ஆடி அம்மாவாசை

.

நிலவு ஓழிந்து
வானம் கறுத்த நாள்
அப்பிக் கிடக்கும்
காரிருள்
சோகத்தைச் சுமந்து
மங்கிக் கிடக்கும்
மனசாக.
உடல் ஒடுங்கி நாரி கெவுள
ஓடி உழைத்து
குடும்பம் தளைக்க வைத்தனர்
கற்க வைத்து
சான்றோர் முன் 
நிமிர்ந்து நிற்க ஆளாக்கிய
தந்தையர் நாள்.
மின்னிடும் விண்மீன்களாக
கரு வானில்
உலா வருகின்றனர்
இன்னமும்
பல அப்பாக்கள்
காத்திருக்கிறார்கள்
அமாவாசை நாளில்
கசக்கும் காய் படைத்துத்
தாங்களும்
துதிக்கப்படுவதற்கான
நாட்களை எண்ணியபடி.
காத்திருக்கின்றன
கடமைகள்
பிள்ளைகளுக்கு
விரதம் இருந்து
துதிப்பதைவிட
வாழும் போதே
துயருராமல்
காப்பதற்கு.

nantri suvaithacinema.blogspot

No comments: