சங்க இலக்கியக் காட்சிகள் 46- செந்தமிழ்ச்செல்வர், பாடும்மீன் சு.ஸ்ரீகந்தராசா

.
பண்டைத் தமிழ் மக்களின் வாழ்க்கை முறைகளையும்,  பண்பாட்டினையும் படம்பிடித்துக்காட்டும் சான்றுகளாகத் திகழும்சங்க இலக்கியங்கள் குறித்துரைத்து நிற்கும் சுவைமிகுந்த காட்சிகளை வெளிப்படுத்தும் கட்டுரைத்தொடர்.

தந்தையைப்போல, மகனே நீ தவறுகள் செய்யாதே!

செங்கோல் தவறாது முறைசெய்து மக்களைக் காக்கும் மன்னன் அவன். அவனது மனைவி - பட்டத்தரசி - மிகவும் அழகானவள். அரசன்ää அரசியுடன் அன்பாகவும், இல்லற வாழ்வில் இன்பமாகவுமே இருந்தான். ஆனாலும் அவனுக்குப் பிறமங்கையரோடும் தொடர்பு இருந்தது. அரசோச்சுவதில் நல்லவனாகத் திகழ்ந்த அவன் காமக்களியாட்டத்திலும் வல்லவனாகவே இருந்தான். அரசனுக்கும் அரசிக்கும் ஓர் ஆண்குழந்தை பிறந்தது. அதற்குப் பின்னரும் மனைவியை விட்டுவிட்டு, மற்றைய பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் அவனின் வழக்கம் தொடர்கிறது. குழந்தை வளர்ந்த சிறுவனாகின்றது. ஒருநாள் தாயும் மகனும் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். தாயின் மடியில் தாவி அமர்வதும்ää வெளியே ஓடிச்சென்று குதிப்பதுமாக அந்தச் சிறுவன்




விளையாடிக்கொண்டிருக்கின்றான். கால்களிலே அவன் அணிந்திருக்கும் சதங்கைகள் கணீர் கணீர் என் ஒலியெழுப்புகின்றன. அவன் விளையாடும் அழகை ஆசையோடு இரசித்தபடி தாய் அமர்ந்திருக்கிறாள். பொம்மை யானைகளை இழுத்து மகிழ்ந்துகொண்டிருக்கின்றான். அப்போது அங்கே மங்கையர்கள் விளையாடும் களத்தினை உழக்குகின்றான். அவர்களின் விளையாட்டு அடையாளங்கள் அவனது கால்பட்டுச் சிதைகின்றன. மகனை விளையாடவிட்டு மகிழ்ந்துகொண்டிருக்கும் தாய் விளையாட்டுக்கு இடையே அவனக்கு அறிவுரைகளைச் சொல்கின்றாள்.
“மகனே! என் அன்பு மகனே! போர்யானைக்கு ஒப்பான வீரனே! நான் சொல்வதைக் கேள். அழகிலே நீ உனது அப்பாவைப்போல விளங்கவேண்டும். ஆனால்,எல்லா விடயங்களிலும் நீ அவரைப்போல இருக்கக்கூடாது. பக்கச் சார்பின்றி, நீதி தவறாது செங்கோல் ஓச்சுவதிலே அவரைப்போல இருக்க வேண்டும். மங்கையரை நாடுகின்ற அவரது குணத்தை மட்டும் நீ கைக்கொள்ளாதே. களத்திலே எதிரிகளை வெற்றிகொள்ளும் வீரத்திலே நீ அவரோடு ஒன்றுபடு. ஆனால் மனத்திலே நான் இருக்கும்போது என்னைத் தவிக்க விட்டு மற்றைய பெண்களிடம் செல்லுகின்ற குணத்திலே நீ வேறுபடு. தன்னை நாடி வருபவர்களுக்கு வாரி வழங்கும் அவரது வள்ளல் தன்மையை நீ பின்பற்று. ஆனால், தன்னைக் காதலித்து மணந்துகொண்டவளை நோகச்செய்து துன்பத்தில் வாடவிடுகின்ற அவரது செய்கையை நீ கைக்கொள்ளாதே” என்றெல்லாம் மகனுக்கு தாய் அறிவுரை சொல்லிக்கொண்டிரக்கும்போதுää மன்னன் - அவளின் கணவன் - அங்கே வருகின்றான். தந்தையைக் கண்டதும் சிறுவன் அவரைப்பார்த்துச் சிரிக்கிறான். அதைக்கண்ட தாய் முறைக்கிறாள். இவ்வளவு நேரமும் நான் என்ன சொல்லிக்கொண்டிருக்கிறேன், இவன் இப்போது என்ன செய்கிறான் என்று முணுமுணுக்கிறாள். மகனை இழுத்துத் தன்னோடு இறுக அணைத்து வைத்துக் கொள்கிறாள். மன்னன் அவளைப்பார்த்து, “அன்பான அழகியே. இங்கே பார். வேறு யாரிடமும் எனது உள்ளத்தைக் கொடுக்காதவன் நான். அப்படிப்பட்ட என்மேல் என்ன பிழை கண்டாய்? அவனைப்பிடித்துக்  கொண்டிராமல் விட்டுவிடு. அவனை என்னிடம் வருவதற்கு விடு. அவனை நான் தூக்கி அணைக்க வேண்டும்.” தந்தை இவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கும்போதே, தாயிடமிருந்து திமிறித் தன்னை விடுவித்துக்கொண்ட மகன் தந்தையிடம் தாவியோடுகிறான். இப்போது தந்தையின் மார்பிலே அவன் தவள்கிறான்.
தாய்க்குக் கோபம் வருகின்றது. உண்மையிலே அது கோபமல்ல கணவனோடு ஊடல்தான். “அட இங்கே பார்! அவரிடம் நீ போகாதே என்று நான் எவ்வளவு தடுத்தும்கூட, இவன் என்னைவிட்டுவிட்டுத் தாவியோடி அவரின் மார்பில் ஏறிவிட்டானே. அது சரி! என்னிடம் அன்பில்லாதவர் பெற்ற மகன்தானே இவன். இவன் மட்டும் எப்படி என்மேல் அன்பு காட்டுவான். தந்தையைப் போலத்தானே பிள்ளையும் இருப்பான்” என்று கணவனுக்குக் கேட்கும்படி கூறுகின்றாள். கணவனோடு ஊடுகின்றாள். பின்னர் கணவனின் அணைப்பை நாடுகின்றாள். அவனோடு கூடுகின்றாள்.
இந்தக்காட்சியை எடுத்தியம்பும் பாடல் வருமாறு:
பாடல்:

மைபடு சென்னி மழகளிற்று ஓடைபோல்
கைபுனை முக்காழ் கயந்தலைத் தாழப்
பொலஞ்செய் மழுவொடு வாள்அணிகொண்ட
நலங்கிளர் ஒண்பூண் நனைத்தரும் அவ்வாய்
கலந்துகண் நோக்குஆரக் காண்பின் துகிர்மேல்
பொலம்புனை செம்பாகம் போர்கொண் டிமைப்பக்
கடிஅரணம் பாயாநின் கைபுனைவேழம்
தொடியோர் மணலின் உழக்கி அடியார்ந்த
தேரைவாய்க் கிண்கிணி ஆர்ப்ப இயலும்என்
போர்யானை வந்தீக ஈங்கு!
செம்மால்! வனப்பெல்லாம் நுந்தையை ஒப்பினும் நுந்தை
நிலைப்பாலுள் ஒத்தகுறிஎன் வாய்க்கேட்டு ஒத்தி
கன்றிய தெவ்வர்க் கடந்த களம்கொள்ளும்
வென்றிமாட்டு ஒத்தி, பெரும! மற்று ஒவ்வாதி
ஒன்றினோம்யாம் என்று உணர்ந்தாரை நுந்தைபோல்
மென்தோள் நெகிழவிடல்
பால்கொளல் இன்றிப் பகல்போல் முறைக்கு ஒல்கா
கோல்செம்மை ஒத்தி பெரும! மற்று ஒவ்வாதி
கால்பொரு பூவின் கவின்வாட நுந்தைபோல்
சால்பு ஆய்ந்தார் சாயவிடல்
வீதல் அறியா விழுப்பொருள் நச்சியார்க்கு
ஈதல்மாட்டு ஒத்தி, பொரும! மற்று ஒவ்வாதி
மாதர்மென் நோக்கின் மகளிரை நுந்தைபோல்
நோய்கூர நோக்காய் விடல்
ஆங்க,
திறன் அல்ல யாம் கழற, யாரை நகும், இம்
மகன் அல்லான் பெற்ற மகன்?
மறைநின்று தாம் மன்ற வந்தீத் தனர்
ஆயிழாய்! தாவாத எற்குத் தவறுண்டோ? காவாது ஈங்கு
ஈத்தை இவனையாம் கோடற்குச் சீத்தை யாம்
கன்றி அதனைக் கடியவும் கைநீவிக்
குன்ற இறுவரைக் கோண்மா இவர்ந்தாங்குத்
தந்தை வியன்மார்பில் பாய்ந்தான் அறன் இல்லா
அன்பிலி பெற்ற மகன்!

(கலித்தொகை, மருதக்கலி பாடல் இல: 21 பாடியவர்: மருதன் இளநாகனார்)

இதன் நேரடிக்கருத்து:

இளம் யானையின் கழுத்திலே தொங்குகின்ற மலர் வடத்தைப்போல உனது மென்மையான தலையிலும் மூவடக்கோவை தொங்குகிறது. வாளும்ää மழுவும் இடப இலச்சினையோடு அமைந்தவாறு நீ கழுத்திலே அணிந்துள்ள அணியை உனது வாயிலிருந்து வடிந்துகொண்டிருக்கும் நீர் நனைக்கின்றது. அந்த அழகிலே உள்ளம் ஒன்றியவளாக என் ஆசை தீர உன்னைப் பார்ப்பேன்.  யானைகள் இரண்டு போரிடுவதைப்போலப் பவள உருளையின் மேல் அமைத்துச் செய்யப்பட்ட பொம்மை யானையை இழுத்து நீ விளையாடிக்கொண்டிருக்கின்றாய். வளையல்கள் அணிந்த பெண்கள் விளையாடும்போது அவர்கள் நிலத்திலிட்ட அடையாளங்களை காலால் உழக்கிச் சிதைத்துக்கொண்டு, அந்தக்கால்களிலே அணிந்துள்ள தேரையின் வாய்போன்ற சதங்கைகள் ஒலியெழுப்ப நடந்துவந்துகொண்டிருக்கும் என் மகனே! போர்யானையை ஒத்த வீரனே, இங்கே வா!
செம்மலே! அழகிலே நீ உன் தந்தையைப் போல இருந்தாலும்ää உனது தந்தையின் செய்கைகளிலே உனக்கு ஏற்றவை எவை என்பதை என்னிடம் கேட்டறிந்து அவைகளில் மட்டுமே நீ அவரைப்போல இருக்கவேண்டும். கோபங்கொண்டு வருகின்ற பகைவரைப் போர்க்களத்திலே எதிர்கொண்டு வெற்றிபெறுவதில் அவரைப்போலவே நீயும் இருப்பாயாக. ஆனால்ää
பெருமைக்குரியவனே! அவரோடு ஒன்றுகலந்துவிட்டோம் என்று உணர்ந்தவர்களின் தோள்கள் மெலிந்து துன்பமடையுமாறு அவர்களைக் கைவிட்டுச் செல்வதிலே நீ உன் தந்தையைப் போல் இருக்காதே.

ஒருபக்கம் சாராமல், கதிரவனைப்போல நீதிதவறாது செம்மையாக ஆட்சிசெய்வதிலே நீ அவரைப்போலவே விளங்கு. ஆனால்ää ஒழுக்கத்தில் சிறந்த மனைவியை காற்றினால் உதிர்ந்த மலர்களைப்போலää வாடி வதங்கவிட்டுப் பரத்தையரிடம் செல்லுகின்ற தன்மையிலே நீ அவரை ஒத்திருக்காதே.

தன்னை விரும்பி வந்தவர்களுக்கு அழிவற்ற உயர்ந்த பொருட்களை வழங்குவதில் நீ தந்தையைப்போலவே விளங்கு. ஆனால் பெருமைக்குரிய என் மகனே! உன்தந்தையைப்போல, காதலித்த மென்மையான மங்கையரைத் துன்பத்திலே வாடவிட்டுச் செல்கின்ற செய்கையினை மட்டும் நீ செய்யாதே.

(அப்பொழுது தந்தை அங்கே வந்து மறைவாக நிற்க, அவனைக்கண்டு தாயின் அணைப்பிலிருந்த மகன் சிரிக்கிறான். அப்போது தாய்)
திறன் அல்லாத செயல்களைச் செய்யாதே என்று நான் சொல்லிக்கொண்டிருக்கிறேன், அப்படியிருந்தும், மகன் இல்லாதவன் பெற்ற இந்த மகன் யாரைப்பார்த்துச் சிரிக்கிறான்?

(தந்தை சொல்கிறார்)அழகுள்ளவளே! மற்றவர்களிடம் மனதை அலையவிடாத என்னிடம் ஏதாவது தவறு உள்ளதா? மகனைப் பிடித்துக்கொண்டிராமல் அவனை என்னிடம் வருவதற்கு விட்டுவிடு.
(மகன் தாயிடமிருந்து விடுபட்டுத் தந்தையிடம் ஓடிச்சென்று அவனைக் கட்டியணைக்கின்றான்)
(தாய் சொல்வது) இவனெரு கீழ்மகன். “உனது தந்தையிடம் நீ செல்லக்கூடாது” என்று நான் தடுத்தும் கேட்காமல், எனது கைகளை உதறித்தள்ளிவிட்டு மலைச்சாரலை நோக்கிச் சிங்கக்குட்டி பாய்ந்தோடுவதுபோல, தன் தந்தையின் அகன்ற மார்பைநோக்கி ஓடிச் சென்றுவிட்டானே, என்னிலே அன்பில்லாதவன் பெற்ற இந்த மகன்!

No comments: