.
அந்த ஒற்றையடிச் செம்மண் பாதைக்குள் சைக்கிளைத் திருப்பிய குமாரசாமிக்கு 65 வயதுக்கு மேலிருக்கலாமென்று அவருடைய தோற்றம் சொன்னது. உழைப்பினால் உரமேறிய தேகம்இ இந்த வயதிலும் மிதிவண்டியிலேயே எங்கும் சென்றுவரும் கடின உழைப்பாளி.
குமாரசாமி அந்தக் கிராமத்தின் விவசாயி. பரம்பரையான விவசாய நிலம் அவருக்கு இருந்தது. ஆணும்இ பெண்ணுமாய் இரு பிள்ளைகள்.
பெண்ணைப் பக்கத்து ஊரில் திருமணம் செய்துகொடுத்துவிட்டார். மகன் மோகனுக்கு சிறுவயதிலிருந்தே விவசாயத்தில் ஈடுபாடில்லை.
சேறுஇ சகதிக்குள் நான் வேலை செய்யமாட்டேன் என்று பிடிவாதமாய்ப் படித்து முடித்த கையோடு சிங்கப்பூரிலும் வேலை ஒன்றைத் தேடிக்கொண்டு சென்றுவிட்டான்.
மகனிடம் தன்னுடைய ஆசையைக் கூற மனமில்லாமல் பேசாது இருந்துவிட்டார் குமாரசாமி.
இப்போது அவரால் முன்னைப் போல் அதிகமாக கழனியில் வேலைசெய்ய முடியவில்லை. தள்ளாமைஇ யாருக்கு உழைக்கவேண்டுமென்ற வெறுமை அவரை நிலத்தை விற்றுவிடலாமென்ற முடிவுக்கு வரவைத்தது. மனைவியின் கெஞ்சலையும் பொருட்படுத்தாமல் டவுனிலிருந்த ரியல் எஸ்டேட்காரரிடம் நிலத்தை வந்து பார்க்குமாறு சொல்லிவிட்டுத் தான் இப்போது திரும்பிக்கொண்டிருக்கிறார்.
அந்தச் செம்மண் சாலைக்குள் திரும்பியதும் கண்ணில்படுவது அவரின் வயல்தான். அறுப்பு முடிந்த வயல் அடுத்த நடுதலுக்காய்க் காத்துக்கிடந்தது. கரகரவென்று கண்ணில் நீர் சொரிய ஆரம்பிக்கஇ சைக்கிளை விட்டிறங்கி மேல்துண்டால் கண்களைத் துடைத்துவிட்டுஇ வயலைப் பார்த்தபடியே வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தார்.
எதிரில் வரும் தணிகாசலத்தைப் பார்த்துவிட்டு என்ன இவ்வளவு தூரம் வந்திருக்கே தம்பி என்று கேட்டதும்இ
அண்ணே உங்க வீட்டுக்குத் தான் போய்ட்டு வாறேன் இவன் என்னோட அண்ணன் பையன் கதிரவன்.. பட்டணத்துல படிச்சுப் போட்டு வயக்காட்டுல வேலை செய்யப் போறானாம்.
உங்களுக்கே தெரியும் நானே குத்தகை நிலத்துல வாழ்க்கையை ஓட்டுறவன். திடுதிப்புன்னு நிலத்துக்கு எங்க போக.. அதாண்ணே உங்க நினைப்பு வந்திச்சு உங்களுக்கும் தள்ளாமை. இவ்வளவு காலம் நமக்குச் சோறு போட்ட தாய்பூமி. அவளைக் காயப்போடாமஇ என் அண்ணன் பையனுக்கு குத்தகைக்குக் குடுத்திடுங்கண்ணே..
அவனுக்கும் தொழில்இ உங்களுக்கும் வருமானம்இ அதுக்கும் மேலாஇ பெரிய படிப்பும் விவசாயத்துல படிச்ச இவனை போல பசங்களுக்கு நாம ஒரு சந்தர்ப்பத்தைக் குடுக்கலாமே. என்ன சொல்றீங்கண்ணே.
ஒரே மூச்சாய்ப் பேசி முடித்த தணிகாசலத்தைக் கண்கலங்கப் பார்த்த குமாரசாமி விருட்டென்று சைக்கிளையும் கைவிட்டுவிட்டு கதிரவனை வாஞ்சையாக அணைத்துக் கொண்டார்.
தம்பிஇ உன்னைப் போல இளம்பசங்க இந்தமாதிரி வயக்காட்டு வேலைக்கு வரணும். பரந்துபோய்க் கிடக்குது நிலம்இ நீச்சு. பயன்படுத்தத் தான் ஆளில்லாம.
இனி எனக்குக் கவலையில்லை. இந்த வயக்காடு என்னைக்கும் வறண்டுகிடக்காது என்ற நம்பிக்கை உன்னைப் பார்த்ததுக்குப் பிறகு வந்திருக்கு.
இது உன் சொந்த நிலம். நல்லாப் பார்த்துக்கோ. வியர்வை சிந்து. அன்னை உனக்கு பொன்னாய்த் தருவா. நாற்றை நட்டு நாட்டை உயர்த்து. சொல்லிக்கொண்டு ஒரு இளைஞனின் உற்சாகத்தோடு சைக்கிளை எடுக்கும் போது பொட்டென்று ஒரு மழைத்துளி அவர்மேல் விழுந்தது.
இப்போதும் கண்ணில் நீர்.. ஆனால் அது துக்கத்தினால் அல்ல!
இன்றைய சில இளைஞர்கள் விவசாயம் பக்கம் தங்கள் கவன்ம் திருப்பி இருப்பது நாளைய விடியலுக்கான புது துளிர்..
Nantri கமலா பாலன்
No comments:
Post a Comment