தமிழ்ப் பொறியியளாளர் அமைப்பின் தகவல் பரிமாற்றக் கலந்துரையாடல் 03 10 15

.
  சிட்னியில் வாழும் பொறியியளாளர்களால் 2008ம் ஆண்டு நிறுவப்பட்டு இன்று விக்டோரியா, க்வின்ஸ்லண்ட் போன்ற மாநிலங்களிலும் முனைப்புடன் இயங்கி வரும் தமிழ்ப் பொறியியளாளர் அமைப்பானது, பொறியியளாளர் கருணை நிதி ஊடாகத் தாம் முன்னெடுக்கும் திட்டப்பணிகளைக் கன்பரா வாழ் தமிழ் மக்களுக்கு எடுத்துக் கூறும் முகமாகக் கன்பராவில் இரவுப் போசனத்துடன் கூடிய ஒரு தகவல் பரிமாற்றக் கலந்துரையாடலை ஒழுங்கு செய்துள்ளது. இந் நிகழ்வானது வருகின்ற ஒக்டோபர் மாதம் மூன்றாம் திகதி மாலை 7 மணி தொடக்கம், இலக்கம் 10 வாட்சன் (Watson) வீதி, டேர்னரில் (Turner) அமைந்துள்ள டேர்னர் மூத்த பிரஜைகள் மண்டபத்தில் (Turner Senior Citizen Hall) இடம்பெற உள்ளது. இந்நிகழ்வில் பங்குபெற்ற விரும்புபவர்கள் பின்வருபவர்களில் ஒருவரைத் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம். அனுமதி இலவசம்.
பதிவு செய்யத் தொடர்பு கொள்ள வேண்டியவர்கள்.
கணேஷ் – 02 62516518;         சிறீபதி – 0421 556 193
ரவி –        02 6282 8820         சுதா & பிரணவன் – 0412 346 052
சிவா – 02 6161 7478               சேந்தன் – 02 6286 7594
குகா – 0466 455 630


பின்வரும் மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் நீங்கள் பதிவு செய்து கொள்ளலாம்.

புலம் பெயர்ந்தும் மனம் பெயராமல், எமது தாய் நிலத்தில் பல விதங்களில் இன்னலுறும் மக்களின் வாழ்க்கை நிலைமையை முன்னேற்ற ஏதாவது விதத்தில்   எம்மாலியன்ற உதவியைச் செய்ய வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கும் பல நல்ல உள்ளங்களின் அன்பளிப்புகளை ஒன்று திரட்டி ஒரு கட்டுக்கோப்பான வரைமுறையின் கீழ் பின்வரும் பிரிவுகளுக்கு உட்பட்ட உதவித் திட்டங்களை தமிழ்ப் பொறியியளாளர் அமைப்பு முன்னெடுத்து வருகிறது.
·       பெற்றோரை இழந்த குழந்தைகளின் பராமரிப்பு திட்டம்
·       பல்கலக்கழக மாணவர்களுக்கான கல்வி உபகார நிதித் திட்டம்
·       அங்கவீனமுற்றோருக்கு செயற்கை அங்கங்களைப் பொருத்தும் திட்டம்
·       Cataract எனப்படும் கண்புரை சத்திர சிகிசைக்கான நிதி உதவி திட்டம்
·       மருத்துவ நிலையங்களுக்கு அத்தியாவசியன மருத்துவ உபகரண உதவி
·       பாதிக்கப்பட்ட மக்களுக்கான வாழ்வாதார உதவி திட்டம்
·       பெண்களுக்கான சுழற்சி முறைக் கடன் திட்டம்
·       பாடசாலை மாணவர்களுக்கான துவிசசக்கர வண்டி வழங்கும் திட்டம்
·       கல்விப் பொதுத் தராதர சாதாரண மற்றும் உயர்தர மாணவர்களுக்கான பயிற்சி வகுப்புகள்
·       முதியோர் மற்றும் அநாதை இல்லங்களுக்கான நிதி உதவி திட்டம்

இத் திட்டங்கள் பற்றிய மேலதிக விபரங்கள் இந்தத் தகவல் பரிமாற்றக் கலந்துரையாடலில் கலந்துரையாடப் பட இருக்கின்றது. தமிழ்ப் பொறியியளாளர் அமைப்பின்  சிட்னியைச் சார்ந்த நிர்வாக சபை உறுப்பினர்கள் கன்பராவைச் சார்ந்த நிர்வாக சபை உறுப்பினர்களுடன் சேர்ந்து இந் நிகழ்வில் பங்கு பற்றி இத் திட்டங்கள் பற்றிய விளக்கங்களை வளங்க இருக்கின்றார்கள். கன்பரா வாழ் அனைவரையும் வந்து கலந்து கொள்ளுமாறு தமிழ்ப் பொறியியளாளர் அமைப்பு அன்புடன் அழைக்கிறது.

No comments: