எழுதி !எழுதி !! - கலைமகள் ஹிதாயா ரிஸ்வி -இலங்கை

.


பாரமிருக்காது என்று நினைத்துத்தான் 
ஒவ்வொரு சுமைகளையும் தூக்குகின்றேன்
வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை !
வாழ்க்கையின்  தத்துவம்  படிப்பினையாகமாறிப் போகின்றது .

தூசுகள் பறக்கின்ற புழுதி மண்ணில்  நின்று 
 தலைக்கணத்தின் -
பெருமைகள் புகழ் பாடுகின்றன .
மனித நேயத்தை புதைத்து விட்டு 
பொறாமை உணர்வுகள்  
தங்கள் கண்களை தாமே மறைத்துக் கொண்டு விழிகளை தடவுகின்றன
  
வஞ்சகத் தனத்தை வளர்த்துக் கொண்ட
பிடிவாதம் தன் அசிங்கத் துணியை 
அகங்காரமாய் மொட்டைத் தலையில் 
உலரப் போடுகின்றது.
போட்டி பொறாமைகளில்உற்றெடுத்த  
குருதித் துளிகளில்  
கசிந்து கசிந்து 
எழுதி எழுதி 
திறமை சாலிகளின் படைப்புக்களில் 
விமர்சனமாய் விழுகின்றது . 

குழிதோண்டிபுதைப்பது கற்றறிந்தவர்கள் 
என்றால்
வளர்கின்ற படைப்பாளிகள் 
திறமைசாலிகளை இனம் காட்டி  விடுவார்களா ..?

SK .RISVI @GMAIL .COM 

No comments: