இலங்கைச் செய்திகள்





“சட்டவிரோத கைதுகளை உடன் நிறுத்துக”

கிழக்கு முதலமைச்சராக அப்துல் நஜீப் ஏ. மஜீத் சத்தியப் பிரமாணம்

இரண்டரை வருடங்களின் பின் முஸ்லிம் காங்கிரஸுக்கு முதலமைச்சர் பதவி: ஹக்கீம்

25 பேர் மாத்திரமே இலங்கை வருகை: குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பதிவு

துக்ளக் சஞ்சிகையின் ஆசிரியத் தலையங்கம் இலங்கைப் பிரச்னை

தேசப்பற்றும் பன்முக சிந்தனையும் அரசியல் தீர்வும் தமிழ் சமூகமும்



“சட்டவிரோத கைதுகளை உடன் நிறுத்துக”
By General
2012-09-17
சட்டவிரோத கைதுகளை உடனடியாக நிறுத்தக்கோரி கொழும்பு, மட்டக்குளியில் இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

மக்கள் போராட்ட இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டிருந்தனர்.
Pics By: Sujeewa kumar






   நன்றி வீரகேசரி

 


கிழக்கு முதலமைச்சராக அப்துல் நஜீப் ஏ. மஜீத் சத்தியப் பிரமாணம்
Najeepகிழக்கு மாகாண சபையின் புதிய முதலமைச்சராக அப்துல் நஜீப் ஏ. மஜீத் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சற்று முன்னர் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டுள்ளார். கடந்த 8ஆம் திகதி நடைபெற்று முடிந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் எந்தக் கட்சியும் அறுதிப் பெரும்பான்மை பெற்றிருக்கவில்லை. இதன்காரணமாக அம்மாவட்டத்தில் ஆட்சி அமைப்பதில் சிக்கல் நிலை தோன்றியது. கிழக்கில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 13ஆசனங்களையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 11 ஆசனங்களையும் முஸ்லிம் காங்கிரஸ் 7 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி 4ஆசனங்களையும் பெற்றிருந்தன. இந்நிலையில் கூட்டாச்சி என்ற நிலையில் கிழக்கு மாகாணசபையின் நிலை அமைந்துவிட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவை பெறும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தது. எனினும் முஸ்லிம் காங்கிரஸ் தனது முடிவை உத்தியக பூர்வமாக இறுதிவரை தெரிவிக்காத நிலையில் கிழக்கின் புதிய முதலமைச்சர் சத்தியப்பிரமாணம் நடைபெற்றுள்ளது.
நன்றி தேனீ





இரண்டரை வருடங்களின் பின் முஸ்லிம் காங்கிரஸுக்கு முதலமைச்சர் பதவி: ஹக்கீம்
கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியானது சுழற்சிமுறையில் வகிக்கப்படவுள்ளது. இதற்கமைய, இரண்டரை வருடங்களின் பின்னர் இப்பதவி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பின் பேரிலேயே கிழக்கில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது எனவும் முஸ்லிம் காங்கிரஸுக்கு இரு அமைச்சுப் பதவிகள் வழங்கப்படும் என நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்த இரண்டு அமைச்சு பதவிகளும் கிழக்கு மாகாணத்திலுள்ள இரண்டு மாவட்டங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும். அமைச்சு பதவி கிடைக்காமல் விடுபடும் மூன்றாவது மாவட்டத்திற்கு தேவையான அரசியல் அந்தஸ்து கட்சியினால் பலப்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.

இந்த இரண்டு அமைச்சு பதவிகளும் கட்சியின் சிரேஷ்டத்துவத்தின் அடிப்படையிலேயே வழங்கப்படும் என அமைச்சர் ஹக்கீம் குறிப்பிட்டார்.

எனினும், எந்த அமைச்சு பதவியை பெறுவது மற்றும் யாருக்கு வழங்குவது என்பது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் விரைவில் தீர்மானிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

"தார்மீக மற்றும் அரசியல் காரணங்களால் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு ஆதரவளிப்பதற்கு இறுதியில் நாம் தீர்மானித்தோம். தமிழ் தேசியக் கூட்டமைப்பும் எமது ஆதரவைக் கோரியிருந்தது.  அவர்கள் முதலமைச்சர் பதவியையும் எமக்கு வழங்க முன்வந்தனர். எனினும் நாம் இந்த தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டியிருந்தது. தமிழ் மக்களின் அபிலாஷைகளையும் நிறைவேற்றுவதற்கு நாம் முயற்சிப்போம்." என அவர் கூறினார்.

மத்திய அரசில் முஸ்லிம் காங்கிரஸ் எந்த அமைச்சு பதவிகளையும் கோரவில்லை: ஹக்கீம்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மத்திய அரசில் எந்த அமைச்சு பதவிகளையும் கோரவில்லை என அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண சபையில் ஆட்சியை ஏற்படுத்துவதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிடம் அமைச்சு பதவிகள் கோரியதாக ஊடகங்களில் வெளியான செய்திகள் முற்றிலும் பொய்யானது என அவர் குறிப்பிட்டார்.

"முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளுக்காக அரசாங்கத்திலிருந்து கொண்டு குரல் கொடுப்போம். தற்போதைய சூழலில் முஸ்லிம் சமூகத்திற்கு நிறைவேற்ற வேண்டிய சில விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்துடன் இணக்கம் காணப்பட்டுள்ளது. இந்த விடயங்கள் மிக விரைவில் அமுல்படுத்தப்படும்' என அவர் தெரிவித்தார்.

"அத்துடன் கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள ஆகிய மக்களிற்கு சிறந்த சேவையை ஆற்றுவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாடுபடும். இதனால் எந்தவொரு சமூகத்திற்கும் பாதிப்பில்லாமல் அபிவிருத்திகள் மேற்கொள்ளப்படும்' என அமைச்சர் ஹக்கீம் குறிப்பிட்டார்.

"கிழக்கு மாகாண ஆட்சியை அமைத்தல் தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆகிய கட்சிகளுடன் பேச்சு நடத்தினோம். இதன் பின்னரே  ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆதரவு வழங்குவது என தீர்மானிக்கப்பட்டது' என அவர் தெரிவித்தார்.

இந்த தீர்மானத்தினால் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏமாற்றமடைந்திருக்கலாம். எனினும் எதிர்காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சினேகபூர்வமாக செயற்படும் என அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.
நன்றி தேனீ  

  

 25 பேர் மாத்திரமே இலங்கை வருகை: குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பதிவு
By Irshad
2012-09-20
பிரித்தானியாவில் தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட இலங்கையர்கள் இன்று காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

விசேட விமானம் மூலம் இலங்கைக்கு இவர்கள் அனுப்பபடவுள்ளதாகவும், அதில் 50 வரை உள்ளதாகவும் செய்திகள் வெளியாகிருந்த போதும், 25பேர் மாத்திரமே வருகைத் தந்திருந்தனர்.

யாழ்ப்பாணம்,மற்றும் கிளிநொச்சி,மட்டக்களப்பு பகுதிகளைச் சேரந்த 13 தமிழர்கள் உள்ளடங்கலாக முஸ்லிம்கள் ,சிங்களவர்கள் என 12 பேரும் காணப்படுகின்றனர்.

தற்போது இவர்கள் விமான நிலையத்தில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நன்றி வீரகேசரி



துக்ளக் சஞ்சிகையின் ஆசிரியத் தலையங்கம் இலங்கைப் பிரச்னை

இலங்கைத் தமிழர்களுக்கு கணிசமான அளவில் திருப்தி தருகிற வரையில் ஒரு அரசியல் தீர்வு காணப்படுவதைத் தடுத்துவிட தமிழகத்தில் நடக்கின்ற சில நிகழ்ச்சிகள் போதும். தினந்தோறும் நடக்கின்ற “கொலைகார ராஜபக்ஷ....|| பேச்சுக்கள் அவ்வப்போது நடக்கிற கொடுங்கோலன் ராஜபக்ஷ கொடும்பாவி எரிப்பு@ சில சமயங்களில் பத்திரிகைகளில் பிரசுரமாகின்ற இலங்கையைப் பிளந்து ஈழத்தை உருவாக்குவதே தீர்வு| என்று தீர்ப்பளிக்கின்ற கட்டுரைகள் திடீர் உண்ணாவிரதங்கள்@இவை போதாதென்று டெசோ பிரதே ஊர்வலம் அதைத் தொடர்;;ந்து மாவட்டம் தோறும் டெசோ எலும்புக்கூடு நடனம்@ மத்திய அரசுக்கு மிரட்டல்கள்.. என்று - இலங்கை அரசின் பிடிவாததம் தளர்ந்துவிடாமல் பார்த்துக் கொள்ள, இங்கு பெரும் முயற்சிகள் நடந்த வண்ணம் இருக்கின்றன.
இப்படிப்பட்ட சூழ்நிலையில், தமிழகத்தில் சில சர்ச்சுக்களுக்கு யாத்திரையாக இலங்கையிலிருந்து வந்தவர்கள், “நாம் தமிழர் இயக்கத்தினரால் தாக்கப்பட்டிருக்கின்றனர். இலங்கையிலிருந்து வந்த யாத்திரிகர்களில் பலர் தமிழர்கள் என்பது பற்றி “ நாம் தமிழர்|| கவலைப்படவில்லை. யாத்திரீகர்களுக்குத் தரப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பையும் மீறி இந்த வெறித்தனம் நடந்திருக்கின்றது.
தாக்கப்பட்டவர்களில் தமிழர் யாரும் இல்லையென்றே ஒரு பேச்சுக்காக வைத்துக் கொண்டால் கூட, இந்த வன்முறை கண்டிக்கத்தக்கதே. சிங்களவர் மீது எப்படியாவது விரோதத்தை வளர்ந்து விடுவது- என்று இந்த மாதிரி அமைப்புக்களும் , சில தனி நபர் சுயநிர்ணய தமிழ்த்தலைவர்களும் முனைத்திருக்கின்றனர். இவர்களுடைய வன்முறைப் பேச்சுக்களும் மொழித்துவேஷப் போஸ்டர்களும் பிரிவினைவாத கோஷங்களும் இலங்கைத் தமிழர்களுக்கான நீதியைத் தடுக்கும். இரு நாடுகளுக்கிடையேயான உறவைக் கெடுக்கும்;@ அது மட்டுமன்றி தமிழகத்திலும் கூட பிரிவினைவாதமும் மொழி வெறியும் மீண்டும் தலைதூக்க வழி செய்துவிடும்.
இலங்கையில் பிரிவினைவாதக் கோரிக்கை தோன்றியதற்கும் அது வன்முறையாக உருவெடுத்ததற்கும் சிங்கள அரசின் மூர்க்கத்தனம் தான் காரணம். தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தி, அவர்களுக்கு மொழி உரிமையிலிருந்து கல்வி உரிமைவரை பல உரிமைகளையும் மறுத்து, அவர்களைப் பிரிவினைப் பற்றி நினைக்க செய்தது தொடர்ந்து வந்த சிங்கள அரசுகள் தான்.
ஆனால் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கிற முயற்சியாக ராஜீவ் காந்தி – ஜெயவர்தத்ன ஒப்பந்தத்தை அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி ஏற்படுத்தினார். இலங்கைத் தமிழர்களுக்கு அந்த ஒப்பந்தம் செய்ய முனைந்த அளவு நன்மைகளை, இதுவரை வேறு எந்த முயற்சியும் செய்யவில்லை. ஆனால் இலங்கைத் தமிழர்கள் (அதாவது முக்கியமாக வடக்கு, ஓரளவு கிழக்கு தமிழர்கள்) விடுதலைப் புலிகளின் தூண்டுதலினால் - இந்த ஒப்பந்தத்தை எதிர்த்தனர். இந்திய அமைதிப்படையினர் மீது அபாண்டமான பழிகளைச் சுமத்தி விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக நின்று, வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேச தமிழ்மக்கள் அமைதி முயற்சியை முறியடித்தனர்.
இந்திரா காந்தி வளர்த்த பித்தரன்வாலா கூட்டம் இந்தியாவில் பிரிவினை உண்டாக்க முயன்றது மட்டுமன்றி இந்திரா காந்தியையே கொலை செய்தது. இந்திரா காந்தியினால் ஆயுத உதவியும் இராணுவப் பயிற்சியும் பெற்ற புலிகள் இலங்கைத் தமிழர்களுக்கான நல்ல தீர்வை தடுத்ததுமின்றி இந்திரா காந்தியின் மகனையே கொன்றனர்.
இந்திய உதவி இல்லாமல் வளர்ந்தே இருக்க முடியாத ஒரு கூட்டம் - இந்தியாவை அயல் நாட்டினராக அறிவித்து, சிங்களவர்களை சகோதரர்களாகக் கொண்டாடி இந்திய அமைதிப்படையை வெளியேறச் சொல்லியது, அந்தக் கூட்டம். இலங்கையில் இருந்த தமிழ்த்தலைவர்களை எல்லாம் கொன்றது. அப்பாவித் தமிழர்களைக் கொன்றது. இறுதியில் தானும் அழிந்தது. அழிந்த அந்தக் கூட்டத்திற்கு மீண்டும் உயிரூட்ட முயற்சிகள் நடக்கின்றன.
பல வருடங்களாக நடந்து வந்த புலி –அரசு மோதல்களின் போது வெளியேறி அயல்நாடுகளில் குடியேறிவிட்ட இலங்கைத் தமிழர்கள் பலர் இலங்கையில் தமிழர் பிரச்னை தீர்வதை விரும்பவில்லை. ஏனென்றால் நம் நாட்டில் பங்களாதேஷ் விடுதலை பெற்ற பின் அங்கிருந்து இங்கு வந்த அகதிகள் திரும்பிச் செல்லவேண்டும் என்று கோருவது போல, சில நாடுகளில், குரல்கள் எழலாம். “உங்கள் நாட்டில் நீங்கள் பட்ட அவதியின் காரணமாக இங்கு வந்தீர்கள். இப்போது உங்கள் நாட்டில் தான் அமைதி திரும்பி விட்டதே! ஆகையால் நீங்கள் திரும்பிச் செல்லுங்கள்|| என்று சில நாடுகளில் சில அமைப்புக்கள் கூறத் தொடங்கலாம்.
இதைவிட முக்கியமாக  இப்போது, “ஈழம் பெறுவதற்கான போர்@ அதற்கான ஆயத்தங்கள் செய்ய நிதி தேவை|| என்றோ - இலங்கையில் தமிழர்கள் மிக மோசமான நிலையில் இருப்பதால், அவர்களுக்கு உதவ நிதி தேவை என்றோ – அல்லது இம்மாதிரி வேறு காரணங்களைக் கூறியோ – அயல்நாடுகள் சிலவற்றில் இலங்கைத் தமிழ் முக்கியஸ்தர்கள் பணவசூல் நடத்துகின்றார்கள்@ இது மிரட்டல் மூலமாகவும் நடக்கின்றது. பணத்திற்குப் பணம்@ ஆதிக்கத்திற்கு ஆதிக்கம். இது தொடரவேண்டும் என்றால் இலங்கையில் அமைதி திரும்பி விட்டதாக யாரும் ஒப்புக் கொண்டுவிடக்கூடாது. ஆகையால், இலங்கையில் இன்றும் தமிழர்கள் வேட்டையாடப்படுகின்றார்கள் என்று அயல்நாட்டு அமைப்புக்கள் முன்பு காட்ட, அயல் நாடுகளுக்குச் சென்று, ஆதிக்கம் புரிந்து வசதியாக வாழ்கிற் இலங்கைத் தமிழர்கள் முயல்கிறார்கள்.
இந்த ஈழ பிஸினஸ் தொடர்வதற்காக, அவர்கள் வசூல் செய்கின்ற நிதியில் ஒரு பங்கு, இதற்கான பிரச்சாரத்திற்காகச் செலவிடப்படுகின்றது. அந்த நிதி உதவி எங்கெங்கே செலவாகின்றது. யார் யாருக்கு பிரச்சார சம்பளம் தரப்படுகின்றது என்பதெல்லாம், இலங்கை அரசு ஆராயவேண்ய விஷயங்கள். ஆனால், இப்படி நடக்கிற பிரச்சாரத்தின் காரணமாக, இன்றும் இலங்கையில் தமிழர்கள் துன்புறுத்தப்படுகின்றார்கள் என்பதை நாம் நம்பிவிடக்கூடாது.
தமிழர்கள் பிரச்னை, தீரவில்லை என்பது உண்மை, அதைத்தீர்ப்பதில் இலங்கை அரசு இன்னமும் முனைப்பு காட்டவேண்டும் என்பது நியாயம், ஆனால், தமிழர்களை இன்றும் இலங்கை விரட்டுகின்றது என்பது உண்மையல்ல.
மிகச் சிறிய நாடாகிய இலங்கை – சாதாரண இராணுவ பலம் கொண்ட இலங்கை – உலகத்திலேயே சப்- மரின் முதல் விமானம் வரை சேர்த்துவைத்திருந்த, தன் மக்களையே கேடயங்களாக பயன்படுத்திய, சிறுவர்களை முன்னிறுத்தி பலிக்கடாக்களாக்கத் துணிந்த, தமிழ்த்தலைவர்களை எல்லாம் கொன்று போட்ட,ஒரு கொலைகாரக் கூட்டத்தை எதிர்கொள்ள வேண்டியதாகியது.
அதை எதிர்கொண்டு அந்தக் கூட்டத்தை இலங்கை அரசு ஒடுக்கியது என்பது பாராட்டத்தக்க ஒரு சாதனை. அந்த மாதிரி ஒரு வெறிச் சக்தியை இலங்கை அரசு எதிர்கொண்டபோது, பல சிவிலியன்கள் உயிரிழக்க நேரிட்டது மிகவும் வருந்தத்தக்க விஷயம். ஆனால் சிவிலியன்களைக் கேடயங்களாகப் புலிகள் பயன்படுத்தியபோது , ஆஸ்பத்திரிகளில் பதுங்கி, புலிகள் தங்கள் தாக்குதல்களை நடத்தியபோது, இராணுவத்தின் எதிர்தாக்குதலில் சிவிலியன்கள் உயிர் இழப்பு எப்படி தவிர்க்கப்படும்? இதற்கு சிங்கள அரசைக் காரணமாக்குவதை விட புலிகளை காரணமாக்குவது தான் நியாயமாக இருக்கும்.
காஷ்மீர் தீவிரவாதிகளை இந்திய இராணுவம் எதிர்கொள்கிறபோது நேரிடுகின்ற சிவிலியன் உயிர்இழப்புக்களுக்குக் காரணம், சிவிலியன்களிடையே ஒழிந்து கொள்கிற அந்தத் தீவிரவாதிகளா அல்லது இந்தியா இராணுவமா?
காஷ்மீர் முஸ்லிம்களுக்காக நாங்கள் போராடுவோம் என்று கூறிக் கொண்டு, பல அட்டூழியங்களை செய்து வருகின்ற பாகிஸ்தானியர்களின் செயலுக்கும் தமிழகத்தில் சிலரால் பேசப்படுகின்ற தொப்புள் ‘கொடி நியாயம்| பொருந்துமா?
இதைப் பார்ப்பது போல தான் இலங்கை விவகாரத்தையும் நாம் பார்க்கவேண்டும். நமக்கு ஒரு அளவுகோல்@ இலங்கைக்கு வேறொரு அளவுகோல் என்பது நேர்மையான அணுகுமுறை அல்ல. தமிழர் பகுதிகளில் நூற்றுக்கணக்காக அல்ல பல்லாயிரக்கணக்கான கண்ணிவெடிகள், புலிகளினால் புதைக்கப்பட்டிருக்கின்றன. அவற்றை நீக்கிவிட்டுத் தான் முழுமையான குடியேற்றம் நடத்தமுடியும். இதனால் ஏற்படுகின்ற தாமதத்திற்கு இலங்கை அரசா பொறுப்பு?
இந்திய அரசு அங்கே ரயில் பாதை அமைக்கிறது (ஏற்கனவே இருந்தது புலிகளினால் தகர்க்கப்பட்டது) ஆனால் அங்கெல்லாம் இருக்கிற கண்ணிவெடிகளை அகற்றவேண்டுமே? அதை இந்தியா செய்யவில்லை.இலங்கை இராணுவம் அந்தப் பணியைச் செய்து தருகின்றது.
பெரும்பாலானோர் முகாம்களிலிருந்து தங்கள் இடத்திற்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றார்கள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் விடுதலைப் புலிகளினால் அமைக்கப்பட்ட தமிழ்த்தேசிய அமைப்பு கூட பிரிவினையைக் கைவிட்டு விட்டது. அப்படியிருக்க, இங்கே சிலர் இன்னமும் இலங்கையைப் பிளக்கவேண்டும் என்று கோருவத, இலங்கைத் தமிழர்களுக்குத் தருகின்ற தொல்லையைத் தவிர வேறொன்றும் இல்லை.
“சீன நட்புக்கு கை நீட்டுகின்ற இலங்கையுடன் நமக்கு ஏன் நட்பு?|| என்ற கேள்வி ஒன்று இப்போது ஒலிக்க ஆரம்பித்திருக்கின்றது. சீனாவும் இலங்கையும் நெருங்குவதற்குப் பாலம் அமைத்துக் கொடுத்ததே இந்தியா தான் என்பது நம் கருத்து. அது இ;ப்போது இலங்கைக்கு வசதியாகப் போய்விட்டது. இந்தியாவைக் காட்டி சீனாவிடமும் சீனாவைக் காட்டி இந்தியாவிடமும் உதவி பெறுவதற்கு இந்த நிலை இலங்கைக்கு உதவுகின்றது.
இலங்கைக்கு மிகவும் தேவைப்பட்டபோது இராணுவ உதவிகளையும் ஆயுத விநியோகத்தையும் செய்ய மத்திய அரசு தயங்கியது. தமிழகத்தில் என்ன நடக்குமோ என்ற  அனாவசியமான அச்சம் மத்திய அரசுக்கு வந்ததால், இலங்கைக்குச் செய்திருக்கக்கூடிய சில உதவிகளை இந்திய அரசு செய்யவில்லை. அந்த நேரத்தில் சீனா உள்ளே நுழைந்தது. இதற்கு இலங்கையைப் பழிப்பதினால் என்ன பயன்?
நமக்கு இலங்கையுடன் வர்த்தக உறவு விரிவாக உள்ளது. தமிழகத்திற்கே கூட இலங்கையின் சந்தை பயன்படுகின்றது. மோட்டார் வாகனங்களிலிருந்து துணிமணிகள் வரை பல பொருட்கள் தமிழகத்திலிருந்து இலங்கைக்குச் செல்கின்றன.
இதைத் தவிர இலங்கையில் பிரிவினை வாதம் வளர்வது, இந்திய ஒருமைப்பாட்டுக்கு உகந்தது அல்ல. இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளுடன் தமிழகத்தையும் இணைத்து அகண்ட தமிழகம் பற்றி முன்பு ஒரு பேச்சு எழுந்தது உண்டு. இது தவிர தமிழகத்தில் உள்ள சில தமிழ்த்தீவிரவாத குழுக்கள் - இந்திய ஒருமைப்பாட்டை எதிர்க்கின்ற அமைப்புக்கள் - தங்களை வளர்த்துக் கொள்ள, இலங்கைத் தமிழர் பிரச்னை பெரிதும் உதவும். இதையெல்லாம் மனதில் கொள்கிறபோது இந்திய - இலங்கை நட்புறவு பலப்படுவதே நமது லட்சியமாக இருக்கவேண்டும்.
ஐ.நா. சபையில் இலங்கைக்கு எதிராக வந்த தீர்மானத்தை ஆதரித்து இந்திய அரசு வாக்களித்தது ஒரு பெரும் தவறு@ அத்தீர்மானத்தை இந்தியா எதிர்த்திருந்தால் இரு நாடுகளின் உறவு வலுப் பெறுவதற்கு அது உதவியிருக்கும். இப்போது தமிழக அரசு, இலங்கையிலிருந்து வந்த காற்பந்து ஆட்டக்காரர்களைத் திருப்பி அனுப்பியதும் தவறு@ இது தமிழர் பிரச்னையைத் தீர்க்க உதவக்கூடிய செயல் அல்ல.இரு நாடுகளுக்கிடையே கலாச்சார, விளையாட்டு பந்தய உறவுகள் தொடர்ந்து இருந்து வருகின்றன. அது கெடுவது, நல்லதே அல்ல. இதை இலங்கைத் தமிழர்களே விரும்பவில்லை என்பது செய்திகளிலிருந்து தெரிகின்றது. .இலங்கைத் தமிழர்கள் எனும்போது ஒரு உண்மை நினைவில் வைக்கத்தக்கது. கொழும்புவில் வாழ்கின்ற இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கும் , Plantation தமிழர்களுக்கும் - வடப்புறத் தமிழர்களுடன் நல்லுறவு இல்லை. கிழக்குத் தமிழர்கள் கூட இப்போது வடக்குத் தமிழர்களை முழுமையாக ஏற்பதில்லை. இப்படிப் பல வித்தியாசங்களைக் கொண்ட தமிழர்களில் வடக்குத் தமிழர்களை மட்டுமே மனதில் கொண்டு தமிழகத்தில் போராட்டங்கள், திடீர் உண்ணாவிரதங்கள், வீராவேச பேச்சுக்கள் எல்லாம் நடக்கின்றன. இலங்கையில் , கொழும்பு தமிழர்களும்  Plantation தமிழர்களும் - இலங்கை அரசில் இடம்பெற்று வருகின்றார்கள். அவர்கள் எல்லாம் தமிழர்கள் இல்லையா? அவர்களது அமைதியைக் கெடுக்கின்ற வகையில், இங்கு இலங்கை அரசை விமர்சனம் செய்வது விவேகம் தானா?
இன்றோ வடக்குத் தமிழர்கள் கூட, பிரிவினைக் கோஷத்தைக் கைவிட்டு “சம உரிமை|| கோரிக்கையைத் தான் வலியுறுத்துகின்றார்கள். அவர்களுடைய அந்த கோரிக்கைக்கு உதவுவதே இந்திய அரசின் கடமை. இதை நட்பு மூலமாகச் செய்ய முடியுமே தவிர, பகைமையினால் சாதிக்கமுடியாது.
“தமிழர்களை இரண்டாம்தர குடிமக்களாக நடத்தியதால், வடக்கிலும் கிழக்கிலும் தீவிரவாதத்தை தோற்றுவிக்க உதவியது நாங்கள் தான்|| என்ற உண்மையை உணர்;ந்து இனி தமிழர்களிடையே நம்பிக்கையை வளர்க்க இலங்கை அரசு முனையவேண்டும்.
அரசுக்கும் புலிகளுக்கும் இடையே நடந்த மோதலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு@ குடிபெயர்;ந்தவர்கள் மீண்டும் தங்கள் சொந்த இடங்களுக்குப் போய்ச் சேருவதற்கு விரைவான ஏற்பாடுகள், தமிழ் மொழிக்கு சிங்கள மொழிக்குச் சமமான அந்தஸ்து, படிப்பிலிருந்து வேலை வாய்ப்பு வரை சிங்களவர்களுக்குச் சமமாமக தமிழர்களுக்கும் உரிமைகள்@ இந்தியாவில் உள்ளது போல் சமஷ்டி (பெடரல்) அரசியல் அமைப்பு@ ராஜீவ் - ஜெயவர்த்தன ஒப்பந்தம் அமுல்ப்படுத்துவது போன்றவற்றை இலங்கை அரசு முனைந்து விரைவில் செய்து முடிக்கவேண்டும்.
இலங்கையில் வாழ்கின்ற வடக்கு கிழக்கு தமிழர்களும் பிரிவினைவாதம் பேசுகிறவர்களைப் புறக்கணித்து சிங்களவர்களுடன் சம உரிமை பெற்று வாழ்வில் திருப்தி காணவேண்டும். தமிழகத்தில் உள்ள சில , ஓட்டு இல்லாத தலைவர்கள், தங்களுக்கு “ஈழம்|| பெற்றுத் தந்து விடுவார்கள் என்கின்ற எண்ணத்தை இலங்கைத் தமிழர்கள் வளர்த்துக் கொள்ளக்கூடாது. அந்த மாதிரி பேசுபவர்களுக்கு தமிழகத்திலேயே ஆதரவு கிடையாது என்பதை வடக்குத் தமிழர்கள் உணரவேண்டும்.
முன்பு, ஈராக் மீது அமெரிக்கா படையெடுத்தபோது சில நாடுகள் அமெரிக்காவை எதிர்த்து வீராவேசமாகக் குரல் கொடுத்தன. இந்த எதிர்ப்பினால் அமெரிக்கப்படைகள் போர் நிறுத்தம் செய்துவிடும் என்று நம்பிய சதாம் உசேன், சூரத்தனம் காட்டி தனது முடிவை எய்தினார். இப்படி வெளியிலிருந்து எந்தப் பாதிப்பும் இல்லாமல் “தர்மக்கூச்சல்|| போடுகிறவர்களை நம்பி நாசம் அடைந்த சதாம் உசேன் போல், இலங்கைத் தமிழர்கள் நடந்து கொள்ளக்கூடாது.
தமிழகத்திலிருந்து ஈழம் பற்றி வாய் கிழிய பேசுகிறவர்களுக்கு அதனால் நஷ்டம் எதுவும் இல்லை. ஆனால் இலங்கைத் தமிழர்களுக்கு அது தீமை செய்யும். இதை உணர்ந்து வடக்கில் வாழ்கின்ற தமிழர்களும் சமஉரிமை கோருகின்ற , பிரிவினை கோஷத்தையும், வன்முறையையும் நாடாத தலைவர்களுக்கும் அமைப்புக்களுக்கும் ஆதரவளித்து அமைதியை நாடவேண்டும்.
இலங்கைத் தமிழர்களுக்கு சிங்களவர்களுடன் சம உரிமை பெற்றுத் தருவதில், இந்திய அரசுக்கு பொறுப்பு உண்டு. ராஜரீக நடவடிக்கைகளினாலும் தொடர்ந்து தருகின்ற உந்துதலினாலும் வர்த்தக சலுகைகள், கூட்டமைப்பு, தீர்மான உதவிகள் போன்றவற்றினாலும் இந்திய அரசு, இலங்கை அரசை இவ்விஷயத்தில் நியாயமான பாதைக்குத் திருப்புவதில் முனையவேண்டும்.
தமிழகமும் இதற்கு உதவியாக இருக்கவேண்டும். தமிழகத்தில் சிங்கள விரோதத்தையும் இலங்கை அரசின் மீதான வெறுப்பையும் வளர்த்து வருகின்ற துவேஷ மற்றும் பிரிவினைவாத பிரச்சாரங்களை அடக்கவேண்டும். இது எதிர்காலத் தமிழகத்திற்கே கூட நல்லது. இல்லாவிட்டால் இங்கேயும் கூட ஒரு வன்முறை நிறைந்த பிரிவினைவாதப் பிரச்சாரத்திற்கான விதை ஊன்றப்பட்டு விடக்கூடிய ஆபத்து உண்டு.
அதே சமயத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு சமஉரிமை பெற்றுத் தரும் பாதையில், இலங்கை அரசைத் திருப்பி விடுவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்கத் தூண்டுவதும், அம்மாதிரி நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க உதவுவதும் தமிழகத்தின் பொறுப்பு.
இவையெல்லாம் ஒரு தினத்தில் நடப்பவையல்ல. காலம் வேண்டும். அதற்கான பொறுமையைக் காட்டுவது, இந்தியாவின் கடமை என்றும்-  அந்தப் பொறுமை எல்லை மீறாமல் பார்த்து கொள்கிற வகையில் விரைவாகச் செயற்படுவது இலங்கை அரசின் கடமை.
நன்றி தேனீ




தேசப்பற்றும் பன்முக சிந்தனையும் அரசியல் தீர்வும் தமிழ் சமூகமும்
/ தேவன் (கனடா)
பகுதி 1
“மனிதருக்குள் இருக்கும் மிருகத்தை துணிவோடும் தயவோடும் எதிர்கொள்வாய். உன் புன்னகையில் ஒரு பூ மலரட்டும். உன்னை நேசிப்பவர்கள் ஓராயிரம் உலகங்களுக்கப்பாலும் உன்னைக் கவனத்தில் கொள்வார்கள். நான் குனிந்த தலையுடன் தனிவழி போகிறேன். ஆனாலும் அறிவேன் உனதன்பு ஒருபோதும் அழிவதில்லை. வெகுண்ட கடினப்பாதையில் வெண்ணிலாவும் கதிரோனும் ஒளிவீசி வழிகாட்டும்.”
-    திஸ் நாட் ஹான் - ஜென் துறவி (வியட்நாம்)

இலங்கையின் சுதந்திரத்துக்குப் பின்னரான வரலாற்றில் இலங்கையில் உள்ள சிறுபான்மை இனங்கள் சிங்களப் பெரும்பான்மை இனத்தின் மதம், மொழி, அரசியல் அதிகாரங்கள் ஊடாக தேசிய ஒடுக்குமுறையை வன்முறை வடிவிலும், பிரதேசம், பிராந்தியம், இரண்டாம் தரப் பிரஜை, இனவாதம், மாற்றான் மனப்பான்மை போன்ற வடிவங்களிலும் அரச யந்திர ஒடுக்குமுறையை எதிர்நோக்கி வருவது உண்மையே.

இந்த இனப்பாகுபாடு ஒடுக்குமுறையை வட-கிழக்கு தமிழ் சமூகம் மட்டும் பெரும்பான்மை அதிகார சக்தியிடம் இருந்து எதிர்நோக்கவில்லை.

குறிப்பாக சொல்லப்போனால், இலங்கைத்தீவின் இன ஒடுக்குமுறை வரலாற்றில் அனைத்து சிறுபான்மை இனங்கள் ஒடுக்கப்பட்டாலும், மலையக மக்கள் போல இனப்பாகுபாட்டை அனுபவித்தவர்கள், இன்றும் அனுபவித்துக் கொண்டிருப்பவர்கள் வேறு எவருமில்லை. வேறு எந்தச் சமூகமும் அந்தளவுக்கு இனவாதத்தால் பெரிய அளவில் பாதிப்பு அடையவில்லை என்றே கூற வேண்டும்.

உதாரணத்திற்கு சிறீமா – சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் நாடு கடத்தல், பிரஜா உரிமை பறிப்பு, கல்வி, சமூக, பொருளாதார நிலைகளில் சமத்துவமின்மை, வறுமை இன்ன பிற காரணிகளாலும் இலங்கைத் தீவின் சகோதர சமூகங்களோடு ஒப்பு நோக்குகையில் மிகவும் தாழ்ந்த நிலையிலேயே இந்த 21ம் நூற்றாண்டிலும் மலையக சமூகம் வாழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இத்தனைக்கும் இந்த சமூகம் தான் இலங்கையின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக, அரணாக இருந்து வருகிறது. ஆனால் அவர்களது வாழ்நிலையோ? தேசிய வருமானத்துக்கு தேயிலைக் கொழுந்தை பறித்துக் கொடுத்துவிட்டு மலைநாட்டுக் குளிரில் தமது குழந்தைகளை சுமந்தபடி மனித வாழ்வுக்குரிய அடிப்படை வசதிகள் இன்றி, மலைநாட்டு அட்டைகள் அவர்களது இரத்தத்தை ஒரு பக்கம் உறிஞ்ச, தேசிய பெரும் முதலாளிகள் இன்னொரு பக்கம் உறிஞ்ச, இலங்கைத் தீவின் அதிக ஒடுக்குமுறைக்கு உள்ளான சமூகமாக அவர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

இவ்வளவு ஒடுக்குமுறையையும், இனப்பாகுபாடுகளையும் அனுபவித்த, அனுபவித்துக் கொண்டிருக்கிற ஓரு சமூகம் வட-கிழக்கு தமிழர்கள் போல, அரசுக்கு எதிராக தனிநாடு கேட்டோ, தீவிரவாத, பயங்கரவாத வன்முறை கலந்த போரையோ ஆரம்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த சமூகத்தின் தலைவர்கள் விசப் பரீட்சை, பரீட்சார்த்த முயற்சி என நடைமுறைக்கு சாத்தியப்படாத அழிவுப் பாதையில் பயணிக்காது தம்மையும், தமது சமூகத்தையும் பாதுகாத்து அவர்களது உரிமையை யார் பறித்தார்களோ, யார் ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கினார்களோ அவர்களுக்கு எதிராக எதிர்ப்பு அரசியலை, பிரிவினைவாத போரை தொடுக்காது பெரும்பான்மை அரசியல் கட்சிகளுடன் இணைந்து இலங்கைத் தீவில் தமக்கு மறுக்கப்பட்ட அடிப்படை உரிமைகளைப் பெற்று வருகிறார்கள்.

இதற்கு சிறந்த உதாரணமாக தொண்டமான் காலத்து இ.தொ.காங்கிரசின் அரசியல் செயற்பாட்டை குறிப்பிடலாம். இந்தக் கட்சியானது ஆட்சியில் எந்த கட்சி வருகிறதோ அந்தக் கட்சியுடன் அரசியல் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டு தமது சமூகத்துக்கு தேவையான உரிமைகளை பெற்றுக் கொள்வார்கள்.

இத்தகைய நெகிழ்ச்சியான, இணக்கப்பாடான அரசியல் முறைமை மூலமே காலஞ்சென்ற தொண்டமான் அவர்கள் ஜே.ஆர்.தலைமையிலான ஐ.தே.கவில் இணைந்து மலையக மக்களின் பிரஜா உரிமையைப் பெற்றுக்கொண்டார்கள்.
காலப்போக்கில் தனிக்கட்சி மீது மக்கள் நம்பிக்கை இழக்கும் போது அதற்கு மாற்றீடாக மலையகக் கட்சியை உருவாக்கினார்கள். பின்பு காலவோட்டத்தில் மலையக முன்னணியில் இருந்தும் பல்வேறு கட்சிகள் உதயம் பெற்றன. இதில் முன்னுதாரணத்துக்குரிய விடயம் என்னவென்றால், மலையகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் சிங்களப் பெரும்பான்மை கட்சிகளிடமும், தலைவர்களிடமும் இனவாதப் போக்குகளைப் பின்பற்றாது மிதமான, பன்முக – தர்க்கபூர்வமான அரசியல் உறவை வைத்துக் கொள்வார்கள்.

மலையகத் தமிழர்கள் எத்தகைய அரசியல் முறைமைகளை பின்பற்றினார்களோ, அதேபோல இஸ்லாமிய தமிழ்ச் சமூகமும் அரசின் ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் அரசியல் பிரச்சினைகளை, வாழ்வியல் பிரச்சினைகளை சகோதர சமூகங்களுக்கு அழிவுகளை, அச்சுறுத்தலை ஏற்படுத்தாது அமைதியான முறையில் கையாண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதற்குச் சிறந்த உதாரணம் அண்மைய தம்புள்ள மசூதி விவகாரம். இந்த விடயத்தில் இஸ்லாமிய ஆன்மீகத் தலைவர்களும், அரசியல் தலைவர்களும் முன்னுதாரணமாக நடந்து கொண்டார்கள்.

மேலும் இலங்கைத் தீவில் உள்ள பல்லின சமூகங்களின் வளர்ச்சியையும், வீழ்ச்சியையும் ஒப்பு நோக்கும் போது ஓர் உண்மை புலனாகின்றது. அதாவது “பன்மைத்துவம் அழகானது”. இன்றைய உலகும் பன்முக அடிப்படையிலேயே இயங்கி வருகிறது.

உதாரணமாக சிங்கள சமூகத்தில் உள்ள பிற்போக்குத்தனங்களை, அடிப்படைவாதங்களை எதிர்த்து குரல் கொடுப்பதற்கு அந்த சமூகத்தில் நல்ல அறிஞர்கள், முற்போக்காளர்கள், இலக்கியவாதிகள், கலைஞர்கள், இடதுசாரி சிந்தனையாளர்கள், பத்திரிகையாளர்கள் என பல்வேறு தரப்பினர் இருக்கின்றனர்.

இந்த முற்போக்கான, மனிதநேய உணர்வுள்ள மனிதர்கள் தான் அரசின் சக சமூகங்கள் மீதான ஒடுக்குமுறைகளை எதிர்த்து குரல் கொடுப்பவர்களாக உள்ளார்கள்.

வட-கிழக்கை பூர்வீகமாக கொண்ட தமிழர்களின் 60 வருட வீழ்ச்சிக்கும் பின்னடைவுக்கும் செயல்திறன்மிக்க, பன்முக, ஆளுமைமிக்க, தொலைநோக்கு பார்வையுள்ள அரசியல் தலைமை உருவாகாததே காரணமாக இருக்கிறது.

சிங்களத் தேசியவாதத்தின் ஒடுக்குமுறை காரணமாக பின் விளைவுகளையும் இழப்புகளையும் கருத்தில் எடுக்காது, ஒரு வட்டுக்கோட்டை தமிழீழத் தீர்மானம,; அதைத் தொடர்ந்து முள்ளிவாய்க்கால் வரையிலான மானிட பேரவலத்திற்கு புறத்தில் காரணத்தை தேடுவதைவிட, அகத்தில் தேடுவதே போரில் இறந்தவர்களுக்கும் எதிர்கால சந்ததிக்கும் பயன் உள்ளதாக அமையும்.

ஏனெனில் தமிழீழம் எனும் ஒற்றைப் பரிமாணப் பார்வை ஊடாக முன்னெடுத்த மூர்க்கத்தனமான போரில் பிராந்திய அரசியல், பாதுகாப்பு நலன்கள், பூகோள அரசியல் நலன்கள், தமிழ் சமூகத்தின் மாற்று சிந்தனை, இடதுசாரி விமர்சனங்கள் நிராகரிப்பு அல்லது கவனத்தில் எடுக்கத் தவறியது. பன்முகச் சிந்தனையை ஏற்றுச் செயல்படத் தவறியது என குருட்டுப் பார்வையே தமிழர்களின் அழிவுக்கு வழிகோலியது. தவிரவும் “தமிழ்த் தேசியத்தை” போதை போல அபின் போல உணர்ச்சியூட்டுதலுக்கு, வெறியூட்டுதலுக்கு பாவித்ததின் விளைவாகவும் தமிழ் சமூகத்திற்கு பின்னடைவு ஏற்பட்டது.

அத்துடன் இந்த சாத்தியமற்ற ஈழப் போரானது கடந்த 30 வருடத்துக்கு மேலான கொலை வெறிக் கலாச்சாரத்தை முன்னெடுத்ததுடன், தமிழ் சமூகத்தின் சிந்தனை ஆற்றல் உள்ள பொக்கிசத்தை அழித்தது, சிங்கள முற்போக்கு மக்களை அரவணைக்க தவறியது, ராஜீவ் காந்தி கொலை உட்பட இந்தியாவை பகைத்துக் கொண்டது, இஸ்லாமிய சமூகத்தை வெளியேற்றியது, இனச் சுத்திகரிப்பு, ரத்தக்களரிகளை கட்டவிழ்த்துவிட்டது, தமிழ் சமூகத்தின் இன விகிதாசாரத்தை குறைத்தது, 10 லட்சம் மக்களை உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இடம்பெயர வைத்ததுடன், அடையாள இருப்புக்காக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் தமிழர்களின் அடையாளத்தை இழந்ததுடன், ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் குற்றவியல் சமூகமாக மாற்றியதுடன், ஈழப் போர் முடிவுக்கு வந்துள்ளது.

இவ்வளவு அழிவுக்கும் மூல காரணம் இலங்கையை சுதந்திரத்துக்குப் பின் ஆட்சி செய்தவர்கள் புத்த மதத்துக்கும் சிங்கள மொழிக்கும் பெரும்பான்மை இன மக்களுக்கும் அதீத முன்னுரிமை கொடுத்ததுடன், ஒரு இனத்தின் மேலாண்மையை சிறுபான்மை இனத்தின் மீது வெளிப்படுத்தியதினாலும், தமிழர்களை இரண்டாம் தர பிரஜைகளாக நடத்தியதாலுமே என்பதை அனைவரும் அறிவார்கள்.

இதே மேலாண்மையை, ஒடுக்குமுறையை இலங்கைத் தீவிலுள்ள சகோதர சக சமூகங்களும் அனுபவித்திருந்தார்கள். ஆனால் அந்த சமூகங்களை பிரதிநிதித்துவம் செய்த தலைவர்களின் தந்திரோய அணுகுமுறையால் இழப்புகள் அழிவுகள் தவிர்க்கப்பட்டு பன்முகத் தளத்தில் அரசியல் ஆளுமைகளை வெளிப்படுத்தியதினால் வளர்ச்சிப் பாதையில் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள்.

சுதந்திரத்துக்குப் பின்னான வரலாற்றில் இலங்கையை ஆட்சி செய்த தலைவர்களில் மிகவும் சிறப்பானவர் சந்திரிகா குமாரதுங்கா அவர்கள். மிகவும் மோசமான தலைவர் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அவர்கள்.

இலங்கையை ஆட்சி செய்த தலைவர்களில் சந்திரிகா ஒருவரே இலங்கையை ஒரு பல்லின தேசமாக கவனத்தில் எடுத்து இனவாதமற்ற, கடும் போக்கற்ற நிர்வாகத்தை முன்னெடுத்ததுடன், தேசிய இன ஒடுக்குமுறைக்கு முகம் கொடுத்த தமிழ் சமூகத்திடம் மன்னிப்பு கோரியதுடன் இன முரண்பாட்டிற்ற தீர்வாக பிராந்திய சுயாட்சியையும் முன்மொழிந்திருந்தார்.

தமிழ்த் தலைமைகளோ இந்த அற்புதமான சந்தர்ப்பத்தை பயன்படுத்துவதற்கு பதிலாக குழப்பியதுடன், சந்திரிகாவின் உயிரையும் வேட்டையாட முயற்சி செய்தார்கள். 60 வருடத்துக்கு மேலாக தமிழ் சமூகத்தை வழி நடத்துபவர்கள் இன முரண்பாடு விடயத்தில் தொலைநோக்கு பார்வையற்ற, ஆளுமையற்ற, தீர்க்கதரிசனமின்மை, தந்திரோபாயமின்மை போன்ற பலவீனமான செயற்பாடுகளால், வரலாற்றை முன்நோக்கி நகர்த்துவதற்குப் பதிலாக வரலாற்றை பின்நோக்கி நகர்த்தியதுடன,; தமிழ் சமூகத்துக்கு அதிக சேதத்தையும் ஏற்படுத்தி இருந்தார்கள்.

இனங்களுக்கிடையிலான இனப்பூசல், இன முரண்பாடு வரலாற்றினை அவதானிக்கும் போது ஜே.ஆர்.ஜெயவர்த்தனா அவ்வளவு எளிதில் மறக்க முடியாத பாத்திரத்தை வகித்துள்ளார்.

சமஸ்டித் தீர்வுக்கு எதிராக ண்டி யாத்திரை, தெற்கு ஆசியாவின் அறிவுப் பொக்கிஸம் யாழ். நூலக எரிப்பு, இந்த நூலகத்தில் காந்தியின் கையெழுத்து பிரதியும் இருந்தது குறிப்பிடத்தக்கது. அத்துடன் தமிழ் அறிஞர் தாவீது அடிகளார் இந்த சம்பவத்தை ஜீரணிக்க முடியாமல் மாரடைப்பால் மரணமடைந்தது. 83 ஜூலை கலவரம் தமிழ்ச் சிறைக் கைதிகள், தமிழ்த் தலைவர்கள் மீது கொடுமையான சித்திரவதை உட்பட சிறுபான்மை இன தமிழர்களை நோக்கி “யுத்தம் என்றால் யுத்தம,; சமாதானம் என்றால் சமாதானம்” என கொக்கரிப்பு. இதற்கு முன்பு தமிழருக்கு எதிராக பல வன்முறைகள் ஏவிவிடப்பட்டாலும் 83 இனக்கலவரம் தான் தமிழர் வாழ்வில் தொடர்ச்சியான அழிவுக்கு வித்திட்டது.

சிங்களப் பேரின தேசியவாதம் எந்தளவுக்கு இரக்கமற்ற ஒடுக்குமுறையை தமிழர் மீது ஏவிவிட்டதோ, அதற்கு சற்றும் குறைவு இல்லாத சமமான ஓடுக்குமுறையை தமிழருக்கு விடுதலை வாங்கித் தருவதாகவும் “நம்புங்கள் தமிழ் ஈழம் நாளை கிடைக்கும்” எனக்கூறிய புலிகள் அமைப்பு, 58இல் இருந்து 83க்குள் சிங்கள அரசு தமிழ் மக்களை கொன்றதை விட, கடந்த 30 வருடத்தில் அதிகமான தமிழ் மக்களை கொன்றும், சகோதர சமூகங்களுக்கு பாரிய சேதத்தையும் ஏற்படுத்தி இருந்தார்கள்.

வரலாறுகள் எவ்வாறு இருப்பினும், உள்நாட்டு யுத்தம் காரணமாவும், பொருளாதார மேம்பாடு, நல்வாழ்வு காரணமாகவும் 83ம் ஆண்டுக்கு முன்பும் பின்பும் அதிகளவான தமிழ் மக்கள் ஐரோப்பாவுக்கும், வட அமெரிக்காவுக்கும் இடம் பெயர்ந்தார்கள். இந்த இடப்பெயர்வில் இலங்கை, இந்தியா தவிர மேற்குலகில் வசிப்பவர்கள் ஒப்பீட்டு ரீதியாக ஆரோக்கியமாகவும் வளமாகவும் வாழ்கிறார்கள்.

அதற்கான காரணம், மேற்கு நாடுகள் தமது நாடுகளில் சிறப்பான உள்கட்டமைப்பு வசதிகள், வேலை வாய்ப்புக்கள், ஜனநாயகம், பல்கலாச்சாரம், தனிநபர் சுதந்திரம், மதச்சார்பின்மை, ஊடக சுதந்திரம் போன்ற விடயங்களில் முன்னுதாரணமாக இருக்கிறார்கள்.

மேற்கு நாட்டிற்கு புலம்பெயர்ந்தவர்கள் அங்கு உள்ள வளங்களை சுய முன்னேற்றத்திற்கும் தாயக மக்களின் அழிவுக்கும், குறுகிய அடையாளங்களைப் பேணுவதற்கும், பல்வேறு சுரண்டல்கள், துஸ்பிரயோகங்களுக்கு பயன்படுத்தினார்களே தவிர, இத்தகைய பன்முக வளங்களை தமிழ் சமூகத்தின் வளர்ச்சிக்கும், ஆக்கத்துக்கும் பங்களிக்க வேண்டிய புலம்பெயர் புலித் தமிழர்கள் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் அழிவுக்கே துணை புரிந்தார்கள்.

உதாரணமாக, கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் 3 லட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் தம் தலைமுறையையும் கடந்த பல சுய முன்னேற்றங்களுடன் தமிழ,; இனம் என்ற அடையாளங்களுடனேயே இணைக்கப்பட்டுள்ளார்கள். இந்த இணைவில் பல்கலாச்சார தேசத்தில் பன்முக வளர்ச்சிக்கு பதிலாக இனவாதமே மேலோங்கி காணப்படுகிறது.

இதில் உள்ள அபத்தம் என்னவென்றால், இங்குள்ள அரசியல் கட்சிகளான புதிய ஜனநாயகக் கட்சி, கொன்சவேட்டிக் கட்சிகளின் ஊடாக மத்திய, மாகாண, நகரசபை அரசியலில் தமிழர்கள் பல பதவிகளில் அங்கம் வகித்தாலும், அவர்கள் கனடிய, சர்வதேச விவகாரங்களை பேசுவதில்லை. பாமரத் தமிழனில் இருந்து படித்த தமிழன் வரை தமிழையும் தமிழ்த் தேசியத்தையும் இனவாதக் குறுகிய நோக்கங்களுடனேயே கையாண்டு வருகிறார்கள்.

இந்த வகையான பிற்போக்கான நிகழ்ச்சி நிரல்களுக்கு பெரும்பாலான தமிழ் ஊடகங்களும் துணை நிற்கின்றன. அத்துடன் இலக்கியவாதிகள், மெத்தப்படித்த அறிவுஜீவிகள் என அனைவருமே தமிழ்த் தேசிய இனவாதத்திலேயே தம்மை அடையாளப்படுத்துகிறார்கள்.
தொடரும்
நன்றி தேனீ
 

No comments: