தியாக தீப நினைவு அஞ்சலி


அவுஸ்திரேலிய தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் மெல்பேண், சிட்னி யில் நடாத்தப்படும் தியாகி தீலீபனின் 25ம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வுகள் பற்றிய அறிவித்தல்
 வணக்கம்!
அவுஸ்திரேலியா மெல்பேர்னில், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 29ம் திகதி சனிக்கிழமை அன்று மாலை 6 மணிக்குSt. Jude community Hall, 51 George street, Scoresby (Melway Ref: 72 G5) இலும், சிட்னியில், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 30ம் திகதி, ஞாயிற்றுக்கிழமை மாலை 6:00 மணிக்கு Homebush Boys High School மண்டபத்திலும் -  தியாகி தீலீபனின் 25ம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற ஏற்பாடாகியுள்ளது. உணர்வுபூர்வமாக நடைபெறவுள்ள இந்த நிகழ்வில் சிட்னி, மெல்பேர்ன் வாழ் அனைத்து உறவுகளையும் வருகை தந்து பங்கெடுத்துக் கொள்ளுமாறு அவுஸ்திரேலியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின், கலை பண்பாட்டு கழகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர். இந்நிகழ்வுகள் பற்றிய அறிவித்தல்கள்(Jpg, mp3) இத்துடன் இணைத்து அனுப்பப்பட்டுள்ளது. தயவுகூர்ந்து இவ்வறிவித்தலை உங்கள் ஊடகங்களினுாடாக வெளியீட்டு தகுந்த ஆதரவை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள். அத்துடன் உங்களிற்கு தெரிந்த தமிழ் உறவுகளிற்கும் தெரியப்படுத்துமாறும் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
மெல்பேண் சிட்னி நிகழ்வுகளில் தியாகதீபம் திலீபன், வான்படைத் தளபதி கேணல் சங்கருக்கு மலர்வணக்கமும், சுடர் வணக்கமும், எழுச்சி நடனங்கள், வில்லுப்பாட்டு, தாயக எழுச்சிகானங்கள், சிறப்புரை போன்ற நிகழ்வுகள் நடைபெறவுள்ளன.
நன்றி.

No comments: