யாழ்ப்பாணத்தில் 27, 28 ஆம் திகதிகளில் மௌனகுருவின் காண்டவதகனம்

.

மட்டக்களப்பில் கடந்த 24 ஆம் திகதி நடந்த விஞ்ஞான விழாவில் பேராசிரியர் மௌனகுருவின் காண்டவதகனம் காலையும் மாலையுமாக இரண்டு காட்சிகள் அரங்காற்றுகை செய்யப்பட்டிருக்கிறது.
இன்றைய கால கட்டத்தில் மூத்த தலைமுறையினரும் இளம் தலைமுறையினரும் இணையும் கலை இலக்கிய அரங்குகளின் தேவையே அவசியம் என்பதை உணர்ந்துள்ளமையால் மீண்டும் மேடையேறிய காண்டவதகனம் அதில் பங்கேற்ற கலைஞர்களுக்கும் பார்வையாளர்களான மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கும் புதிய கலாரசனை அனுபவத்தை வழங்கியிருக்கிறது.
இதுதொடர்பாக பேராசிரியர் மௌனகுருவின் தகவல்களிலிருந்து அறியப்படுவதாவது:
விஞ்ஞான வழிகாட்டிகள் சங்கம்  நடத்திய கோலாகலமான விஞ்ஞான விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் காண்டவ தகனம் நாடகத்தை நிகழ்த்தும் வாய்ப்பும் கிடைத்தது.
காலையும் மாலையும்  ஆற்றுகை செய்யப்பட்ட காண்டவ தகனத்தின்  பார்வையாளர்கள்
காலையில் மிகவும் இளம் வயதினர். பாடசாலை மாணவர்கள்.
மாலையில் அதன் பார்வையாளர்கள் பெரியவர்கள்.
காலையில் நாடகம் பார்த்தவர்கள் மாலையில் தமது பெற்றோரை அல்லது பிள்ளைகளை அழைத்து வந்திருந்தனர்.
இம்முறை எமக்குக் கிடைத்த காண்டவ தகனத்தின் பார்வையாளர்கள் வித்தியாசமானவர்கள்


மாலையில் நாடகம் முடிய பார்த்தோர் எழுந்து நின்று கரகோசம் செய்தமையும் .நாடகம் முடிந்தவுடன் மேடையேறி வந்து நடிகர்களுக்கு கைலாகு கொடுத்து பாராட்டியமையும் நாடகம் அவர்களுக்கு நன்கு பிடித்துக் கொண்டமையைக் காட்டின.
சில பாடசாலை ஆசிரியர்கள், அதிபர்கள் தமது பாடசாலையில் இதனை கொணர்ந்து காட்டுமாறும் கேட்டுக் கொண்டனர்
25 ஆம் திகதி  காலை 30 பேர் கொண்ட அரங்க ஆய்வு கூடக் கலைஞர் குழு யாழ்ப்பாணம் நோக்கிப் பயணமாகிறது
காண்டவ தகனமும் நெட்டை மரங்களும் அங்கு 27, 28 ஆம் திகதிகளில் முறையே  யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியிலும்  மேடை காணும்
வழமையாக அர்ச்சுனனாக வரும் சசிதரன் இம்முறை வர முடியமையினால் ஞான சேகரன் அப்பாத்திரத்தை ஏற்றார்
அர்ஜுனனையும் அவன் உணர்வுகளையும் அவர் இன்னொரு விதமாக வெளிப்படுத்தினார்.  பலரது பாராட்டுகளையும் பெற்றார்
ஆற்றுகையின் பன்மையும் சுதந்திர வெளியும் அங்கு வெளிப்பட்டது.
----0----


No comments: