ஓடியே வந்தது ஓய்வு நிலை - நவாலியூரான்


  .
   அன்னையின் வயிற்றில் பத்து மாதம்
   அடி உதை கொடுத்து ஆட்டிவைத்தோம்
   பாரினில் பிறந்தோம் பாலராக
   பலபெயர்கள் பெற்றோம் பலவிதமாய்
   ஆடி அடிவைத்தோம் அன்னை முன்பு
   ஆதங்கமாய் அணைத்தாள் அம்மை எம்மை
   நாடி ஓடினோம் தந்தையிடம்
   நல்லன புகட்டினான் நண்பனாக
   பாடிப்படிக்கவைத்தான் பள்ளியிலே
   பார்ப்பவர் புகழவைத்தான் பள்ளியிலே
   வேலை தேடினோம் வேண்டுமென்று
   வேலவன் வழங்கினான் வேலையதை
   வாழ்வுதனைத்தேடினோம் வாழ்வதற்கு
    வாரி அணைத்திட்டோம் வாழ்வதனை
   தேடியே வந்தன தேன்மொழிச்செல்வங்கள்
  தேற்றியேவைத்தோம் பல தேர்வுகளில்
 ஓடியே வந்தது ஓய்வு நிலை
 ஓய்வு எடுக்கின்றோம் உன்னதமாய்

No comments: