாளர் எல.இளங்கோவன் மற்றும் யாழ். மாவட்ட திணைக்களங்களின் தலைவர்கள், யாழ். மாவட்ட செயலக உயர் அதிகாரிகள், இராணுவ பொலிஸ் கடற்படைகளின் அதிகாரிகள், சர்வ மதத் தலைவர்கள் உட்பட பொது மக்களும் கலந்து கொண்டார்கள்.
யாழ்ப்பாணம் ஒல்லாந்தர் கோட்டைப் பகுதியைச் சுற்றிக் காணப்படும் கடற்கரைப் பகுதிகளில் தேவையற்ற முறையில் கடலிலும் கரையிலும் வீசப்பட்டு இருந்த பொருட்கள் அகற்றப்பட்டதுடன் தொடர்ந்தும் இந் நடவடிக்கையை முன்னெடுக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.   நன்றி வீரகேசரி

இலங்கை வந்தடைந்தார் ஜேர்மன் வெளிவிவகார அமைச்சர்

22/09/2015 உத்­தி­யோ­க­பூர்வ விஜயம் ஒன்றை மேற்­கொண்டு ஜேர்­மனியின் வெளி­வி­வ­
கார அமைச்சர் பிராங்க் வோல்ட்டர் ஸ்டெய்ன்­மியர் இன்று காலை கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தார்.

இவர் ஜனா தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்கி­ர­ம­சிங்க, வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள சம­ரவீர, எதிர்க்­கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் உள்­ளிட்ட பல்­வேறு தரப்­பி­ன­ரையும் சந்­தித்து பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நன்றி வீரகேசரி


கொள்ளுப்பிட்டி ஹோட்டல் அறையில் அஸி.பிரஜையின் சடலம் மீட்பு

23/09/2015 கொழும்பு கொள்ளுப்பிட்டியிலுள்ள ஹோட்டல் அறை ஒன்றிலிருந்து அவுஸ்திரேலிய பிரஜை ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த 21 ஆம் திகதி குறித்த ஹோட்டலுக்கு வருகைதந்த 27 வயதான அவுஸ்திரேலிய பிரஜையே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த அவுஸ்திரேலியப் பிரஜை தொடர்பில் தகவல்கள் கிடைக்காத நிலையில்  அறைக் கதவு உடைக்கப்பட்டு சோதனையிடப்பட்டுள்ளது.
இதன்போது சடலம் கட்டிலில் இருந்து மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு காவல்துறையினர் மேற்கொண்டு வருவதுடன் பிரேத பரிசோதனைக்காக சடலம் கொழும்பு பொலிஸ் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.   நன்றி வீரகேசரிமோடியை சந்தித்தார் மைத்திரி

26/09/2015 அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் 70வது கூட்டத் தொடர் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் நடைபெற்று வருகிறது.
இந்தக் கூட்டத்தொடரில் பங்கேற்கும் வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இந்தநிலையிலேயே இந்திய பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார். 
இச்சந்திப்பில் பொதுநலவாய அமைப்பின் தற்போதைய தலைவராக இருக்கும் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மால்டாவில் இடம்பெற இருக்கும் அடுத்த பொதுநலவாய மாநாட்டுக்கான உத்தியோகபூர்வ அழைப்பை இந்திய பிரதமருக்கு வழங்கினார்.   நன்றி வீரகேசரி
சேயா, வித்தியா படுகொலைக்கு நீதி கோரி விசேட தேவையுடையோர் ஆர்ப்பாட்டப் பேரணி

27/09/2015 பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு நீதி வேண்டுமெனக் கோரி விசேட தேவையுடையோர் நடாத்திய ஆர்ப்பாட்டப் பேரணி வவுணதீவில் இடம்பெற்றது.

அண்மையில் பாலியல் துஷ்;பிரயோகத்துக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சேயா மற்றும் வித்தியாவின் சூத்திரதாரிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டுமெனவும் இந்த ஆர்ப்பாட்டத்தின்போது கோரிக்கை விடுக்கப்பட்டது.
'சட்டத்தரணிகளே மனிதம்; மௌனித்து விட்டதா" 'நேற்று வித்தியா இன்று சேயா நாளை யார்.?" 'அதிகரித்துவரும் சிறுவர் துஷ்பிரயோகங்களைக் கண்டிக்கின்றோம்" 'வித்தியா, சேயாவுக்கு நீதி வேண்டும்" என எழுதப்பட்ட வாசக அட்டைகளையும் ஆர்ப்பாட்டப் பேரணியில்; ஈடுபட்டவர்கள் தாங்கியிருந்தனர்.
வாழ்வகம் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணி வவுணதீவு சந்தியிலிருந்து ஆரம்பமாகி வவுணதீவு பிரதேச செயலகம் வரை சென்றதுடன் பிரதேச செயலாளர் எஸ்.சுதாகரனிடம் மகஜரும் கையளிக்கப்பட்டது.  நன்றி வீரகேசரிNo comments: