ஸ்ரீ நாரத பக்தி சூத்திரங்கள்


படப்பிடிப்பு ராஜேந்திரன்

ஸ்ரீமத்  பாகவதம், ஸ்ரீமத் இராமயணம், ஸ்ரீநாரத பக்தி சூத்திரங்கள் பக்தி வெள்ளத்துக்கு கலங்கரை விளக்காக விளங்கும் மிக உன்னதமான பொக்கிஷங்கள். இவற்றை நாம் நேரடியாகப் படித்து விளங்கிக் கொள்ள இயலாது. பொக்கிஷப்பெட்டகங்களைத் திறவுகோல் போட்டுத் திறந்து காட்டினால்தான் அவற்றுளுள்ள மதிப்பான தங்கம், வைரம், மாணிக்கம் முத்து ஆபரணங்கள் முதலியவற்றைக் காணலாம். அதேபோலத்தான் எமது சமய சாஸ்திர நூல்களை இறை அனுபவம் உள்ள ஞானசாரியர்கள்தான் எமக்கு விளக்கிக் கூறலாம். இந்த வகையில் ஆச்சாரியார் ஸ்ரீசச்சிதானந்தசாயியும் எமக்கு நாரத பக்தி சூத்திரங்களை சிட்னி மெரிலன்ட்சில் இரு நாட்கள் விளக்கிக் கூறி பக்தி வெள்ளத்திலாழ்த்தி விட்டார்.

பக்தி சாம்ராஜ்யத்தில் ஒளிர்விட்டுப் பிரகாசிக்கும் தாரகை தேவரிஷி நாரதர். எங்கும் வீணையுடன் நாராயண நாம சங்கீர்த்தனையுடன் சஞ்சாரம் செய்வார். இவர் பக்தியை விளக்க பத்தி சூத்திரத்திரங்களைத் தந்துள்ளார். இவ்வாறே வேதவியாசர் பிரம்ம சூத்திரத்தையும், பதஞ்சலிமுனிவர் யோக சூத்திரத்தையும் தந்துள்ளனர். இவையெல்லாம் சமஸ்கிருதத்தில் “கடுகைத்துளைத்து ஏழ் கடலைப் புகுத்தியது” போல் வெகு சுருங்கக் கூறி நிற்கின்றன. (   bullet points ஆக) இவற்றை அகராதி கொண்டு அறிய முடியாது. ஆழந்த ஞானமும் இறை அனுபவமுமுள்ளவர்களே தெளிவாக விளக்கலாம்.
நாரதமுனிவர் பிரம்மரின் மானசீகப் புத்திரன், ஞானிகளுள் மேலான ஞானி, யோகிகளுள் முதன்மையான யோகி, பக்தர்களுள் மிக மேன்மையானவர். வேதங்களை வகுத்தும் உபநிடதங்கள், பிரம்ம சூத்திரம், பதினேழ் புராணங்கள் முதலிவற்றை ஆக்கி கலிகாலத்தில் மக்களை தார்மீக வழிப்படுத்முனைந்த வியாச பகவான் மன நிறைவுருது காணப்பட்டபொழுது அங்கு நாதரிஷி தோன்றினார். இறைவன் லீலைகள் கொண்ட பக்திக்கு இலக்கியமாக ஸ்ரீமத் பாகவத்தைப் பாடும் படி வழிப்படுத்தி வியாச பகவானுக்கு குருவானார் நாரகமுனி. வால்மீகி முனிவர்க்கு தான் ஒரு காவியம் பாடவேண்டுமென ஒரு உள் உந்துதல் ஏற்பட்டது. யாரைப்பற்றிப் பாடுவது என்ற சிந்தனையிலாழ்ந்த சமயம் அவர்முன் தேவரிஷி நாரதர் தோன்றினார். மனிதருள் தர்மவானாக குணவானாக மாணிக்கமாக யாராவது உள்ளனரா என நாரதரிஷியிடம் வினவினார். நாரதமுனி மிகவும் சிறப்பான தர்மவானாக, குணவானாக எல்லா வகைச் சிறப்புக்களும் பொருந்திய ஸ்ரீராமரைப் பற்றி விளக்கிக் கூறி பக்திக்கு இலக்கியமாகும் இராமாயணத்துக்கு வழிவகுத்துத் தந்தார். பக்தன் இலட்சணம், பகவானுக்கு பக்தர்களுக்கு முள்ள தொடர்பு, பகவானை பக்தர்கள் அடையும் வழி என்பவற்றை அழகாகக் காட்டும் இராமயணம் தோன்ற வழிவகுத்தார். இங்கும் வால்மீகி மனிவர்க்கு குருவாயமைந்தவர் தேவரிஷி நாரதர்தான்.


சிறு பாலகன் இளவரசன் துருவன்; தகப்பனது அன்புக்காக ஏங்கினான். அது மறுக்கப்பட்டதால் காடு நோக்கித் தவஞ்செய்யப் புறப்பட்டான். தேவரிஷி நாரதர் குறுக்கிட்டு அவன் மிகவும் சிறுவனாயிருப்பதால் காட்டு மிருகங்கள் கொடிய விலங்குகள் பற்றிக் கூறி தாயிடம் திரும்பும்படி கூறினார். தவஞ் செய்ய அவனது திடசஙகர்ப்பத்தைக் கண்டு அவனுக்கு தவஞ் செய்ய உறுதுணையாக நாராயண மந்திரத்தையும் உபதேசித்தும் சென்றார். துருவன் கடுந்தவஞ் செய்து ஸ்ரீமந் நாராயண தரிசனம் பெற்று பேரொளியோடும் புகழோடும் வாழ்ந்தான். துருவனுக்கும் தேவரிஷி நாரதர் தான் குரு.  புpரகலாதன் தெய்வீகக் குழந்தை. துன் தாயிற்றின் வயிற்றிலிருந்தபோதே நாரதமுனிவரின் உபதேசங்களைப் பெற்று இறைபக்தி நிறைந்த குழந்தையாகப் பிறந்தான்.  தகப்பன் இரண்யகசிப்புவோ அசுர சர்க்கரவர்த்தி. பிரகலாதனோ நாராயண செபத்துடனிருந்தான். இதனால் பிரகலாதனைக் குருகலத்துக்கு அனுப்பி வைத்தார். இரண்யகசிப்ப தன்னை வணங்கும்படியும் தனது நாமத்தையே சொல்ல வேண்டுமென்று எல்லோருக்கும் கட்டளையிட்டான். ஆனால் பிரகலாதன் நாராயண நாமத்தை பக்தியோடு செபித்துக் கொண்டிருந்தான். இதனால் பல கொடூரமான தண்டனைகள் அவனுக்குக் கொடுப்பட்டன. மலையுச்சியிலிருந்து பள்ளம் நோக்கித் தள்ளியும், பாம்புகள் மத்தியில் விட்டும், எரிக்கக்கூட முயற்சி செய்தும் நாரயயயணனது அருளால் காப்பாற்றப் பட்டான். சினங்கொண்ட அசுரசர்க்கரவர்த்தி நாராயணர் எங்குள்ளார்? இந்தத்தூணிலுமுள்ளாரா என் அத்தூணை ஓங்கி உதை;தான். நாரயணர் நரசிங்க ரூபராக வெளிவந்து இரண்யகசிப்புவைக் கொன்றார். அவரது உக்கிர கோபத்தை எவராலும் தணிக்கஇயலவில்லை. பிரகலாதன் அவர் அண்மையில் செல்ல பிரகலாதனை தன் மடியிலமர்த்தினார். பக்தனின் ஸ்பர்ஸத்துடன் பகவானின் கோபம் தணிந்தது. இத்தகைய பிரகலாதனுக்கும் தேவரிஷி நாரதர் தான் குரு.
அண்மைக் காலங்களில் கூட பக்தியில் திளைத்துப் பாடிய புரந்தரதாசர், அன்னமாச்சாரியார், தியாகராஜர் போன்றவர்களும் கூட தேவரிஷி நாரதரைத்தான் குருவாகக் கொண்டிருந்தார்கள். கடந்த நூற்றாண்டில் வாழ்ந்த ஸ்ரீ இராமகிருஷ்ணர், ஸ்ரீ இரமண மகரிஷி பக்தியில் திளைத்த நன் முத்துக்கள். தடாதரர் என அழைக்கப் பட்ட பிராமணச் சிறுவன் காளிகோவிலுக்கு பூசாரியாக நியமிக்கப்பட்டான். பூசாரி ஒருவர் வரும் மக்களுக்காகத்தான் என்னவோ பூசை செய்வது வழக்கம். ஆனால் இவரோ காளிதேவிக்குத்தான் பக்தியோடு பூசை செய்வார். காளி தரிசனத்திற்காக ஏங்கி நின்றார். காளிதேவியைப் பார்த்துக் கொண்டேயிருப்பார். எப்படிப் பூசை செய்தால் தரிசனம் கிடைக்குமென்று சொல்லிக் கொடுக்கும்படி காளிமாதாவையே கேட்பார். இறைதாகம் அதிகரித்துக் கொண்டே வந்தது. இந்தப் பரம பிரேமையைத்தான் நாரதரிஷி பக்தியென்கின்றார்.


கடந்த நூற்றாண்டில் வசித்த ரமணமகரிஷி ‘அண்ணாமலை’ என்ற சொல்லைக் கேட்டவுடனேயே அங்கு செல்லவேண்டும், இறை தரிசனம் பெறவேண்டும் என்ற அவாவால் உந்தப்பட்டு பதினாறாம் வயதில் எல்லாவற்றையும் துறந்து திருவண்ணாமலை நோக்கிப் புறப்பட்டு விட்டார். அவரது சொற்களில்
“பெயர் நினைந் திடவே பிடித்திழுத் தனையுன்
பெருமையா ரறிவா ரருணாசலா”
அண்ணாமலையானிடம் சரணடைந்து ஆத்ம விசாரத்திலிறங்கினார்.

அண்ணா மலையா யடியேனை
    யாண்ட வன்றே யாவியுடற்
கொண்டா யெனக்கோர் குறையுண்டோ
    குறையுங் குணமு நீயல்லா
லெண்ணே னிவற்றை யென்னுயிரே
    யெண்ண மெதுவோ வதுசெய்வாய்
கண்ணே யுன்றன் கழலிணையிற்
    கரதற் பெருக்கே தருவாயே

என்ற அவரது பாடல் சரணாகதியையும் காதற்பெருக்கையும் காட்டுகின்றதல்லவா. இதுதான் பிரேம பக்தி.
குருவாயூரப்பனை ஒருமுறை பார்த்தவர்கள் என்றுமே மனதில் நிறுத்திவிடுவார்கள். அவ்வூரில் குரூரம்மா என்ற சாதாரண ஏழைப் பெண் ஒருவரிடம் ஒரு சிறு பையன் அவர்; கண்களைப் பொத்தியும் குறும்புகள் பல செய்தும் விளையாடுவானாம். ஒரு நாள் உணவுத் தானியத்தை பதரிலிருந்து மிகக் கவனமாக நீக்கிக் கொண்டிருக்கும்பொழுது அச் சிறுவன் ஓடிவந்து எல்லாவற்றையும் ஓன்றாகக் கிளறிவிட்டு ஓடிவிட்டான். அவள் மீண்டும் திரும்பத்தன் வேலையைத் தொடங்கிச் சிறிது நேரத்தில் மீண்டும் வந்து குறும்புததனமாக எல்லாவற்றையும் கிளறி ஒனறாக்கிவிட்டு ஓடிவிட்டான். இப்படியே மீண்டும் மீண்டும் குறும்புச் செயல் தொடர அம்மாது பையனை வசமாகப் பிடித்துத் தூக்கிக் கொண்டு போய் ஒரு பெரிய பானைக்குள் விட்டு விட்டு குதித்து வெளியில் வராமலிருக்க பாவனையிலில்லாது ஒட்டறை தூசி அடியில் படிந்திருந்த இன்னெரு பெரிய பானையை மேல் வைத்து மூடிவிட்டு தனது வேலையை நிம்மதியாகத் தொடர்ந்தார். எட்டி எட்டி பானையில் தட்டும் சத்தம் கேட்டும் அவள் திறக்கவில்லை. சிறிது நேரம் செல்ல இவளும் தனது வேலையில் பெரும்பாகம் முடியும் தறுவாயில் பாiயில் தட்டும் சத்தமெதுவுமே கேட்காததை உணர்ந்து ஓடிப்போய் மேலிருந்த பானையை மௌ;ள எடுத்துப் பார்த்தாள். அச்சிறு குழந்தை ஒட்டறை படிந்த கோலத்தில் களைத்துச் சுருண்டுகிடப்பதைப் பார்த்துப் பதறிப் போய் தூக்கி வெளியில் விட அவனோ மீண்டும் எல்லாவற்றையும் ஒன்றாகக் கிளறி ஒன்றாக்கி விட்டு ஓடிவிட்டான்.
வில்மமங்களம் எனும் சுவாமி ஆழ்ந்த தியானத்திலிருக்கும் பொழுது பாலனாகக் கிருஷ்ண தரிசனம் பெற்று தன்னை மறந்து ஆனந்தமாக இருப்பார். ஆனால் முன் குறிப்பிட்ட தினம் கிருஷ்ண தரிசனம் கிட்டவில்லை. அவர் மீண்டும் தியானத்திலிமர்ந்தார். நீண்ட நேரத்தின் பின்னர்தான் திட்டுத்திட்டாக கருந்தூசி படிந்த நிலையில் கிருஷ்ண தரிசனம் கிடைக்கப் பெற்றாராம்.
‘பக்தி வலையில் படுவோன் காண்க’
இறைவனையடைதலே மனித வாழ்க்கையின் குறிக்கோள். செயல் எதுவும் செய்யாது மனிதன் ஒருவன் இயங்க முடியாது. கடவுள் இந்த அழகிய உலகத்தையும் படைத்து, எல்லாச் சீவராசிகளையும் தன்னையுணரக் கூடிய மனிதனையும் படைத்துள்ளான். ஆனால் மனிதன் தன்னையுணராமல் இன்பம் வெளி உலகத்தில்தான் உள்ளதென மயங்கி சிந்திக்கவே நேரமில்லாது கடுமையாக உழைக்கின்றான். காலப்போக்கில் மரணமடையும் போது ஏதொன்றுமில்லாதுதான் போகின்றான். ஆனால் தான் செய்த கருமங்களால் வரும் விளைவுகளாகிய ஒருபெரிய மூட்டையை இனிவரும் பிறப்புக்களிலனுபவிக்கக் கொண்டு செல்கின்றான். மனிதனைக் கடைத்தேற்ற அதாவது இறைவனையடைய, தன்னை உணர பிறவித்தளையை வேரறுக்க சாஸ்திரங்கள் பல பாதைகளைக் காட்டி நிற்கின்றன. கர்ம மார்க்கம் யோக மார்க்கம், ஞானமார்க்கம், பக்தி மார்க்கம் என்பன முக்கியமானவையாகும். உண்மை, தர்மம், அகிம்சை, சாந்தி, அன்பு ஆகிய குணங்களையே கைக்கொள்ள வேண்டும். தனக்குக் கிடைத்தவற்றைக் கொண்டு திருப்தியடைய வேண்டும். மனித இப்படி வாழ்வானாயின் பக்தி வழியில் இறைவனை தன்னுள்ளேயே உணரலாம் என சாஸ்திரங்கள் கூறுகின்றன. அவதாரங்களும் இதையே உணர்த்தி நிற்கின்றனர். கர்மம், யோகம், ஞானம் என்பவற்றுக்கு சாதனைப் படிகள் பல உண்டு. ஆனால் பக்தி மார்க்கத்தில் தன்னையே இறைவனுக்கு அர்ப்பணிக்கும் நிலை வந்து விட்டால் இறைவன் தானே எல்லாவற்றையும் வழி நடத்துவான்.
பக்திக்கு விளக்கம் பலர் கொடுத்துள்ளனர். பராசரர் தெய்வங்களுக்கு அபிஷேகம், ஆராதனை, அலங்காரம் நைவேத்தியம் அன்போடு மதுரமான பாவனையோடு செய்தலே பக்தியென்கின்றார். கேரளாவில் குருவாயூரப்பனுக்கு நம்பூதிரி பரமபக்தியோடு பூசை செய்வார். ஒரு நாள் காலைப் பூசை முடிந்ததும் அயலூருக்கு அவசரமாகச் செல்லவேண்டியிருந்தது. மதிய பூசைக்கு முன் திரும்பலாமென்று போனவர்தான் ஆனால் முடியவில்லை. பதைத்துவிட்டார். பிந்திவந்த நம்பூதிரி அவர்கள் வெகுவேகமாக நைவேத்தியங்களைக் கொண்டு போய் பார்க்க கிருஷ்ணரின் வயிற்றில் கட்டியிருந்த கயிறு வயிறு சுருங்கியதால் கழன்று கீழேகிடந்ததாம். பூசையை முடித்து நைவேத்தியம் பரிமாறியபின் அந்தக் கயிற்றைப்போட அது அளவாக நின்றுவிட்டதாம். அப்படியான பாவனையோடு கூடிய பூசையே பக்தி என்கின்றார். கர்காச்சாரியாரும் சாஸ்திரங்கள், உபந்நியாசங்கள் முதலியவற்றை கவனமாக் கேட்டு அனுபவிப்பதே பக்தியாகும் என்கின்றார். சாண்;டில் யரும் பக்தி சூத்திரம் எழுதியுள்ளார். தன் ஆத்மாவையே உணர்ந்து வணங்குதலே பக்தியாகும் என்கின்றார்.
பரீஷித் சபிக்கப்பட்ட பொழுது சுகரிஷி பகவான் லீலைகளையும் பக்தர்களின் பெருமைகளையும் விளக்கும் ஸ்ரீமத் பாகவத புராணத்தை விளக்கிக் கூற ஒரு முகப்பட்டுக் கேட்டு பக்தி பரவசமடைந்து முக்தியடைந்தார். பக்தியை விளக்கிய நாரதர் பரம பிரேமையுடன் எந்நேரமும் இறைவனை வணங்குதலே பக்தியென்றார். தைலதாரைபோல் இடைவிடாதிருக்கவேண்டும்.  எல்லாவற்றையும் இறைவனுக்கே அர்பணித்துவிடவேண்டும். மறக்க நேரிட்டால் பெரும் வியாகூலமடைந்து எப்படி மறக்கலாம் என பெரிய தாபம் மேலிட்டு தன்னையே தண்டித்து இறைவனை உண்மையான அன்போடு வணங்குதலே பக்தியென்றார்.


ரிஷிநாரதர் தந்த பக்திக்கு இலக்கணமாக வாழ்ந்தவர்கள்தான் விரஜபூமியில் வாழ்ந்த கோபிகைள். எந்நேரமும் கிருஷ்ணர் சிந்தனைதான். தத்தம் வேலைகளை, கடமைகளை மனைவியாக, தாயாக, மருகியாக எதுவானாலும் கிருஷ்ணனுக்கு அர்ப்பணமாகவே செய்தார்கள். கிருஷ்ண லீலைகளோ அனந்தம். ஒரு நாள் முன்னிரவு நேரத்தில் குழலோசை கேட்டது. கோபியர் எல்லா வேலைகளையும் அப்படியே விட்டு விட்டு குழலோசேகேட்ட இடம் நோக்கி யோடினர். கிருஷ்ணன் அவர்களைக் கடிந்த கொண்டார். எமக்கெல்லாமே நீதானே என்று சரணாகதி பாவத்தில் அவர்கள் கூறி நிற்க அவர்களுடன் விளையாடிய கண்ணன் திடீரென மறைந்துவிட்டார். எங்கும் தேடி பலவாறாகப் புலம்பிய கோபிகள் ஒரு கீதமே பாடினார்கள். கண்ணன் வரவில்லை. இறுதியில் கண்ணனைப் பற்றிச் சிந்திக்கத் தொடங்கி இருட்டில் காட்டில் எங்களிடமிருந்து ஒளிக்கப்போய் உனது மிருதுவான பாதங்களில் முட்கள் குத்துமே, கற்களில் பாதங்கள் அடிபட்டு நோகுமே என்று பாட உடனே கண்ணன் காட்சியளித்தான். கம்ச வதத்துக்கு மதுரை நோக்கி கண்ணன் பறப்பட்டபின் அவர்களுக்கு கண்ணன் நினைவு இன்னும் மேலோங்கிவிட்டது. சிறிது காலஞ் சென்றபின் கோபிகைகளின் பக்தியின் சிறப்பை உத்தவருக்கு உணர்ந்த அவரை பிருந்தாவனத்திற்கு அனுப்பிவைத்தான் கண்ணன். உத்தவர் கண்ணனின் உற்ற நண்பன். கண்ணன் உடுத்தி விலக்கிய உடுப்புக்களையே அணிபவர். கண்ணன் சாப்பிட்டு விட்ட மிகுதியையே உண்பவர். பிருந்தாவனத்தில் கோபிகைகள் நிலைகண்ட உததவர் அவர்களிடம் பெருமதிப்புக் கொண்டார். கோபிகைகளை விழுந்து வணங்க வேண்டும் அவர்கள் பாததூசிகளை தலைமேற் கொள்ள வேண்டுமென மதுரையில் கண்ணனைக் கண்டபொழுது கூறி நின்றார். பகவத் கீதையில் பரப்பிரம்மனான கிருஷ்ணன் தன்னை நாடி நான்கு வகையானவர்கள் வருவார்களெனக் கூறுகின்றனர்.
1    உலக சுகம் வேண்டுவோர்
2    நோயில் பீடிப்கப் பட்டோர்
3    இறைநாட்டமுடையோர்
4    ஞானியர்
முதல் இருவகையினரும் வணிக மனம் கொண்டவர்களாகத்தான் குறிப்பிடுகின்றனர். இறைவா நான் இன்னது செய்வேன், எனக்கு இதுதா என்றுதான் வணங்குகின்றனர்.


கிருஷ்ணன் பகவத்கீதையில் தன்னை பக்தியால்தான் அடையலாம் என்கின்றார். நாரதமுனி பரம பிரேமையே பக்தி என்கின்றார். பெரியோர்களிருந்த சபையில் துச்சாதனன் எனும் கொடிய அரக்ககுணம் கொண்டவனால் துகிலுரிய ஆரம்பித்த நிலையில் திரௌபதை திருதராஷ்டிரர், துரோனாச்சாரியார், பீஷ்ம பிதாமகர் எல்லோரையும் வேண்டியும் பலளளியாத பொழுது பிருந்தாவன துவாரகாவாசி என்று தீனமாக அழைத்தும் ஒரு உதவியும் கிட்டாத நிலையில் துகிலைப் பிடித்திருந்த கையையும் விட்டு ஹிருதிய நிவாசி, கோவிந்தா என ;கை கூப்பி சரணாகதியடைந்தவுடனே கிருஷ்ணன் வஸ்திரரூபத்தில் பெருகப்பெருக துச்சாதனன் களைத்து விழுந்தான். திரௌபதியும் காப்பாற்றப்பட்டாள். பக்தியின் உச்சம் சரணாகதி இதைத்தான் பகவான் பாபாவும் “ நான் இங்கிருக்கும் பொழுது ஏன் பயம்? என்று கூறுகின்றார்.
இராமர் என்ற பகவானுக்குப் பக்தர்கள் பலர்.இவர்கள் எல்லோரிலும் சிறப்பானவர்தான் அனுமான். ஒரு மாலையின் பதக்கம் போன்றவர். சீதையைக் காணாது தவித்த இராமருக்கு கடலைத் தாவிக் கடந்துபோய் சீதா பிராட்டியைக் கண்டு கணையாயைக் கொடுத்து அவரிடமிருந்து சூடாமணியைப் பெற்று இராமரிடம் கொடுத்து இராவண அழிவுக்குக்கு இராமர் முடிசூட்டுவிழாவுக்கும் பலபல அரிய வழிகளில் துணை புரிந்து இராமருடனேயிருக்கும் நிலையையும் பெற்றுவிட்டார். பக்தர்களுளெல்லாம் தலைமையான அனுமான்.
பக்தனுக்கு முதலில் பணிவு, தியாகம், மிகுந்த அன்பு வேண்டும். மனிதனாய் பிறந்தது இறைவனை எம்முள் உணர்ந்து, மீண்டும் பிறவாமல் முத்தியடைவதற்கே என்பதைத் திடமாக்கிக் கொள்ளவேண்டும். இறைவன் புகழை நாம சங்கீர்த்தனமாக, குணகீர்த்தனமாக, ரூபகீர்த்தனமாகப் பாடவேண்டும். பகவானில் பிரேமை தைலதாரையாக ஒழுகவேண்டும். நன்மக்களுடைய சேர்க்கையிலிருக்க வேண்டும். நான், எனது எனும் எண்ணங்கள் வராமல், எல்லாம் இறைவனுடைவை என்ற அர்ப்பணிப்புடன் கருமமாற்ற பக்தி மீக்கூரும். இவ்வாறு பக்தியைப் பற்றிக் கூறி எம்மை நல்வழி நடக்க இறைவனை உணர வழிகாட்டியருளினார் ஆச்சாரியார் ஸ்ரீ சச்சிதானந்த சாயி அவர்கள். எமது அன்பு வணக்கங்கள். இதனை ஒழுங்கு செய்துதவிய ஞானவேதாந்த சபையினர்க்கும் ஏனையோர்க்கும் எமது வணக்கங்கள். இத்தகைய வழிகாட்டல்களை என்றும் எதிர்பார்த்திருக்கின்றோம்.

நன்றிகள் பல.


No comments: