.
அவுஸ்ரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஒன்று கூடல் ஞாயிறு மாலை Carlingford இல் அமைந்திருக்கும் Don Moore Community Center ரில் சிறப்பாக நடைபெற்றது. தயாரிப்பாளர்கள் அறிவிப்பாளர்கள் தொழில் நுட்பவல்லுனர்கள் என்று ஒரு குடும்பமாக இணைந்து உணவோடு ஒன்று கூடி மகிழ்ந்தார்கள்.
வருடம் முழுவதும் மக்களுக்காக ஒலிபரப்புத்துறையில் தொண்டர் அடிப்படையில் செயலாற்றும் இவர்கள் குடும்பம்போலவே ஒன்றுகூடியதைக் காணக்கூடியதாக இருந்தது.
நிகழ்வை திரு.சிவசம்பு பிரபாகரன் தொடக்கிவைக்க தொடர்ந்து திரு ஈழலிங்கம் அவர்கள் சென்ற ஆண்டிற்கான வரவு செலவுகளை எல்லோருக்கும் விளக்கமாக சமர்ப்பித்தார்.
அதனைத்தொடர்ந்து பாடல் நாடகம் நடனம் பாட்டுக்குப்பாட்டு கரேயோக்கி பாடல்கள் என நிகழ்வுகளும் சுவையான உணவும் ஒன்று கலந்திருந்தது. இந் நிகழ்வில் தொண்டர்களும்' அவர்களின் குடும்பத்தினரும் கலந்துகொண்டார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
No comments:
Post a Comment