உலகச் செய்திகள்


யேமனில் புதி­தாக இடம்­பெற்ற மோதல்­களில் 17 பொது­மக்கள் உட்­பட 58 பேர் உயி­ரி­ழப்பு

யேமனில் இடம்பெற்று வரும் மோதல்களில் சிக்கி 540 பேர் உயிரிழப்பு; 1,700 பேர் காயம்

 தொடரும் இனப்படுகொலை: வெள்ளையரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான கறுப்பினத்தவர்: வீடியோ காட்சி வெளியானது

ஐ.எஸ். தீவிரவாதிகளால் ஆங்கில மொழி வானொலி ஒலிபரப்புச் சேவை ஆரம்பிப்பு









யேமனில் புதி­தாக இடம்­பெற்ற மோதல்­களில் 17 பொது­மக்கள் உட்­பட 58 பேர் உயி­ரி­ழப்பு

07/04/2015 தென் யேமனில் ஜனா­தி­பதி மன்சூர் ஹாடிக்கு விசு­வா­ச­மான படை­யி­ன­ருக்கும் கிளர்ச்­சி­யா­ளர்­க­ளுக்­கு­மி­டையில் கடந்த புதி­தாக இடம்­பெற்ற மோதல்­களில் 58 பேர் பலி­யா­கி­யுள்­ளனர்.

பலி­யா­ன­வர்­களில் 17 பொது­மக்­களும் 26 கிளர்ச்­சி­யா­ளர்­களும் 15 படை­யி­னரும் உள்­ள­டங்­கு­வ­தாக அந்­நாட்டு அதி­கா­ரிகள் திங்­கட்­கி­ழமை தெரி­வித்­துள்­ளனர்.

டாலெஹ் நகரில் ஞாயிற்­றுக்­கி­ழமை இரவு முதல் திங்­கட்­கி­ழமை காலை வரை நடை­பெற்ற மோதல்­க­ளி­லேயே இந்த உயி­ரி­ழப்­புகள் இடம்­பெற்­றுள்­ளன.
கடந்த மார்ச் மாதம் 26 ஆம் திகதி ஈரா­னிய ஆத­ர­வுடன் செயற்­படும் யேம­னிய ஹோதி கிளர்ச்­சி­யா­ளர்­க­ளுக்கு எதி­ராக சவூதி அரே­பியா தலை­மை­யி­லான கூட்­ட­மைப்பு நாடு­களின் படை­யினர் வான் தாக்­கு­தல்­களை ஆரம்­பித்­தது முதற் கொண்டு யேமனில் வன்­மு­றைகள் உக்­கி­ர­ம­டைந்­துள்­ளன.
தென் துறை­முக நக­ரான ஏடனில் மோதல்கள் தீவி­ர­ம­டைந்து வரு­வ­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.
யேமனில் இரு வாரங்­க­ளாக இடம்­பெற்று வரும் மோதல்­களில் 500 பேருக்கும் அதி­க­மானோர் உயி­ரி­ழந்­துள்­ள­தாக ஐக்­கிய நாடுகள் சபை கூறு­கி­றது.
இந்­நி­லையில் தாக்­கு­தல்­களில் காய­ம­டைந்­த­வர்­க­ளுக்கு சிகிச்­சை­களை அளிக்கும் பொருட்டு யேம­னிய தலை­ந­க­ரான சனாவில் மருத்­துவ உத்­தி­யோ­கத்­தர்கள் மற்றும் மருந்­து­க­ளுடன் இரு விமா­னங்­களைத் தரை­யி­றக்­கு­வ­தற்கு சர்­வ­தேச செஞ்­சி­லுவைச் சங்கம் அனு­மதி பெற்­றுள்­ளது.
யேம­னி­லான மோதல்­களால் அந்­நாடு மனி­தா­பி­மான நெருக்­க­டி­யொன்றை எதிர்­கொண்­டுள்­ளதை கவ­னத்திற் கொண்டே இந்த விமா­னங்­களை தரையிறக்­கு­வ­தற்­கான அனு­மதி பெறப்­பட்­டுள்­ள­தாக சர்­வ­தேச செஞ்­சி­லுவைச் சங்கம் தெரி­வித்­தது.
இதன் பிர­காரம் முக்­கி­ய­மான மருத்­துவ விநி­யோ­கங்­க­ளுடன் சரக்கு விமானம் ஒன்றும் மருத்­துவ உத்­தி­யோ­கத்­தர்­களை ஏற்றிக் கொண்டு சிறிய ரக பய­ணிகள் விமானம் ஒன்றும் யேமனில் தரை­யி­றக்­கப்­ப­ட­வுள்­ள­தாக சர்­வ­தேச செஞ்­சி­லுவைச் சங்­கத்தின் பேச்­சாளர்களில் ஒருவரான மேரி கிளயர் பெக்­காலி கூறினார்.
யேமனில் ஏடன் நக­ரி­லுள்ள மக்கள் உண்ண உணவும் அருந்த நீரு­மின்றி வாழும் நிலைக்குத் தள்­ளப்­பட்­டுள்­ள­தாக அவர் தெரி­வித்தார்.
மேலும் யேமனில் மோதல்­களால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு உதவும் முக­மாக 24 மணி நேர ஊர­டங்குச் சட்­டத்தை அமுல்­படுத்த சர்­வ­தேச செஞ்­சி­லுவைச் சங்கம் அழைப்பு விடுத்­துள்­ளது.
இந்­நி­லையில் யேம­னிய கிளர்ச்­சி­யா­ளர்­க­ளுக்கு எதி­ராக வான் தாக்­கு­தல்­களை நடத்தும் சவூதி தலை­மை­யி­லான கூட்­ட­மைப்பு நாடு­களின் படை­யி­ன­ருடன் இணைந்து கொள்­வதா அல்­லது இல்­லையா என்­பதை தீர்­மா­னிக்கும் முக­மாக பாகிஸ்­தா­னிய பாரா­ளு­மன்றம் திங்கட்கிழமை விசேட கூட்­ட­மொன்றைக் கூட்டி விவா­தித்துள்ளது.

பாகிஸ்­தா­னிய விமா­ன­மொன்று ஞாயிற்­றுக்­கி­ழமை யேம­னிய சனா நகரிலிருந்து 170 பேரை மீட்ட நிலையிலேயே இந்தக் கூட்டத்தைக் கூட்ட ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது.
அதேசமயம் சீனாஇ எகிப்துஇ சூடான் ஆகிய நாடுகளும் யேமனிலுள்ள தமது பிரஜைகளை மீட்க விமானங்களை அனுப் பவுள்ளன.
ஏற்கனவே யேமனிலிருந்து தமது பிரஜைகளை மீட்ட நாடுகளில் ரஷ்யாஇ இந்தியாஇ இந்தோனேசியா ஆகியன உள்ள டங்குகின்றன. ;நன்றி வீரகேசரி 







யேமனில் இடம்பெற்று வரும் மோதல்களில் சிக்கி 540 பேர் உயிரிழப்பு; 1,700 பேர் காயம்


08/04/2015 சவூதி அரேபியா தலைமையிலான கூட்டமைப்பின் வான் தாக்குதல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து யேமனிய சனா நகரில் கிளர்ச்சிக் குழுவை சேர்ந்த உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதை படத்தில் காணலாம்.

யேமனில் கடந்த சில வாரங்­க­ளாக இடம்­பெற்­று­வரும் மோதல்­களில் சிக்கி 540 பேருக்கும் அதி­க­மானோர் உயி­ர­ிழந்­துள்­ள­துடன் 1,700 பேர் வரை காய­ம­டைந்­துள்­ள­தாக உலக சுகா­தார ஸ்தாபனம் செவ்­வாய்க்­கி­ழமை தெரி­வித்­துள்­ளது.
அதே­ச­மயம் அந்­நாட்டில் கடந்த மார்ச் 19 ஆம் திகதி முதல் இடம்­பெற்று வரும் வன்­மு­றை­களில் பலி­யா­ன­வர்­களில் குறைந்­தது 74 சிறு­வர்கள் உள்­ள­டங்­கு­வ­தாக ஐக்­கிய நாடுகள் நம்­பிக்கை நிதியம் கூறு­கி­றது.
காய­ம­டைந்­த­வர்­களில் 44 பேர் சிறு­வர்­க­ளாவர். மேலும் 100,000 பேருக்கும் அதி­க­மானோர் இடம்­பெ­யர்ந்­துள்­ள­தாக மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.
யேம­னி­லான இந்த மோதல்களில் சிறு­வர்கள் சகிக்க முடி­யாத விலை­யொன்றை செலுத்த நேர்ந்­துள்­ள­தாக ஐக்­கிய நாடுகள் சிறுவர் நம்­பிக்கை நிதி­யத்தின் யேம­னுக்­கான பிர­தி­நிதி ஜூலியன் ஹார்னிஸ் தெரி­வித்தார்.

இந்­நி­லையில் யேமனில் சவூதி அரே­பியா தலை­மை­யி­லான படை­யி­னரின் வான் தாக்­கு­தல்­களின் துணை­யுடன் அந்­நாட்டு ஜனா­தி­பதி மன்சூர் ஹாடிக்கு ஆத­ர­வான படை­யினர் செவ்­வாய்க்­கி­ழமை நடத்­திய தாக்­கு­தலில் குறைந்­தது 19 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர்.
துறை­முக பிராந்­தி­ய­மான முவல்­லா­விற்குள் பிர­வே­சிக்க முயன்று வரும் கிளர்ச்­சி­யா­ளர்­க­ளுக்கு எதி­ராக நாட்டை விட்டு வெளி­யே­றி­யுள்ள ஜனா­தி­பதி மன்சூர் ஹாடிக்கு விசு­வா­ச­மான படை­யினர் போராடி வரு­கின்­றனர்.
இந்­நி­லையில் பிந்­திய மோதல்­களில் 4 படை­வீ­ரர்கள் உயி­ரி­ழந்­துள்­ள­துடன் 12 பேர் காய­ம­டைந்­துள்­ளனர்.அதே­ச­மயம் ஹோதி கிளர்ச்­சி­யா­ளர்கள் மத்­தியில் ஆறு பேர் பலி­யா­கி­யுள்­ளனர்.
ஏடன் நக­ரி­லுள்ள கிளர்ச்­சி­யா­ளர்­களின் தளங்­களை இலக்­கு­வைத்து சவூதி தலை­மை­யி­லான கூட்­ட­மைப்பின் படை­யினர் உக்­கிர வான் தாக்­கு­தலை நடத்தி வரு­கின்ற நிலையில் ஜனா­தி­பதி ஹாடிக்கு விசு­வா­ச­மான படை­யினர் துறை­முகப் பிராந்­தி­யத்­தி­லி­ருந்து கிளர்ச்­சி­யா­ளர்­களை பின்­வாங்கச் செய்­துள்­ள­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.
அந்­நாட்டில் முதல்நாள் திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற மோதல்­களில் 140 பேருக்கும் அதி­க­மானோர் பலி­யா­ன­துடன் பெருந்­தொ­கை­யானோர் காய­ம­டைந்­துள்­ளனர்.
இந்த வன்­முறை மோதல்­களால் யேம­னிய பிராந்­தி­யத்­திற்குத் தேவை­யான மருத்­துவ உத­வி­களை விநி­யோ­கிப்­ப­தற்கு செஞ்­சி­லுவைச் சங்கம் மேற்­கொண்ட முயற்­சிகள் தாம­தத்தை எதிர்­கொண்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

யேமனின் சட்­ட­பூர்­வ­மான தலை­வ­ராக ஐக்­கிய நாடுகள் சபையால் கரு­தப்­படும் ஹாடி, கிளர்ச்­சி­யா­ளர்­களின் தாக்­குதல்கள் அதி­க­ரித்­த­தை­ய­டுத்து கடந்த மாதம் நாட்டை விட்டு வெளி­யேறி சவூதி அரே­பி­யாவை தஞ்­ச­ம­டைந்­துள்ளார்.
செஞ்­சி­லுவைச் சங்கம் சனா நக­ரி­லி­ருந்து தனது 11 உத்­தி­யோ­கத்­தர்­களை வெளி­யேற்­றி­யுள்­ளது.யேமனில் மனி­தா­பி­மான நட­வ­டிக்கை யின் பொருட்டு சவூதி அரே­பியா தலை­மை யில் எகிப்து, ஜோர்தான், மொரோக்கோ மற்றும் சூடான் ஆகிய நாடு­களால் மேற்­கொள்­ளப்­படும் வான் தாக்­கு­தல்­களை இடை­நி­றுத்த ஐக்­கிய நாடுகள் சபையை ரஷ்யா வலி­யு­றுத்­தி­யுள்­ளது.
அதே­ச­மயம் இந்­திய கப்­ப­லொன்றின் மூலம் மேற்கு ஹொடேய்டா துறை­மு­கத்­தி­லி­ருந்து 450 பேர் வெளி­யேற்­றப்­பட்­டுள்­ளனர்.ஏனைய சுமார் 100 பேர் சீனக் கப்­பலொன் றின் மூலம் வெளி­யேற்­றப்­பட்­டுள்­ள னர்.பிரான்ஸானது யேமனிய கிழக்கு பால் ஹாப் துறைமுகத்திலிருந்து 63 வெளிநாட் டவர்களை வெளியேற்றியுள்ளது.
மேலும் ஜோர்தான் 300 க்கு மேற்பட்ட தனது பிரஜைகளை யேமனிலிருந்து வெளி யேற்றியுள்ளது.

அதேசமயம் தமது பிரஜைகளை வெளி யேற்றும் முகமாக 3 இந்திய விமானங்களும் ரஷ்ய விமானம் ஒன்றும் திங்கட்கிழமை சனா நகரில் தரையிறங்கியுள்ளமை குறிப் பிடத்தக்கது.  நன்றி வீரகேசரி 






 தொடரும் இனப்படுகொலை: வெள்ளையரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கான கறுப்பினத்தவர்: வீடியோ காட்சி வெளியானது

08/04/2015 அமெரிக்காவில் கறுப்பினத்தவர் சுட்டுக்கொலை செய்யப்படுவது வருவது தொடர் கதையாகி வரும் நிலையில், தற்போது மேலும் ஒருவர் பொலிஸ் அதிகாரி ஒருவரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் வீடியோ காட்டிசியொன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு கரோலினாவில் உள்ள வடக்கு சார்லஸ்டன் பகுதியில் நான்கு பிள்ளைகளின் தந்தையான 50 வயதுடைய வோல்டர் ஸ்கோட்டை, ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரியான 33 வயதுடைய மைக்கல் ஸ்லேகர் தடுத்து நிறுத்தினார். 
இதன்போது குறித்த நபர் தப்பியோட முற்பட்ட போது அவர் சுட்டு கொலை செய்துள்ளார்.இதில் சம்பவ இடத்திலேயே வோல்டர் ஸ்கோட் பலியானார். 
முன்னாள் கடற்படை காவலரான வோல்டர் தன்னை தாக்க முனைந்ததால் தற்காப்புக்காக அவரை சுட்டுக்கொன்றதாக மைக்கல் உயரதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
ஆனால், சம்பவ இடத்தில் நடைபெற்ற நிகழ்வுகளை பார்த்தபோது, தப்பி ஓடிய வோல்டரை, முதுகில் 5 முறை மைக்கல் சுடுவது தெளிவாக தெரியவந்துள்ளது.
இருவருக்குமிடையே எந்த வித உரையாடலும் இடம்பெறவில்லை என்பதும் வீடியோ காட்சியிலிருந்து தெரியவந்தது. 

வோல்டர் தப்பியோடும் போது, 8 முறை மைக்கல் துப்பாக்கியால் சுடுவதும், அதில் 3 குண்டுகள் குறி தவறி போவதும், எஞ்சிய 5 குண்டுகள் வோல்டரின் உடலை துளைப்பதும்  வீடியோ காட்சிகளிலிருந்து தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவத்தை வீடியோ பதிவுகள் மூலம் தெரிந்து கொண்ட அதிகாரிகள், பொலிஸ் அதிகாரியை கைது செய்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து சிறையிலடைத்துள்ளனர். நன்றி வீரகேசரி 








ஐ.எஸ். தீவிரவாதிகளால் ஆங்கில மொழி வானொலி ஒலிபரப்புச் சேவை ஆரம்பிப்பு

09/04/2015 ஐ.எஸ். தீவி­ர­வா­திகள், தமது பிந்­திய தற்­கொலைக் குண்டுத் தாக்­கு­தல்கள் மற்றும் மர­ண­தண்­டனை நிறை­வேற்­றங்கள் என்­பன தொடர்­பான தக­வல்­களை வெளி­யிடும் முக­மாக ஆங்­கில வானொலிச் செய்திச் சேவையை ஆரம்­பித்­துள்­ளனர்.
மேற்­படி ஆங்­கில செய்­தி­ அந்த தீவி­ர­வாத குழுவின் அல் -பாயன் வானொலி வலைப் பின்­னலில் செவ்­வாய்க்­கி­ழமை ஒலி­ப­ரப்­பப்­பட்­டது.
அந்த வானொலி வலைப்பின்­னலில் ஏற்­க­னவே அரே­பிய மற்றும் ரஷ்ய மொழி வானொலி ஒலி­ப­ரப்­புகள் இடம்­பெற்று வரு­கின்­றன.
இந்­நி­லையில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்­டுள்ள ஒன்­ப­தரை மணி நேர ஆங்­கில வானொலி ஒலி­ப­ரப்­பா­னது அமெ­ரிக்க ஆங்­கிலம் பேசும் ஒரு­வரால் நடத்­தப்­பட்­டது.
அந்த ஒலி­ப­ரப்பின் முடிவில் அரே­பிய மொழி­யி­லான பாரம்­ப­ரிய இசை இசைக்­கப்­பட்­டது. அந்த வானொலி ஒலி­ப­ரப்பில் யர்மொக் பிராந்­திய மோதல்கள் குறித்து அதிக கவனம் செலுத்­தப்­பட்­டது.
அத்­துடன் சிரியா, ஈராக் மற்றும் லிபி­யா­வி­லான தீவி­ர­வா­தி­களின் செயற்­பாடுகள் தொடர்பில் விப­ரிக்­கப்­பட்­டது.மேலும் சிரிய தலை­நகர் டமஸ்­க­ஸி­லுள்ள யர்மொக் அக­திகள் முகாமில் ஐ.எஸ். கட்­டளைத் தள­ப­தி­களில் ஒருவர் கொல்­லப்­பட்­டமை, சிரி­யாவின் சிர்ட் பிராந்­தி­யத்­தி­லான மோட்டார் தாக்­கு­தல்கள் மற்றும் ஈராக்­கிய கிர்குக் நக­ரி­லான தற்­கொலைக் குண்டுத் தாக்­குதல் என்­பன உள்ள­டங்­க­லான பல ­த­ரப்­பட்ட விட­யங்கள் தொடர்பில் இந்த ஒலி­ப­ரப்பில் கலந்­து­ரை­யா­டப்­பட்­டமை குறிப்­பி­டத்­தக்­கது.
ஏற்கனவே ஐ.எஸ். போராளிகள் டபிக் என்ற மாதாந்த ஆங்கில சஞ்சிகையை வெளியிட்டுள்ள நிலையிலேயே இந்த ஒலி பரப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நன்றி வீரகேசரி 








No comments: