தமிழ் சினிமா


பிரம்மன்


படம் தொடக்கமே சசிகுமாரின் சிறு வயதில் ஆரம்பமாகிறது.
சசிகுமார் அவருடைய நண்பன் நவீன் சந்திரன் இவர்களுக்கு சினிமா மற்றும் அந்த ஊரில் இருக்கும் பழைய சினிமா தியேட்டர் தான் தங்கள் உலகம் என்று வாழ்கிறார்கள்.

சிறு வயதிலே சினிமாவுக்கு எதாவது செய்ய வேண்டும் என்று சபதம் எடுக்கும் இவர்கள் பிறகு தவிர்க்க முடியாத சில காரணத்தினால் அந்த நட்பு வயதிலே பிரிய, பிறகு படம் நிகழ்காலத்துக்கு வந்து நம் உயிரை எடுக்க ஆரம்பிக்கிறது.

சிறு வயதில் சுற்றி திரிந்த அந்த சினிமா தியேட்டர் லீசுக்கு எடுத்து நடத்தி வருகிறார் சசிகுமார், எல்லா படத்திலும் வரும் அதே நண்பனாகவும்+ஆப்பரேட்ராகவும் சந்தானம் இருக்க ,சசிகுமாரை எப்போதுமே தண்டச்சோறு, வெட்டி ஆபீசர் என்று கலாய்க்கும் குடும்பம்.
பார்த்தவுடனே காதல், அதன் பின் அவளை எண்ணி மருகி மருகி காதலிக்கும் நாயகி. இப்படியே கதை போக ஒரு கட்டத்தில் தன உயிராய் நேசிக்கும் தியேட்டரை தொடர்ந்து நடத்த சிக்கல் ஏற்படுகிறது.
இப்படி ஒன்னத்துக்கும் உதவாத தியேட்டரை வைத்திருக்கும் இவருக்கு எப்படி பொண்ணு கொடுக்கிறது என்று காதலுக்கும் இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். என்ன செய்வது என்று திகைத்து நிற்கும் சசிகுமாருக்கு தன் பால்ய நண்பன் சென்னையில் பெரிய இயக்குனர் என்று தெரிய வருகிறது.

இதனைத் தொடர்ந்து தன் நண்பனின் உதவி கேட்டு சென்னை செல்கிறார் சசிகுமார்.

நண்பனை தேடி சென்னை வரும் ஹீரோ, ஒரு சினிமா கம்பெனியில் தன் சிறுவயதில் நடந்த உண்மை சம்பவங்களை சொல்லி ஏதேட்சையாக இயக்குனராகிறார்.
பின்பு அதே நண்பனுக்காக இந்த கதையே விட்டு தருகிறார், கூடவே தான் நேசித்தே காதலையும் தாரை வார்க்கிறார் சசிகுமார்.
எல்லா விக்ரமன் சார் படத்தில் வர்ற மாதிரி கடைசி வரை தான் யார் என்று நண்பனிடம் சொல்லாமல் லாலாலா லாலா லாலாலா விக்ரமன் டைப் சர்ப்ரைஸிங் படம் இது.
இன்றைய காலகட்டத்தில் பழைய செகண்ட் ஷிபிட் சினிமா தியேட்டர் நடத்தி வருவது எவ்வளு கஷ்டம் என்று நகைச்சுவையாகவும் மற்றும் யாதர்த்தமாகவும் காட்டி இருப்பது பாராட்டுக்குரியது.
வழக்கம் போல நண்பர்களுக்காகவே வாழும் நாயகனாக சசிக்குமார். இந்த ஒரு அடிப்படை விஷயத்தை சொல்லியே எல்லோரும் இவர்கிட்ட கால்ஷீட் வாங்கிடறாங்க போல.

இந்த படத்தில் வித்தியாசம் என்றால் சசிகுமரே அல்ட்ரா மார்டனாக காட்டி இருப்பது தான், கிராமத்து பாணியில் பார்த்து பழகி போன நமக்கு இது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது.

நாயகி லாவண்யா அழகாக இருக்கிறார். மற்ற படி சொல்றதுக்கு ஒன்னும் இல்லை, ஆனால் படத்தில் சொல்லும்படியாக சில காட்சிகள் என்றால் பார்த்தவுடன் காதலில் விழுந்தாலும் சில இடங்களில் சசிகுமார் காதலைவிட தியேட்டரை பெரிதாக மதிப்பு தருவது ஓரளவு டச்சிங்காகவே இருந்தது. சந்தானம் ஒன்லைனர்கள் என முதல்பாதி ஓகே ரகம்.
இரண்டாம் பாதி சூரியின் அலப்பறை ஆரம்பம் ஆகிறது, சென்னையில் நாம் பார்த்த பல உதவி இயக்குனர்களின் பிம்பமாக சூரி. அப்படியே இயல்பாக நடித்துள்ளார். நாம் எதிர்பார்த்தது சந்தானம், சூரி இருவருக்கும் இடையே நிறைய காட்சிகளைத்தான். ஆனால் இருவரையும் ஒரு இடத்தில் கூட ஒன்று சேர்க்கவில்லை இயக்குனர். இதில் இருந்தே தெரிகிறது இயக்குனர் பாடு உஷார் என்று.
பிறகு அரங்கில் பிட்டு படம் ஓட்டியாவது பணம் சம்பாதித்து தியேட்டர் ஊழியர்களுக்கு உதவ நினைக்கும் சந்தானம், அந்த இயக்குனர் நண்பரின் தியாகம், தியேட்டர் வரி கட்டாமலேயே திரும்பக் கிடைப்பது, தங்கையின் சென்ட்டிமெண்ட், அம்மா அப்பாவின் கண்ணீர் எல்லாமே பக்கா நாடகத் தன்மையுடன் படம் முழுக்க ஒரே கொட்டாவி டா சாமி என்று முடிவுக்கு வருகிறது.
தேவிஸ்ரீ பிரசாத்ரிப்ர இசையில் பாடல்கள் பழைய ராகம், பின்னணி இசை 90களில் கேட்டு அதே எஸ்.ஏ.ராஜ்குமார் ஸ்டைல், ஒளிப்பதிவு ஒரு சில இடங்களில் நச்.

சாக்ரட்டீஸ் தன் முதல் படைப்பிலேயே எந்தவித விரசமும் இல்லாமல் குடும்பத்தோடு பார்க்க கூடிய படம் எடுத்தற்காக அவரை பாராட்டலாம்.

ஆனால் வெயில், குசேலன் போன்ற படங்களின் தாக்கம் இருப்பதும் சோர்வை அடையவைக்கிறது, மக்கள் இளம் இயக்குனர்களிடம் எதிர் பார்ப்பது புதுமையான விஷயம் தான் புரிஞ்ச எடுங்க பாஸ்.
படம் பார்த்து முடித்துவுடன் எல்லோருக்கும் தோன்றும் ஒரு விஷயம், இந்த படத்தை “பிரம்ம தேவன்” பார்த்தால் என்னவாகும்?
சற்று தடுமாறி தடிக்கி விழுந்து “அட மதி கெட்ட உலகம் இன்னும் மாறவில்லையே” என்றுதான் நினைப்பார்!
ஆக மொத்தத்தில் பிரம்மன் பழகிப்போன புளிச்சமாவு.
நடிகர்: சசிகுமார்
நடிகை:லாவண்யா திரிபாதி
இயக்குனர்:சாக்ரடீஸ்
இசை:தேவி ஸ்ரீபிரசாத்
ஓளிப்பதிவு:ஜோமோன் டி ஜான் / பைசல் அலி
நன்றி லங்காஸ்ரீ  சினிமா 


No comments: