தமிழ் சினிமா ஓ காதல் கண்மணி

ஓ காதல் கண்மணி கண்டிப்பாக அலைபாயுதேவின் இரண்டாம் பாகம் என்று சொல்லலாம். என்ன அதில் திருமணம் செய்துகொண்டு எப்படி ஒன்றாக வாழ்கிறார்கள் என்பது கதை, இதில் ஒன்றாக வாழ்பவர்கள் திருமணம் செய்து கொள்வார்களா? மாட்டார்களா? என்பது கதை.
மும்பையில் சந்தித்து கொள்ளும் துல்கர், நித்யா இரண்டாம் சந்திப்பிலேயே நெருக்கம் ஆகிறார்கள். ’திருமணத்தில் நம்பிக்கை இல்லை’ என்ற ஒற்றை புள்ளியில் ஒருவருக்கொருவரை பிடித்துப்போக காதலில் விழுகிறார்கள். துல்கருக்கு அமெரிக்கா செல்வது தான் லட்சியம் அதேபோல நித்யாவுக்கு பாரிஸ்.
இவர்களின் லட்சியம் நிறைவேறும் வரை துல்கர் தங்கியிருக்கும் பிரகாஷ்ராஜ் வீட்டிலேயே Living Together ஆக வாழலாம் என்ற முடிவுக்கு வருகிறார்கள். (இதனால் தான் மணிரத்னம் மும்பையை தேர்வு செய்தார் போலிருக்கிறது). ஒருகட்டத்தில் இருவீட்டாரும் திருமணம் செய்ய கட்டாயப்படுத்த துல்கர், நித்யா இருவரும் அதை மறுக்க, கடைசியில் திருமணம் செய்து கொண்டார்களா? இல்லையா? என்பதுதான் கதை.
நடிகர்கள் & தொழில்நுட்ப கலைஞர்கள் பங்களிப்பு:
தன் துள்ளலான நடிப்பில், குறும்பான பார்வையில் சுறுசுறுப்பான வசனங்களின் மூலம் அனைவரையும் கவர்கிறார் துல்கர். ஒரு சாக்லெட் பாய்யாக, ரொமாண்டிக் ஹீரோவாக சிக்சர் அடிக்கிறார் துல்கர். நித்யா மேனன் தாராவாக வாழ்ந்தே இருக்கிறார், முக பாவனைகளுக்கு பஞ்சமே இல்லாத முகம். துல்கரிடம் ‘அம்மாவை வரசொல்லட்டுமா’ என்று கலாய்க்கும் போதும் ,Pregnancy Test க்காக மருத்துவமனை வந்ததுபோல் நடிக்கும் போதும் கைதட்டல் வாங்குகிறார்.
பிரகாஷ்ராஜ் - லீலா சாம்சன் ஜோடி காதலுக்கு முன்னுதாரணம்! Alzheimer ( நியாபகமறதி) நோயால் பாதிக்க பட்டவராக லீலா சாம்சன் தூள் கிளப்ப மறுபுறம் பாசமிகு கணவனாக பிரகாஷ்ராஜ் பட்டையை கிளப்புகிறார்.
ஏ ஆர் ரகுமானின் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பெரிய பலம். மணிரத்னத்தின் வசனங்களும், கதாபாத்திரங்களை கையாளும் விதமும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. படத்தின் மிகப்பெரிய பலம் பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவு என்று சொன்னால் மிகையாகாது. ஒவ்வொரு ஃபிரேமிலும் பி.சி. ஸ்ரீராம் கைவண்ணம் மிக அழகு!
கிளாப்ஸ்
பி.சி. ஸ்ரீராம் ஒளிப்பதிவு, துல்கர் - நித்யாவின் துள்ளலான நடிப்பு! படத்தின் இரண்டாம் பாதி!
பல்ப்ஸ்
நீளமான முதல் பாதி, இலக்கே இல்லாமல் நகரும் திரைக்கதை!
மொத்தத்தில் மணிரத்னம் போட்டு வைத்த காதல் திட்டம் "டபுள்" ஓகே கண்மணி!

Rating 3.5/5

நன்றி cineulagam 

No comments: