.
Aussie Unity Real Estate இன் உரிமையாளர் ஈசன் வேலுப்பிள்ளை அவர்கள் இன்று காலை 7.30 மணியளவில் பென்ரல் கில்லில் இருக்கும் அவரது வியாபார நிலைத்திற்கு சென்றபோது. கத்தியால் குத்தப்பட்டுள்ளார் என்றும் யாரும் காணாத நிலையில் அதிக குருதிப்பெருக்கு ஏற்பட்டதாகவும் அதன் பின் வெஸ்மீட் ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லப்பட்டும் சிகிச்சை பலன் அளிக்காது இறந்துள்ளார் என்றும் குறிப்பிடப்படுகின்றது.
இவரைக் கத்தியால் குத்தியவர் என்று 30 வயது மதிக்கத்தக்க ஒருவரை பரமட்டா பொலிசார் கைதுசெய்துள்ளார்கள். இவர் வெள்ளை இனத்தைசேர்ந்தவர் என்று உத்தியோக பூர்வமற்ற செய்திகள் குறிப்பிடுகின்றது.
புதிதாக வந்த பல இளைஞர்களுக்கு இவர் மிகவும் உறுதுணையாக இருந்து உதவிகள் புரிந்துவரும் ஒருவர் என்றும் எல்லோருடனும் அன்பாக பழகும் சுபாவம் உடையவரென்றும் பலர் குறிப்பிட்டுள்ளார்கள்.
சிட்னி முருகன்கோவில் திருவிழாவிற்கு செல்வதற்காக காலையில் நேரத்துடன் வியாபார நிலையத்தை திறந்து பணியாற்றி விட்டு செல்வதற்காகவே அந்த வேளையில் சென்றதாக குறிப்பிடப் படுகின்றது.
20 வருடங்களுக்கு முன்பு ஒஸ்ரேலியா வந்த இவர் கெலிவில்லில் வாழ்ந்து வந்தவர் என்றும் தமிழ் சமூகத்திற்கு பல வகைகளிலும் உதவி புரியும் ஒருவர் என்றும் குறிப்பிடப்படுகிறது.
இவரது வியாபார நிலையத்திற்கு அண்மையில் உள்ள பழக்கடையில் பணிபுரியும் ஒருவர் , தான் இவருடன் வழமையாக உரையாடுவதாகவும் மிகவும் நல்ல மனிதர் என்றும் பொலிசாருக்கு குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைது செய்யப்பட்டவர் மேரிலாண்ட்ஸ் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த சம்பவம் பற்றி யாருக்காவது தகவல் தெரிந்தால் உடனடியாக குற்றத்தடுப்பு பொலிசாரை தொடர்பு கொண்டு தகவல் தரும்படி கேட்டுள்ளார்கள் தொலைபேசி ,இலக்கம் 1800 333 000,

No comments:
Post a Comment