சிட்னி முருகன் ஆலயத்தின் கொடியேற்றம்

.
படப்பிடிப்பு  ஞானி 

சிட்னி மாநகரில்  Mays Hill ல் அமைந்து உள்ள சிட்னி முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்வசம் சனிக்கிழமை (08.03.2014) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது . 
10 நாட்கள் நடைபெறும்  இந்த திருவிழாவை  சிட்னி முருகன் ஆலயத்தின் சிவாச்சாரியராகிய 
சிவஸ்ரீ லவக்குருக்கள்  ஆலய சிவாச்சாரியர்கள்  சூழ்ந்திருக்க கொடியேற்றி  ஆரம்பித்து வைத்தார் .

நாதஸ்வர தவில் இசையை   இசைக்   கலைஞர்களான சு.பாலமுருகன், பிரபல நாதஸ்வர வித்துவான் பஞ்சமூர்த்தியின் புதல்வன் குமரேசன், தட்சணாமூர்த்தியின் புதல்வன் உதயசங்கர், பாலமுருகனின் சகோதரன் சு.செந்தில்நாதன் ஆகியோர்  வழங்கி முருகன் அடியார்களை  இசை வெள்ளத்தில் ஆழ்த்தினார்கள் .

சிட்னி முருகன் மார்ச் மாதம் 16ம்  திகதி ஞாயிற்றுக்கிழமை தேரேறி திருஉலா வரும் காட்சி இடம்பெற இருக்கிறது. ஆறுமுக சாமி வள்ளி  தெய்வானை சமேதராய் தேர் ஏறும் காட்சியை காண்பதற்கு 




ஆயிரக்கணக்கான மக்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்க படுகிறது . அவுஸ்திரேலியாவின் பிற மாநிலங்களில் இருந்தும்  மக்கள்  வருவார்கள்  என்பது குறிப்பிடத்தக்கது . 17ம்  திகதி தீர்த்தத் திருவிழாவும்  18ம்  திகதி  பூங்காவனத் திருவிழாவும் ஒவ்வொரு வருடமும்போல் சிறப்பாக நடை பெறும்  என எதிர்பார்க்க படுகிறது .



கொடியேற்ற திருவிழாவின் வசந்த மண்டப பூசையின் போது 10 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் தேவாரம் பாடியது மிகவும் அருமையாக இருந்தது. ஒரு சில இடங்களில் தவறாக பாடியபோதும், பாடிய விதம் பாடிய குரல் என்பன மக்களை கவர்ந்து கொண்டது. இப்படியான குரல் வளத்தோடும் ராகத்தோடும் பாடக்கூடிய இளம் பிள்ளைகளுக்கு சந்தர்ப்பத்தைக் கொடுத்து பெரியவர்கள் ஒதுங்கி நின்றால்  இங்கு வளரும் பிள்ளைகளும் எமது சமயம் எமது மொழி என்பனவற்றை பின்பற்றி எதிர்காலத்திலும் அது  பாதுகாக்கப்படும்.













No comments: