குணம் எமக்கு மாறவில்லை ! (. எம். ஜெயராமசர்மா ... மெல்பேண் )

.        

      காசெல்லாம் செலவு செய்து
      கடவுளை நாம் வணங்குகிறோம்
      நீசக்குணம் போயிட  நாம்
      நினைத்து என்றும் பார்த்தோமா

      ஆசைவார்த்தை கூறி நின்று
      அனைவரையும் மடக்கு கின்றோம்
      அல்லல் பட்டு நிற்பவரை
      அரைக்கணம் நாம் பார்த்ததுண்டா

      மோசடிகள் பல செய்து
      முழுவதையும் சுருட்டு கின்றோம்
      காசில்லா நிற்கும் அவர்
      கஷ்டமதை பார்த்த துண்டா

      ஊரில் உள்ள அத்தனையும்
      காரில் சென்று விலைபேசி
      நீதிநெறி தனை  மறந்து
      தாறு மாறாய் வாங்குகின்றோம்

     வாரி வாரி சுருட்டுகின்றோம்
     வயிற்றில் எல்லாம் அடிக்கின்றோம்
     சாமியையும் விலை பேசி
     சந்தை தனில் விற்கின்றோம்

     கோயில் சென்று வந்தாலும்
     குணம் எமக்கு மாறவில்லை
     பாவிகளாய் இருப் பார்க்கு
     பணம் இருந்தும் என்னபயன் !

No comments: