சிட்னி முருகன் ஆலயத்தின் மூன்றாம் திருவிழா

.2 comments:

Ramesh said...

தமிழ்முரசு முருகன்கோயில் கொடியேற்றத்தைப்பற்றி எழுதியபோது தேவாரம் பாடுவதற்கு இளம் பிள்ளைகளை விடவேண்டும் என்று எழுதியிருந்தது. பெரியவர்கள் கொஞ்சம் ஒதுங்கிக்கொண்டு இளம் சமுதாயத்திடம் இவற்றை கையளிக்க வேண்டிய கடமை உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். தொடர்ந்து நமது சமயம் முன்னெடுக்கப்பட வேண்டுமென்றால் இளம்பிள்ளைகளுக்கு இப்படியான வேளைகளில் சந்தர்ப்பத்தை தாராளமாக கொடுங்கள். பெரிசுகள் கொஞ்சம் ஆறுதலாக இருங்கள். சில பெரியவர்கள் பாடும்போது சொற்களே விளங்குவதில்லை. அவ்வளவு கஸ்டப்பட்டு பாடவேண்டும்தானா. இளையோருக்கு வழிவிட்டு நிற்பதே ஆண்டவனுக்கு முன்னால் ஆயிரம் பாடலை பாடிய புண்ணியத்தை தரும். இனிமையாக பாடக்கூடிய இளையவர்களை தேடி பாடவையுங்கள். ஒவ்வொரு பகுதியிலும் பாடக்கூடிய நிறைய பிள்ளைகள் இருக்கின்றார்கள்.

சாமி காவுவதற்கும் பல இளைஞர்கள் முன்வந்திருப்பதை பார்க்க மகிழ்வாக இருக்கிறது.சில பழையவர்கள் இன்னும் காவுதடியை கட்டிப்பிடித்துக்கொண்டு நிற்பதையும் காணக்கூடியதாகத்தான் உள்ளது. அவர்களும் புதிய இளையவர்கள் வரும்போது விட்டுக்கொடுத்து அவர்களை கோவிலுக்கு விருப்போடு வர அனுமதியுங்கள். எதையும் சமுதாய நோக்கோடு பாருங்கள்.
கொடி ஏற்றும்போது மூன்று கயிறுகள் ஆணவம் கன்மம் மாயை என்று கட்டப்படுகின்றது. அது கட்டப்பட்டள்ளது என்று நினைத்து அவை எமக்குள் இல்லைஎன்று எண்ணி செயற்படுவோம்.

putthan said...

[quote]கொடி ஏற்றும்போது மூன்று கயிறுகள் ஆணவம் கன்மம் மாயை என்று கட்டப்படுகின்றது. அது கட்டப்பட்டள்ளது என்று நினைத்து அவை எமக்குள் இல்லைஎன்று எண்ணி செயற்படுவோம் [quote]

நான் மாறிவிளங்கிபோட்டன்..முருகனுக்குதானே கொடியேற்றம் முருகன் அந்த மூன்றையும் [ ஆணவம் கன்மம் மாயை] தவிர்க்க வேண்டும் என்று....என்னை மாதிரி கனசனம் மாத்தி யோசனை பண்ணிபோட்டுதுகள் போல...கி .கி