உலகச் செய்திகள்

.
மத்­தி­ய­தரைக் கடலில் 700 குடியேற்றவாசிகளுடன் படகு மூழ்கியது :பெருமளவானோர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

எகிப்திய முன்னாள் ஜனாதிபதி முர்ஸிக்கு 20 ஆண்டுகள் சிறை

யேமனிய தலைநகரில் ஏவுகணை களஞ்சியசாலை மீது வான் தாக்குதல்; 38 பேர் பலி; 532 பேர் காயம்

ஐ.எஸ். தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதியோப்பியாவில் பாரிய ஆர்ப்பாட்டம்

மத்­தி­ய­தரைக் கடலில் 700 குடியேற்றவாசிகளுடன் படகு மூழ்கியது :பெருமளவானோர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

நேபாள நிலநடுக்கம்; பலியானோர் எண்ணிக்கை 1,805 ஆக உயர்வு, இந்தியாவில் 51 பேர் உயிரிழப்பு


20/04/2015 700க்கும் அதி­க­மான குடி­யேற்­ற­வா­சி­களை ஏற்றிச் சென்ற பட­கொன்று மத்­தி­ய­தரைக் கடலில் சனிக்­கி­ழமை நள்­ளி­ரவு வேளையில் மூழ்­கி­யதில் அதில் பயணம் செய்த பெரு­ம­ள­வானோர் உயி­ரி­ழந்­தி­ருக்­கலாம் என அஞ்­சப்­ப­டு­வ­தாக இத்­தா­லிய கரை­யோர காவல் படை­யினர் ஞாயிற்­றுக்­கி­ழமை தெரி­வித்­தனர்.


இத்­தா­லிய தீவான லம்­பெ­து­ஸாவின் தெற்கே மூழ்­கிய அந்தப் படகில் பயணம் செய்த சுமார் 28 பேர் உயி­ரு டன் மீட்­கப்­பட்­டுள்­ளனர். இந்­நி­லையில் அந்தப் படகில் பய­ணித்­த­வர்­களை மீட் கும் முக­மாக பிர­தான மீட்பு நட­வ­டிக்­கை­யொன்று முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாக பிராந்­திய அதி­கா­ரிகள் கூறு­கின்­றனர்.
மேற்­படி மீட்பு நட­வ­டிக்­கையில் இத்­தா­லிய கப்­பல்­களும் மத்­தி­ய­தரைக் கடல் தீவான மால்ட்­டாவின் கடற்­படை மற்றும் வர்த்­தக கப்­பல்­களும் ஈடு­பட்­டுள்ள.லிபிய கடற்­க­ரைக்கு அப்பால் 27 கிலோ­மீற்­றரும் லம்­பெ­துஸா தீவி­லி­ருந்து 210 கிலோ­மீற்­றரும் தொலை­வான பிராந்­தி­யத்தில் தேடுதல் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாக பிராந்­திய அதி­கா­ரிகள் கூறு­கின்­றனர்.
கடந்த வாரம் குடி­யேற்­ற­வா­சி­களின் பட­கொன்று மூழ்­கி­யதில் சுமார் 400 பேர் மூழ்கி உயி­ரி­ழந்­தி­ருக்­கலாம் என அஞ்­சப்­ப­டு­கின்ற நிலையில் இடம்­பெற்­றுள்ள இந்தப் புதிய படகு அனர்த்தம் பெரும் சர்ச்­சையை தோற்­று­வித்­துள்­ளது.
இந்த அனர்த்­தத்தில் பெரு­ம­ள­வான குடி­யேற்­ற­வா­சிகள் உயி­ரி­ழந்­தி­ருக்­கலாம் என அஞ்­சப்­ப­டு­வ­தாக மால்ட்டா பிர­தமர் ஜோசப் மஸ்கட் தெரி­வித்தார்.மேற்­படி படகில் சென்­ற­வர்கள் அவ்­வ­ழி­யாக சென்ற வாணிப கப்­ப­லொன்றின் கவ­னத்தை ஈர்க்க பட­கி­லி­ருந்து குதித்­த­தா­கவும் அவர்­களை மீட்க குறிப்­பிட்ட வாணிப கப்பல் சென்ற போது அந்தப் படகு கவிழ்ந்­த­தா­கவும் உறு­திப்­ப­டுத்­தப்­ப­டாத தக­வல்கள் தெரி­விக்­கின்­றன.
இந்­நி­லையில் மீட்பு நட­வ­டிக்­கை­களில் மொத்தம் 20 கப்­பல்­களும் 3 உலங்­கு­வா­னூர்­தி­களும் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.உயி­ருடன் மீட்­கப்­பட்­ட­வர்கள் கடா­னியா நகர கடற்­க­ரைக்கு அழைத்து வரப்­பட்­டுள்­ளனர்.
கடந்த வருடம் வறுமை மற்றும் மோதல்கள் கார­ண­மாக ஆபி­ரிக்கா மற்றும் மத்­திய கிழக்கு நாடு­க­ளி­லி­ருந்து 170,000 பேர் ஆபத்து மிக்க கடல் பய­ணத்தை மேற்­கொண்டு இத்தாலியை சென்றடையும் முயற்சியில் ஈடுபட்டதாக தரவுகள் கூறுகின்றன.
குடியேற்றவாசிகள் மேற்படி 500 கிலோமீற்றருக்கும் அதிகமான நீளமுடைய கடல் பரப்பை அளவுக்கதிகமானோரை ஏற்றிச் செல்லும் மோசமான நிலையிலுள்ள பாதுகாப்பற்ற படகுகளில் கடக்க முயற்சிப்பது வழமையாகவுள்ளது.  நன்றி வீரகேசரி 











எகிப்திய முன்னாள் ஜனாதிபதி முர்ஸிக்கு 20 ஆண்டுகள் சிறை

எகிப்திய நீதிமன்றமொன்று அந்நாட்டு முன்னாள் ஜனாதிபதி மொஹமட் முர்ஸிக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

அவர் அதிகாரத்திலிருந்த போது ஆர்ப்பாட்டக்காரர்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பிலேயே அவருக்கு மேற்படி தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவர் ஆட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதையடுத்து வழங்கப்பட்ட முதலாவது நீதிமன்ற தீர்ப்பாக இது உள்ளது.
அவர் மேலும் பல விசாரணைகளை எதிர்கொண்டுள்ளார்.
முர்ஸி அவருக்கு எதிராக இடம்பெற்ற பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களைத் தொடர்ந்து 2013 ஆம் ஆண்டில் இராணுவத்தால் ஆட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டார். இதனையடுத்து அவரது முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பிற்கு தடை விதிக்கப்பட்டதுடன் அந்த அமைப்பைச் சேர்ந்த பலர் கைதுசெய்யப்பட்டனர்.
2012 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஜனாதிபதி மாளிகைக்கு வெளியே இடம்பெற்ற மோதல்களின் போது ஊடகவியலாளர் ஒருவரையும் ஏனைய எதிர்க்கட்சி ஆர்ப்பாட்டக்காரர்ளையும் கொல்வதற்கு ஆதரவாளர்களைத் தூண்டியதாக முர்ஸி மீதும் ஏனைய முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின தலைவர்கள் மீதும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.  நன்றி வீரகேசரி









யேமனிய தலைநகரில் ஏவுகணை களஞ்சியசாலை மீது வான் தாக்குதல்; 38 பேர் பலி; 532 பேர் காயம்

23/04/2015 யேம­னிய தலை­நகர் சனாவில் ஏவு­கணை களஞ்­சி­ய­சா­லை­யொன்றின் மீது சவூதி அரே­பியா தலை­மை­யி­லான கூட்­ட­மைப்பு நாடு­களின் படை­யினர் நடத்­திய வான் தாக்­கு­த­லொன்றில் குறைந்­தது 38 பொது­மக்கள் பலி­யா­ன­துடன் 532 பேருக்கும் அதி­க­மானோர் காய­ம­டைந்­துள்­ள­தாக பிராந்­திய மருத்­து­வர்கள் செவ்­வாய்க்­கி­ழமை தெரி­வித்­தனர்.

மேற்­படி தாக்­கு­தலால் ஏவு­கணை களஞ்­சி­ய­சா­லையில் ஏற்­பட்ட வெடிப்புக் கார­ண­மாக பல மீற்றர் உய­ரத்­திற்கு கடும் புகை­மூட்டம் எழுந்­த­தாக அங்­கி­ருந்து வரும் செய்­திகள் தெரி­விக்­கின்­றன.
தலை­ந­க­ரி­லுள்ள பஜ் அட்டன் பிர­தே­சத்­தி­லேயே இந்த வெடிப்பு இடம்­பெற்­றுள்­ளது.காய­ம­டைந்­த­வர்கள் நக­ரி­லுள்ள 4 மருத்­து­வ­ம­னை­களில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளனர்.
மேற்­படி வெடிப்பு சம்­ப­வ­மா­னது சவூதி அரே­பியா தலை­மை­யி­லான கூட்­ட­மை ப்பால் யேமனில் தாக்­கு­தல்கள் முன்­னெ­டுக்­கப்­பட்ட பின்னர், அங்கு இடம்­பெற்ற அதி­க­ள­வா­னோரை பலி கொண்ட சம்­ப­வ­மாக கருதப்படுகிறது.   நன்றி வீரகேசரி







ஐ.எஸ். தீவிரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து எதியோப்பியாவில் பாரிய ஆர்ப்பாட்டம்

23/04/2015 லிபி­யாவில் ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களால் எதி­யோப்­பிய கிறிஸ்­த­வர்கள் குழு­வொன்று கொல்­லப்­பட்­ட­மைக்கு எதிர்ப்புத் தெரி­வித்து எதி­யோப்­பி­யாவில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கானோர் புதன்­கி­ழமை எதிர்ப்பு ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர்.

அந்­நாட்டு அர­சாங்­கத்தின் ஏற்­பாட்டில் அடிஸ் அபாபா பிராந்­தி­யத்­தி­லுள்ள மெஸ்கெல் சதுக்­கத்தில் இந்த ஆர்ப்­பாட்டம் இடம்­பெற்­றுள்­ளது.

ஐ.எஸ். தீவி­ர­வா­தி­களால் கடற்­க­ரை­யொன்றில் 12 எதி­யோப்­பிய கிறிஸ்­த­வர்­க­ளுக்கு தலையை துண்­டித்தும் பாலை­வனப் பிராந்­தி­ய­மொன்றில் 16 எதி­யோ­ப்­பிய கிறிஸ்­த­வர்­க­ளுக்கு துப்­பாக்­கியால் சுட்டும் மர­ண­தண்­ட­னை­கள் நிறை­வேற்­றப்­ப­டு­வதை வெளிப்­ப­டுத்தும் வீடியோக் காட்­சி­யொன்று கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை அந்த தீவி­ர­வாதக் குழுவால் வெளி­யி­டப்­பட்­டி­ருந்­தது. இந்த படு­கொ­லைகள் குறித்து உல­க­ளா­விய ரீதியில் கடும் கண்­டனம் தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

இந்த சம்பவம் தொடர்பில் தான் பெரிதும் துயரமும் கவலையும் அடைந்துள்ளதாக பாப்பரசர் பிரான்சிஸ் குறிப்பிட்டிருந்தார்.



நன்றி வீரகேசரி











நேபாள நிலநடுக்கம்; பலியானோர் எண்ணிக்கை 1,805 ஆக உயர்வு, இந்தியாவில் 51 பேர் உயிரிழப்பு

26/04/2015 நேபாளத்தில் இடம்பெற்ற நில நடுக்கத்தின் பிடியில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 1,805 ஆக உயர்ந்தது.

 மேலும் இந்தியாவில் நிலநடுக்கத்தில் 51 பேர் உயிரிழிந்தனர். 
நேபாளம் மற்றும் இந்தியாவில் பாதிக்கப்பட்ட இடங்களில் இந்தியா முழு மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளன.

நேபாளத்தில் நேற்று 7.9 ரிக்டர் அளவுகொண்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் தலைநகர் காத்மண்டு தொடங்கி போக்ரா, லோம்ஜங், கீர்த்தி நகர் என அந்த நாடு முழுவதும் பரவியுள்ளது.
இந் நிலநடுக்கத்தால் வீடுகளும், அலுவலகங்களும், வணிக நிறுவனங்களும், கோவில்களும் சரிந்து விழுந்தன. நில நடுக்கத்தால் மக்கள் நெருக்கம் மிகுந்த காத்மண்டு பள்ளத்தாக்கு பகுதி உருக்குலைந்து விட்டது.  

இடிபாடுகளில் சிக்கி ஏராளமானோர் கை, கால்கள் என உறுப்புகள் சேதம் அடைந்த நிலையில், காத்மண்டு வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. காயம் அடைந்தவர்களுக்கு வைத்தியர்கள், வீதிகளிலேயே திறந்தவெளி மருத்துவ முகாம்களை அமைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
நிலநடுக்கத்தின் பிடியில் சிக்கி 1500 பேர் பலியாகினர் என்று தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் மேலும் பலரது சடலம் இடிபாடுகளுக்குள் இருந்து மீட்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து பலியானவர்கள் எண்ணிக்கை 1,805 ஆக உயர்ந்து உள்ளது. 
4,700-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறன.  நன்றி வீரகேசரி

No comments: